Announcement

Collapse
No announcement yet.

96 tharpana vivaram.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 96 tharpana vivaram.

    02/11/2020*

    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய ஷண்ணவதி தர்ப்பணங்களில் சிலவற்றை விட்டு விட்டால் அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதைப் பற்றி மேலும் தொடர்கிறார்.*



    *இந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் நிறைய பரிகாரங்களையும் செய்து கொண்டிருக்கிறோம் செய்தோம் இன்னும் செய்ய இருக்கிறோம். இவற்றிற்கான பலன்கள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால், பல தவறான புரிதல்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன. எதையும் கடைசி வரையிலும் முழுமையாகத் தெரிந்து கொள்வது என்பது குறைந்துவிட்டது.*



    *அதை நாம் அவசியம் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் முக்கியமாக நம்முடைய வேதம், தர்ம சாஸ்திரம், புராணங்கள் காட்டக்கூடிய தான பிராயச்சித்தங்கள். இதை நாம் சரியாக புரிந்து கொள்ளாத அதனால்தான் குழந்தைகளுக்கு எவ்வளவோ பரிகாரங்கள் செய்தும் கல்யாணமே வரன் அமையவில்லை என்று வருத்தமாகவும் கோபமாகவும் சொல்வதை நாம் பார்க்க முடிகிறது.*



    *பரிகாரங்கள் நிறைய செய்துவிட்டோம் பெண் வர வேண்டியது தான் பாக்கி என்று சொல்கிறோம். அதேபோல ஸ்தலங்களுக்கு நிறைய போகிறோம். வியாதிகள் குறைப்பதற்காக ஆங்காங்கே சென்று நிறைய பரிகாரங்களை நாம் செய்கிறோம். ஆனால் வியாதிகள் குறையவில்லை போய்வந்த செலவுதான் அதிகமாக உள்ளது.*



    *இப்படியெல்லாம் குறைபட்டு பேசக்கூடியவர்களை நாம் நிறைய பார்க்க முடிகிறது. ஏன் அவர்களுக்கு நடக்கவில்லை என்றால் அதிலுள்ள தத்துவத்தை நாம் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். இது விஷயமாக பரிகாரங்கள் என்று தனியாக உள்ளது அதை பார்ப்போம்.*

    *இப்பொழுது இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களில் சில தர்ப்பணங்களை நாம் விட்டுவிட்டால், அதற்கு என்ன பிராயச்சித்தம் அதாவது பரிகாரங்கள். இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களும் நித்தியம் என்பதை முதலில் நாம் பார்த்தோம். அதாவது கட்டாயம் செய்துதான் ஆகவேண்டும்.*

    *ஏனென்றால் இவைகள் எல்லாம் நித்திய கர்மா என்று பெயர். எப்படி நாம் தினமும் குளிக்கின்றோமோ / போஜனம் செய்கின்றோமோ அதேபோல் தான் இந்த தர்ப்பணங்கள். கட்டாயம் செய்ய வேண்டும் தவறவிடக் கூடாது. சில காரணங்களினால் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும்.*

    *அதாவது தீட்டு வந்துவிட்டால் சில புண்ணிய காலங்கள் செய்ய முடியாத நிலை ஏற்படும். இது மட்டுமல்ல பல காரியங்கள் விட்டுப் போகும். இந்தப் புண்ணிய கர்மா இல்லாமல் சிவபூஜை வைஸ்யதேவம் ஹௌபாசனம் இப்படி நிறைய கர்மாக்களை நாம் செய்ய முடியாது இந்த தீட்டு காலங்களில் 10 நாள் தீட்டு வந்துவிட்டது என்றால். இதற்கெல்லாம் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கின்றன.

    இது விஷயமாக மகரிஷிகள் சொல்கின்ற பொழுது, வேதத்தில் நித்தியமாக நமக்கு காண்பிக்கப்பட்டிருக்கிறது, கட்டாயம் தினமும் செய்யவேண்டும் விடக்கூடாது, என்று சொல்லப்பட்ட கர்மாக்களை தவறாக செய்தாலும், காலம் தவறு செய்தாலும், செய்யாமலேயே விட்டு விட்டாலும், அதற்கு முதல் பிராயச்சித்தம் என்னவென்றால் அபோஜனம் அதாவது உபவாசம் இருத்தல்.*



    *காரணம் என்ன என்றால் நம்முடைய புத்தி சரியான முறையில் அங்கு வேலை செய்யவில்லை. நம்முடைய எண்ணம் சரியான முறையில் அங்கு வேலை செய்யவில்லை. அந்த காரியத்தை நன்றாகத் தெரிந்துகொண்டு செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் நமக்கு வரவில்லை. விட்டு விட்டோம் என்றால் அது திரும்பவும் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் நமக்கு வரவில்லை.*



    *அப்படிப்பட்ட நல்ல எண்ணங்களை கொடுப்பது எது என்றால் நாம் சாப்பிடக்கூடிய ஆகாரங்கள் தான் அதை கொடுக்கின்றது. மனோபலத்தையும் புத்தி சக்தியையும் நமக்கு எது கொடுப்பது என்றால் நாம் சாப்பிடக்கூடிய அன்னம் தான்.*



    *அந்த உணவை சரியான முறையில் நாம் சாப்பிடவில்லை என்றால் நம்முடைய புத்தி சரியாக வேலை செய்யாது. நல்ல எண்ணங்கள் உருவாகாது. ஆகையினாலே தான் ஆகார விஷயங்களில் நிறைய கட்டுப்பாடுகளை தர்மசாஸ்திரம் நமக்கு சொல்லி இருக்கிறது.*

