26-11-2020 துளசி விவாஹம், ப்ருந்தாவன த்வாதசி.


சாந்திரமான கார்திக மாத சுக்ல பக்ஷ த்வாதசிக்கு ப்ருந்தாவன த்வாதஸி எனப்பெயர். இது ஸெளரமான ஐப்பசி அல்லது கார்த்திகை மாதத்தில் வரும்.


இன்று காலையில் ப்ருந்தாவனம் என்னும் துளசி செடியையும் மஹாவிஷ்ணுவையும் சேர்த்து பூஜிக்க வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
துளசி செடி அருகில் விஷ்ணு படம் அல்லது விக்ரஹம் வைத்து பூஜிக்கலாம். நெல்லிக்காய் கிளையை ஒடித்து துளசி செடிக்கு பக்கத்தில் நட்டும் பூஜிக்கலாம். தம்பதிகளாகவும் பூஜிக்கலாம்.


லக்ஷிமி நாராயண ப்ரஸாத ஸித்தியர்த்தே மஹா விஷ்ணு துளசி பூஜாம் கரிஷ்யே என சங்கல்பித்துக் கொண்டு துளசீம் த்யாயாமி, ஶ்ரீ மஹா விஷ்ணூம் த்யாயாமி


என்று பூஜை செய்து துளசி அஷ்டோத்ரம், க்ருஷ்ணாஷ்டோத்ரம் அர்சித்து தூபம், தீபம், பால் நிவேதனம் செய்து இந்த ஸ்லோகம் சொல்லி துளசியை ப்ரார்த்தித்துக் கொள்ளலாம்


புஷ்பாஞ்சலிம் க்ருஹாணேமம் பங்கஜாக்ஷ.ஸ்ய வல்லபே நமஸ்தே தேவி துளசி நதாபீஷ்ட பல ப்ரதே ஆயுராரோக்கிய மதுலம் ஐஸ்வர்யம் புத்ர ஸம்பதஹ தேஹி மே ஸகலான் காமான் துளஸ்யம்ருத ஸம்பவே.


பிறகு கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு துளசி செடிக்கு முன்பு ஒரு கிண்ணத்தில் பாலால் அர்க்கியம் விடவும்.ஸ்லோகம் சொல்லிக் கொண்டே..


நமஸ்தே தேவி துளசி நமஸ்தே மோக்ஷதாயினி இதமர்க்கியம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதா வரதா பவ. துளஸ்யை நம: இதமர்க்கியம்.


லக்ஷிமிபதே நமஸ்துப்யம் துளசி மால பாரிணே இதமர்க்கியம் ப்ரதாஸ்யாமி
க்ருஹாண கருடத்வஜ ஶ்ரீ மஹா விஷ்ணவே நம: இதமர்க்கியம்.


ஸர்வ பாப ஹரே தேவி ஸர்வ மங்கள தாயினி. இதமர்க்கியம் ப்ரதாஸ்யாமி ப்ரஸன்னா பவ சோபனே துளஸ்யை நம: இதமர்க்கியம்.


நமஸ்தே தேவி துளசி மாதவேந ஸமன்விதா ப்ரயஸ்ச ஸகலான் காமான் த்வாதஸ்யாம் பூஜிதா மயா என்று சொல்லி ப்ரார்த்தித்துக் கொண்டு ஒரு வெங்கல பாத்ரத்தில் பாயஸம் வைத்து சிறிது தக்ஷிணையும் சேர்த்து


காம்ஸ்ய பாத்ர மிதம் ரம்யம் பாயஸேன ஸமன்விதம் ததாமி த்விஜ வர்யாய துளசி விஷ்ணு துஷ்டயே இதம் பாயஸம் காம்ஸ்ய பாத்ர ஸ்திதம் க்ஷீராப்தி நாத ப்ரீத்யர்த்தம் ஸம்ப்ரததே என்று சொல்லி யாராவது


ஒருவருக்கு அல்லது வாத்யாருக்கு பாத்ரத்துடன் பாயஸத்தை தானம் செய்து விட வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமையும் மங்களங்களும் ஏற்படும்.


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது கடலிலிருந்து கற்பக வ்ருக்ஷம், காமதேனு, ஐராவதம், உச்சைஸ்ரவஸ் , கெளஸ்துபம், மஹாலக்ஷிமி, சந்திரன், ஆல கால விஷம், அம்ருதம் எல்லாம் வந்தது


அம்ருத கலசத்திலிருந்து துளசி தோன்றினாள். . மஹா விஷ்ணு கெளஸ்துப மணியையும், மஹா லக்ஷிமியையும், துளசியையும் தான் எடுத்துக்கொண்டார்.


துளசியை பாதம் முதல் சிரஸ் வரை அணிந்து கொண்டார். ,. அந்த நாள் தான் துளசி விவாஹ திருநாள்.


துளசி செடியை பூஜை செய்து நமஸ்கரித்து கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்திக்கவும்..


ஸெளமங்கல்யம் தனைஸ்வர்யம் புத்ர பெளத்ராதி ஸம்பதம் துளஸ்யம்ருத ஸம்பூதே தேஹி மே பக்தவத்ஸல.. .


மஹா விஷ்ணு துளசியை புகழ்ந்து போற்றிய பிருந்தா பிருந்தாவனீ, விஸ்வபூஜிதா விஸ்வபாவநி, புஷ்பஸாரா, நந்தினி, துளசி க்ருஷ்ண ஜீவனீ ஏதன் நாமாஷ்டகஞ்சைவ ஸ்தோத்ரம் நாமார்த்தம் ஸம்யுதம் ய: படேத்
தாஞ்ச ஸம்பூஜ்ய ஸோஸ்வமேத பலம் லபேத். என்பதையும் சொல்லவும்.,


துளசி பூஜைக்கு ஆவாஹனம் தேவை இல்லை. துளசியின் ஜன்ம தினமான கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்றும் பூஜை துளசிக்கு செய்யலாம் என்கிறது. தேவி பாகவதம். ஒன்பதாவது ஸ்கந்தம் துளசி பூஜையில்.


பிருந்தை என்பது மரங்கள் நெருங்கி அடர்ந்திருப்பதை குறிக்கும். . துளசி ஓரிடத்தில் நெருங்கி அடர்ந்திருப்பதால் பிருந்தை என கூறுகிறார்கள்.
எவள் முற்காலத்தில் பிருந்தாவனந் தோறும் இருந்து பிருந்தாவனீ எனப்பெயர்


பெற்றாளோ ; எவள் அகில ப்ரபஞ்சத்தினால் பூஜிக்கப்பட்டு விஸ்வபூஜிதை என பெயர் பெற்றாளோ எவளால் எண்ணற்ற ப்ரபஞ்சமெல்லாம் பரிசுத்தமாகி விஸ்வபாவனீ என ப்பெயர் பெற்றாளோ ; மலர்களின் மீது ப்ரீதியுடைய


தேவர்களும் அவைகளால் ஆனந்தமடையாமல் உன்னாலேயே ஆனந்தமடைவதால் புஷ்பஸாரை என்றும்; பெயர் பெற்றாய். அடைந்ததுமே ஆனந்தத்தை அளிக்கும் தன்மையால் நந்தினி என்ற பெயர் பெற்றாய்;


க்ருஷ்ணன் உன்னால் உருக்கொண்டு வாழ்வதால் கிருஷ்ணஜீவனீ என்ற பெயர் பெற்றாய். துளசி ஸ்தோத்ரம் கண்ணுவ சாகையில் உள்ளது.