Announcement

Collapse
No announcement yet.

96 tharpana vivaram.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 96 tharpana vivaram.

    20/10/2020*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய 96 ஷண்ணவதி தர்ப்பணங்கள் சில சமயம் ஒரே நாளில் 2 அல்லது 3 புண்ணிய கால தர்ப்பணங்கள் சேர்ந்தாற்போல் வந்தால் அவைகளை தனித்தனியாக செய்வதா அல்லது சேர்த்து செய்வதா என்பதைப்பற்றிய விவரங்களை மேலும் தொடர்கிறார்.*


    *ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று தர்ப்பணங்கள் வந்தால் அந்த தருணங்களில் மந்திரங்களை இரண்டுக்கும் சேர்த்து சொல்லி செய்யலாமா என்பதை தர்மசாஸ்திரம் ஏற்றுக்கொள்ளவில்லை நாம் செய்யக்கூடாது.*


    *அப்படி செய்வதற்கு சமான தந்திரம் என்று பெயர். ஒரே நாளில் இரண்டு மூன்று தர்ப்பணங்கள் அல்லது பூஜைகள் அல்லது ஜப ஹோமங்கள் வந்தாலும் சரி அவை அனைத்திற்குமான மந்திரங்களைச் சொல்லி ஒன்றாக செய்தால் அதற்கு சாஸ்திரங்களில் சமான தந்திரம் என்று சொல்லியிருக்கிறார்கள்.*
    *இந்த சமான தந்திரம் எங்கு சொல்லப்பட்டு இருக்கிறதோ அங்கு எடுத்துக் கொள்ளலாமே தவிர இந்த தர்ப்பணங்கள் அது சொல்லப்படவே இல்லை. சிராத்தங்களில் சமான தந்திரம் எங்குமே சொல்லப்படவில்லை.*


    *இப்போது உதாரணத்திற்கு, தாயார் தகப்பனார் ஸ்ராத்தம் இரண்டும் ஒரே நாளில் வந்தால், இரண்டையும் சேர்த்து ஒரே நாளில் செய்யலாம் என்றால் கூடாது. முதலில் தகப்பனார் உடையது செய்ய வேண்டும் பிறகு தாயாருடைய ஸ்ராத்தம் செய்ய வேண்டும் தனித்தனியாக தான் செய்ய வேண்டும்.*
    *இந்த சமான தந்திரம் என்பது ஸ்ராத்தங்களிளோ தர்ப்பணங்களிளோ அல்லது அபர காரியங்களிளோ பொருந்தாது.*


    *ஆனால் சில இடங்களில் இந்த சமான தந்திரம் சொல்லப்பட்டுள்ளது. எங்கே என்றால், கல்யாணத்திற்கு முதல் நாள் விரதம் என்று ஒன்று நாம் செய்வோம் அதை எல்லோரும் பார்த்திருக்கலாம். அதற்கு விரத க்ஷதுஷ்டையம் என்று பெயர். நான்கு விரதங்களையும் தனித்தனியாக செய்ய வேண்டும். இதை தனித்தனியாக செய்ய முடியாவிட்டால் சேர்த்தும் செய்யலாம் என்று நம்முடைய சாஸ்திரங்களில் காண்பித்திருக்கிறார்கள்*
    *இந்த நான்கு விரதங்களையும் சேர்த்து செய்வதற்குப் பெயர்தான் சமான தந்திரம் என்று பெயர். அங்கு சங்கல்பத்திலேயே வாத்தியார் சொல்வதை நாம் கேட்கலாம். சமான தந்திரேன சரிஷ்யே என்று சங்கல்பத்தில் வாத்தியார் சொல்வார்.*


