Announcement

Collapse
No announcement yet.

96 tharpana vivaram.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 96 tharpana vivaram.

    *19/0/2020*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம்முடைய முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான 96 தர்ப்பணங்களின் உடைய வரிசைகளை விரிவாகப் பார்த்த வகையில் ஒரே நாளில் இரண்டு மூன்று புண்ணிய காலங்கள் வந்தால் அதை எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம்.*


    *இந்த விஷயத்தில் அடிப்படையான சில தர்மசாஸ்திர விசயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த 96 தர்ப்பணங்களையும் மூன்று விதமாக பிரித்திருக்கிறார்கள்.*


    *அதாவது முதலில் நித்தியம் நைமித்திகம் காமியம் என்ற ஒரு பிரிவு. ஒரு வர்க்கத்தை உத்தேசித்து செய்யக்கூடிய தான தர்ப்பணம். இரண்டு வர்க்கங்களை உத்தேசித்து செய்யக்கூடியது ஆன தர்ப்பணம். மூன்று வர்க்கமாக பிரித்து செய்ய வேண்டியது தான தர்ப்பணம். நான்கு வர்க்கமாக பிரித்து செய்ய வேண்டியது தான தரப்படும் என்ற ஒரு பிரிவு இருக்கிறது.*


    *இந்தப் பிரிவுகளை அடிப்படையாக நன்றாக நாம் தெரிந்து கொண்டால் தான், இந்த புண்ணிய காலத்தில் தர்ப்பணத்தை தனித்தனியாகவோ அல்லது சேர்ந்து செய்யலாமா என்பதை பற்றி தெரிந்துகொள்ள முடியும்.*


    *ஓரளவு புரிந்து கொள்கின்ற வகையில் நாம் பார்ப்போம். இதன் உள் விஷயங்கள் நன்றாக நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நமக்கு செய்து வைக்கக் கூடிய வாத்தியார்கள் இடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அல்லது தர்ம சாஸ்திரம் படித்தவர்கள் இடம் கேட்டு நாம் தெரிந்து கொள்ளலாம்.*


    *அம்மாவாசை அடிப்படையாகக்கொண்டு புண்ணிய காலங்கள் இங்கு வந்தால் எப்படி செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்வோம். பொதுவாக சில புண்ணிய காலங்கள் சேர்ந்தே வராது. அமாவாசையும் திஸ்ரோஷ்டஹா புண்ணிய காலம் சேர்ந்து வராது.*
    *வய்தீயபாதமும் வைதிருதியும் சேர்ந்து வராது. மஹாளயமும் திஸ்ரோஷ்டஹா புண்ணிய காலம் சேர்ந்து வராது.*


    *ஆகையினால் இந்த புண்ணிய காலங்கள் பற்றிய நம் சந்தேகம் நமக்கு வராது. வரிசையாக நாம் பார்த்தால் நம் தயார் தகப்பனாருக்கு செய்ய வேண்டியது ஸ்ராத்தமும் அமாவாசை திதியும் சேர்ந்தால், அதாவது அமாவாசை அன்று தாயார் தகப்பனார் களுக்கு சிரார்த்தம் வந்தால், எந்த வரிசையில் செய்ய வேண்டும் என்றால் முதலில் வருடாந்திர சிராத்தத்தை செய்து கொள்ள வேண்டும். ஸ்ராத்தம் முடிந்த பிறகு அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும்.*


    *மறுநாள் காலை சிராத்தாங்க தர்ப்பணம் செய்ய வேண்டும். இதுதான் வரிசை. ஏனென்றால் வருடாந்திர சிராத்தம் என்பது ஒரே ஒரு வர்க்கத்தை மட்டும் குறித்து செய்ய வேண்டிய சிராத்தம். ஆனால் அமாவாசை தர்ப்பணம் இரண்டு வர்க்கத்தை குறித்து செய்ய வேண்டியது.*


    *அமாவாசையும் மாசப் பிறப்பும் சேர்ந்து வந்தால், மாசப் பிறப்பு தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டாம். அமாவாசையும் மஹாளயமும் சேர்ந்தால், இரண்டு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.*


    *முதலில் அமாவாஸ்யா புண்ய கால தர்ப்பணம், பிறகு மஹாளய புண்ணிய கால தர்ப்பணம். அப்படி இரண்டு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.*
    *அமாவாசையும் யுகாதி புண்ணிய காலமும் சேர்ந்தால், யுகாதி புண்ணிய காலம் தர்ப்பணத்தை மட்டும் செய்தால் போதும். அமாவாஸ்யா செய்ய வேண்டாம்.*


    *அமாவாசையும் மன்வாதி புண்ணிய காலம் சேர்ந்து வந்தால், மன்வாதி புண்ய காலம் மட்டும் செய்தால் போதும் அமாவாஸ்ய தனியாக செய்ய வேண்டாம்.*