    *இப்படித்தான் சாப்பிடவேண்டும், இப்படி உட்கார்ந்து கொண்டு தான் சாப்பிட வேண்டும், இன்ன வஸ்துக்களை தான் சாப்பிட வேண்டும், இந்த அளவில் தான் சாப்பிட வேண்டும் அப்படி எல்லாம் தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*



    *இந்த நாட்களில் உணவு படிப்பு அனைத்துமே சுதந்திரமாக போய்விட்டது. சாப்பிடுகின்ற விஷயத்திலே என்ன கட்டுப்பாடு என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் நாம் சாப்பிடக்கூடிய சாப்பாடு சரியான முறையில் இல்லாவிடில் நம்முடைய புத்தி கெட்டுப் போய்விடும்.*

    *மனது கெட்டுப்போய்விடும் பிராண சக்தி குறைந்து போய்விடும். நாம் உயிரோடு இருந்தும் நடைப்பிணம் ஆகவே இருக்க வேண்டிய நிலைமை வரும் நம்முடைய ஆதாரங்களில் நமக்குக் கட்டுப்பாடு இல்லாத பொழுது.*



    *ஆகையினாலே தான் நிறைய முறைகளை சாப்பிடுகின்ற விஷயத்திலே காண்பிக்கப்பட்டிருக்கிறது. இப்படித்தான் இந்த முறையில் தான் இன்ன வஸ்துக்களை தான் சாப்பிட வேண்டும் என்று சொன்னதற்கு இதான் காரணம். அடிப்படையாக முதலில் இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.*



    *அதுதான் ஒருவன் ஒரு தவறு செய்கிறான் என்றால், அவன் சாப்பிட்ட ஆகாரத்தை வைத்து அதை கணக்கு செய்துகொள்ளலாம். அதாவது நம்முடைய ஒரு நோய்க்காக ஒரு மருத்துவரிடம் செல்கிறோம், உடனே மருத்துவர் முதலில் கேட்பது என்ன நீ என்ன சாப்பிட்டாய் இன்றைக்கு? ஏன் நாம் சாப்பிடக்கூடிய உணவில்தான் அனைத்துமே இருக்கிறது.*



    *ஒரு ஜுரம் வந்தது என்று நாம் மருத்துவரிடம் போனாலும் கூட அவர் நீ எந்த தண்ணீரில் குளித்தாய் எந்த தண்ணியை நீ குடித்தாய் என்று கேட்க மாட்டார், என்ன நீ சாப்பிட்டாய் என்றுதான் கேட்பார். அந்த உணவுதான் அடிப்படை யாக முக்கியமான சக்திகளை நமக்கு கொடுக்கிறது.*



    *புத்தி சக்தி மனோபலம் பிராண சக்தி, இந்த மூன்றையும் நமக்கு அளிக்கக்கூடியது நாம் சாப்பிடக்கூடிய தான உணவு. ஆகையினாலே தான் தர்மசாஸ்திரம் நமக்கு முதல் பிராயச்சித்தமாக அபோஜனம் அதாவது உபவாசம் இருத்தல் வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.*



    *பித்ரு கர்மாக்கள் எல்லாம் ஆரம்பிக்கின்ற பொழுது முதலில் நாம் எதுவுமே சாப்பிடாமல் தான் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் வாத்தியார் இடத்தில் நாம் என்ன சொல்கிறோம் என்றால் என்ன வேண்டுமானாலும் நான் செய்கிறேன் ஆனால் சாப்பாட்டில் மட்டும் கையை வைத்து விடாதீர்கள் என்று தான் சொல்வோம். எனக்கு அவ்வப்பொழுது ஒரு மணிக்கு ஒரு முறை காபி மட்டும் குடிக்கிறேன்.*



    *ஆனால் நாம் சாப்பிடக்கூடிய ஆகாரம் வேறு மாதிரியாக இருந்தால், நமக்கு புத்தி சரியாக வேலை செய்யாது, மனது அந்த காரியங்களில் ஈடுபடாது, பிராண சக்தி நம்மிடம் இருக்காது. இதை கருத்தில் கொண்டு தான் உபவாசம் நம்முடைய எல்லா கர்மாக்களையும் முதலில் ஆரம்பிக்கின்றது. பிதுர் கர்மாக்களை செய்யும்பொழுது அப்படித்தான் இருக்க வேண்டும்.

    உபவாசம் நாம் இருக்கும் போது நம்முடைய புத்தியானது பலவிதமான ஆற்றல்களை சக்திகளை வெளிப்படுத்தும். பசியோடு இருப்பவனுக்கு மூளை மிக வேகமாக வேலை செய்யும். மனசு மிகுந்த தெளிவுடன் இருக்கும். பிராண சக்தி மிகவும் அதிகமாக இருக்கும். அது எப்படி சாப்பிடாமல் இருந்தால் மயக்கம் தானே வரும், அதற்கான காரணம் நாம் அப்படி பழக்கப்பட்டு விட்டோம்.

    ஏதோ ஒன்றை அடிக்கடி வாயில் போட்டு அரைத்துக் கொண்டு இருப்பதினால் தான் அப்படிப்பட்ட ஒரு எண்ணம் நமக்கு வருகிறது. அதனால் தான் அபோஜனம் என்கின்ற உபவாசத்தை முதலில் தர்மசாஸ்திரம் பிராயச்சித்தமாக நமக்கு காண்பிக்கின்றது. மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*

Working...
X