    *அங்கும் நாம் தெரிந்து கொள்ளக் கூடிய விஷயம் என்னவென்றால் 4 விரதங்களையும் ஒன்றாக சேர்த்து செய்தாலும் கூட அங்கு பிரதான ஹோமங்கள்/உபஸ்தானங்கள் அவைகள் எல்லாம் தனித்தனியாக தான் செய்ய வேண்டும்.*
    *அதற்கு அங்கமாக உள்ளது எல்லாம் சேர்த்து செய்யலாம். நாந்தி/புண்ணியாகவாசனம்/சங்கல்பம்/கிரக பிரீத்தி ஒன்று தான். இவர்களெல்லாம் ஒரு தடவை செய்தால் போதும். ஆனால் அந்த ஹோமங்களை பிரதானமாக செய்யும்போது தனித்தனியாகத்தான் செய்ய வேண்டும்.*
    *அதேபோல பெண் குழந்தைகளுக்கு*
    *ஜாதகாதி என்று கல்யாணத்திற்கு முதல் நாள் நடக்கும். அதாவது ஜாத கர்மா நாமகரணம் அன்னப்ராசனம் அனைத்தும் கல்யாணத்திற்கு முதல் நாள் இன்றைய காலங்களில் நடக்கின்றது. அந்தந்த காலங்களில் செய்யாவிடில் சேர்த்து செய்யலாம். இதற்கு தான் சமான தந்திரம் என்று பெயர்.*


    *அங்கேயும் சங்கல்பம் கிரகப் பிரீதி நாந்தி புண்ணியாகவாசனம் இவைகள் ஒரு தடவை செய்தால் போதுமே தவிர, பிரதானங்களை தனித்தனியாகத்தான் செய்ய வேண்டும். ஜாதகர்மா நாமகரணம் அன்னப்ராசனம் இவைகளை தனித்தனியாக செய்ய வேண்டும்.*


    *இந்த விஷயங்கள் அங்கெல்லாம் பொருந்துமே தவிர, தர்ப்பணங்களில் அது பொருந்தாது. இப்பொழுது அமாவாசையும் மாதப் பிறப்பும் சேர்ந்து இருக்கிறது அந்த சமயத்தில் தர்ஸ சிராத்தம் சங்கரமன சிராத்தம் சமான தந்தரேன கரிஷ்யே என்று சொன்னால், இங்கு நாம் எப்படி செய்ய வேண்டும் என்றால் சங்கல்பம் ஒரு தடவை செய்தால் போதும், தர்பை மற்றும் கூர்ச்சம் இதில் ஆவாகனம் ஒரு தடவை செய்தால் போதும், ஆனால் பிரதானமாக, செய்யவேண்டிய தர்ப்பணத்தை இரண்டுமுறை செய்ய வேண்டிவரும். ஒரு தடவை முடித்து திரும்பவும் அதே பித்ருக்களை உத்தேசித்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.*


    *கடைசியிலே யதாஸ்தானம் ஒரு தடவை செய்தால் போதும் என்று பிரயோகம் வரும். ஆனால் அப்படி தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை. ஆகையினால், இரண்டு தரர்ப்பணங்களையும் சொல்லி ஒரே புண்ணிய காலமாக செய்யக்கூடாது. அப்படி செய்தால் செய்யவில்லை என்ற வழியில் தான் வரும்.*


    *ரிஷிகளின் உடைய வாக்கியங்கள் இல்லாமல் நாம் ஒன்று செய்தால், அதற்குத்தான் அன்னியதா கிருதம் என்று பெயர். ரிஷிகள் என்னுடைய வாக்கியங்கள் இல்லாமல் நாம் செய்கிறோம் என்று அர்த்தம்.*


    *அப்படி செய்தால் அது செய்யாதது தான் கணக்கு வரும். அதனால் எங்கு தனித்தனியாக செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறதோ அங்கு தனித்தனியாக தான் செய்ய வேண்டும். எங்கே ஒரு தர்ப்பணம் போதும் என்று சொல்லப்பட்டு இருக்கிறதோ அங்கு ஒன்றே தான் செய்ய வேண்டும்.*