    *அமாவாசையும் கிரகண புண்ணிய காலமும் ஒரே சமயத்தில் வந்தால், ஒரே சமயம் என்பதை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும், அதாவது காலையில் சூரிய உதயத்திலிருந்து ஆரம்பித்து மதியம் 3.30 மணி வரை உள்ள நேரத்தில் சூரிய கிரகண புண்ணிய காலம் வந்தால், அன்றைக்கு கிரகண புண்ணிய கால தர்பணம் மட்டும் செய்தால் போதும், அமாவாஸ்ய தர்ப்பணம் தனியாக வேண்டாம்.*
    *அமாவாசையும் வய்தீபாத புண்ணிய காலமும் சேர்ந்து வந்தால், இங்கே இரண்டு விதமாக நம்முடைய தர்மசாஸ்திரம் காண்பிக்கின்றது. இந்த இரண்டையும் தனித் தனியாகவும் செய்யலாம், அல்லது அமாவாசை தர்பணம் மட்டும் செய்தால் போதும் வய்தீயபாத புண்ணிய கால தர்ப்பணம் செய்ய வேண்டாம்.*


    *அமாவாசையும் வைதிருதி புண்ணிய காலமும் சேர்ந்து வந்தால், இரண்டையும் தனித்தனியாக செய்யலாம் அல்லது அமாவாசை புண்ணிய காலம் மட்டும் செய்தால் போதும் வைதிருதி செய்ய வேண்டாம்.*
    *இந்த வரிசையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அடிப்படையாக ஓரளவு நாம் புரிந்து கொள்வதற்காக இதை பார்த்துள்ளோம். இன்னும் சில புண்ணிய காலங்கள் எல்லாம் சேர்ந்து வரும் அவ்வப்பொழுது, நமக்கு செய்து வைக்கக்கூடிய வாத்தியார்கள் இடம் கேட்டு அதை தீர்மானம் செய்ய வேண்டும்.*


    *இதிலே சில கேள்விகள் நமக்கு வரலாம். உதாரணத்திற்கு அமாவாசையும் மாதப் பிறப்பும் சேர்ந்தால், மாதப்பிறப்பு தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும் என்று பார்த்தோம். நான் ஷண்ணவதி தர்ப்பணம் செய்வது இல்லை அமாவாசை தர்ப்பணம் மட்டும்தான் செய்துகொண்டு வருகிறேன், அப்படி இருக்கிற சமயங்களில் அமாவாசை மட்டும் செய்தால் போதுமா? என்ற ஒரு கேள்வி வரும்.*


    *இந்தக் கேள்விக்கு என்ன பதில் என்றால், 96 ஷண்ணவதி தர்ப்பணங்களையும் ஒவ்வொருவரும் செய்துதான் ஆகவேண்டும். அதைச் செய்கிறோம் அல்லது செய்யவில்லை என்பதை நம்முடைய சௌகரியப்படி நாம் வைத்துக் கொண்டு இருக்கின்றோமே தவிர, தர்ம சாஸ்திரப்படி இரண்டு புண்ணிய காலங்களையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.*


    *ஆகையினால் அமாவாசை தர்ப்பணம் மட்டும்தான் நான் செய்து கொண்டு வருகிறேன் என்று சொல்கின்ற அவர்கள்கூட, அன்றைக்கு மாதப்பிறப்பு தர்ப்பணம் தான் செய்ய வேண்டும். அமாவாசையை செய்யக்கூடாது. ஏனென்றால் அமாவாசையா என்பது நித்தியம் என்கின்ற ஒரு வரிசையில் வருகின்றது. மாதப் பிறப்பு என்பது நைமித்திகம் என்கின்ற வரிசையில் வருகிறது. நித்தியமும் நைமித்திகம் சேர்ந்தால் நைமித்திகம் மட்டும் செய்தால் போதும் என்று தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது*


    *இவைகளுக்கெல்லாம் ஆதாரம் நமக்கு தர்மசாஸ்திரம் தான். என்ன ஒரு சொம்பு ஜலமும், எள் இவைகள் தானே என்று நாம் அலட்சியமாக நினைக்க கூடாது. எப்பொழுது தர்மசாஸ்திரம் இரண்டு புண்ணிய காலங்கள் சேர்ந்து வந்தால் ஒன்று மட்டும் செய்தால் போதும் என்று காண்பிக்கின்றதோ, அந்த ரிஷியின் உடைய வாக்கியம் தான் நமக்கு ஆதாரம். இரண்டும் செய்கிறேன் என்று செய்தால் அது செய்யாததாக கணக்கில் வரும்.*


    *அதனால் இரண்டையும் தனித்தனியாக செய்தால் இரண்டுமே செய்யாததாக கணக்கில் வரும். இதை மனதில் வைத்துக்கொண்டு அமாவாசையும் மாதப் பிறப்பும் சேர்ந்து வந்தால், மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்தால் போதும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.*


    *இதில் இன்னும் ஒரு கேள்வி நமக்கு வரலாம் அதாவது இரண்டு புண்ணிய காலங்களின் பெயரையும் சொல்லி ஒரே தர்ப்பணத்தை செய்து விட்டால் என்ன? அதற்கு ஸமான தந்திரம் என்று சாஸ்திரங்களில் பெயர். தர்ஸ ஸ்ராத்தம் சங்கர மன சிராத்தஞ்ச ஸமான தந்திரேந கரிஷ்யே என்று சொல்லி விட்டால் என்ன? இரண்டுமே செய்ததாக ஆகி விடுமே என்ற ஒரு எண்ணம் நமக்கு வரும். இந்த விஷயத்தில் முக்கியமாக ஒன்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும் ஸமான தந்திரம் என்றால் என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X