    *இரண்டு புண்ணிய காலங்களை சொல்லிக் கொள்ளலாமே தவிர இரண்டு ஸ்ராத்தங்களை ஒன்றாக சொல்லக்கூடாது. அதாவது இன்று அம்மாவாசை மற்றும் மாதப்பிறப்பு சேர்ந்து இருக்கிறது என்றால் சங்கல்பத்தில் அமாவாசயே புண்ணிய காலே சங்கரமன புண்ணிய காலே சங்கர மன ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேன கரிஷ்யே என்று சங்கல்பத்தில் சொல்லிக்கொள்ளலாம்.*


    *அமாவாஸ்யா புண்ணிய காலே தர்ஸ சிராத்தம் சங்கர மன புண்ணிய காலே சங்கரமன சிராத்தஞ்ச ஸமான தந்திரேந கரிஷ்யே என்று சொல்லக்கூடாது.*


    *அப்படி சொன்னால் தர்ப்பணத்தை இரண்டு தடவை செய்ய வேண்டிவரும், அப்படி நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை. புண்ணிய காலத்தை இரண்டையும் சொல்லிக்கொண்டு, சிராத்தம் என்கின்ற இடத்தில் ஒரே ஒரு சிராத்தத்தை சொல்லி, தர்ப்பணத்தை செய்யவேண்டும். இதுதான் அடிப்படையான விஷயம்.*


    *இதைப் பற்றி மேலும் விவரங்கள் தெரிய வேண்டுமானால் தர்ம சாஸ்திரம் படித்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ரொம்ப விஷயங்களை இதிலே நாம் ஆராய்ச்சி செய்து பார்த்தால், நமக்கு ரொம்ப குழப்பங்கள் வந்து விடும்.*


    *எதைச் சொல்வது எதை விடுவது என்று குழம்பி போய் விடுவோம். ஆகையினாலே சில விஷயங்களை அவ்வப்போது தான் தெரிந்து கொள்ள வேண்டும்.*
    *அதனால் செய்து வைக்கக்கூடிய வாத்தியார்கள் இடத்திலோ, தர்மசாஸ்திரம் படித்தவர்கள் இடத்திலேயே புண்ணிய காலங்கள் சேரும்பொழுது, ஒரு மாதம் முன்னரே, அவர்களிடத்தில் கேட்டு நாம் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.*


    *ஆனால் இந்த நாட்களில் இவைகள் எல்லாம் சேர்த்து ஒரு லிஸ்ட் ஆகவே போட்டுக் கொடுக்கிறார்கள் நிறைய பேர். அதை நாம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். திருக்கணிதம் அல்லது வாக்கிய பஞ்சாங்கப்படி, தனித்தனியாக பரி சிரமப்பட்டு நிறைய பேர் அதை முன்னரே நமக்கு வரிசைப்படுத்திக் கொடுக்கிறார்கள். அதை நாம் வருஷம் பிறந்த உடனேயே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.*


    *அதில் எப்படி சொல்ல பட்டு இருக்கின்றதோ அது படி நாம் செய்ய வேண்டும். ஆனால் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் இரண்டில் இதை மட்டும் செய்கிறோம் என்று நாம் தெரிந்து கொள்வதற்காக இந்த விஷயங்களை பார்க்கிறோமே தவிர, அவ்வப்போது தெரிந்தவர்கள் இடத்திலே கேட்டு கொள்ள வேண்டும்.*


    *இந்த விஷயங்களில் எப்படி செய்தால் என்ன என்ற எண்ணங்கள் நமக்கு இருக்க கூடாது வரக்கூடாது. அந்த எண்ணத்தோடு செய்தால் அதற்கான பலன்கள் இல்லாமல் போய்விடும். அதனால் இந்த புண்ணிய காலங்கள் அப்போ போது எப்படி சேர்கிறது என்பதை தெரிந்தவர்களைக் கொண்டு, நாம் இதை தெரிந்து கொள்ள வேண்டும். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X