Announcement

Collapse
No announcement yet.

96 tharpana vivaram. contd.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 96 tharpana vivaram. contd.

    *13/12/2020*

    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஒவ்வொரு தர்மமாக நாம் விரிவாக பார்த்துக்கொண்டு வருகின்ற வரிசையில் அதனுடைய சொரூபம் என்ன தர்மம் என்ன யார் யாரெல்லாம் அந்த தர்மங்களை கடைபிடிக்க வேண்டும் அதனால் நமக்கு ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பதைப் பற்றி ஷண்ணவதி தர்ப்பணம் முறைகளை விரிவாக பார்த்து தெரிந்து கொண்டோம்.*



    *அதாவது ஷண்ணவதி தர்ப்பணம் என்றால் என்ன அது யாரை உத்தேசித்து செய்ய வேண்டும் யார் யாரெல்லாம் செய்ய வேண்டும். எந்த இடங்களில்/எந்த முறையில் இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களை செய்ய வேண்டும். இதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன? அதை முறையாக நம்மால் செய்ய முடியாவிடில் அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதையெல்லாம் விரிவாகப் பார்த்தோம்.*

    *இப்பொழுது அடுத்ததாக ஒரு முக்கியமான தர்மத்தை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இந்தக் கலியில் நமக்கு மிகவும் சுலபமாக பலனைக் கொடுக்கக் கூடிய ஒரு தர்மம்.*

    *இப்போது நாம் பார்க்கக்கூடிய இந்த தர்மம் மிகவும் முக்கியமானது இப்படி ஒரு அனுஷ்டானம் வேதத்தில் இருக்கிறது என்பதை இந்த தலைமுறை நினைத்து மஹாபெரியவா மூலம் தெரியவந்தது. அந்த ஹோமம் தான் ஆவஹந்தி ஹோமம் என்று பெயர்.*



    *இந்த ஆவஹந்தி ஹோமம் என்றால் என்ன இது எப்படி செய்ய வேண்டும் எங்கு சொல்லப்பட்டிருக்கிறது, அதில் சொல்லவேண்டிய மந்திரங்களின் பெருமைகள் என்ன. அதற்கு என்ன பலன் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.*



    *இந்த நாளில் மிகவும் சுலபமாக இந்த ஹோமத்தை செய்து அதனால் நமக்கு வேண்டிய எல்லா பலன்களையும் அடைய முடியும் என்பதை நமக்கு காண்பித்தவர் மகாபெரியவா தான்.*



    *இதற்கு முன்னர் அந்த ஹோமத்தின் உடைய பெருமை நமக்கு அவ்வளவாக தெரியவில்லை. இந்த நாட்களில் இந்த ஹோமத்தின் மூலம் சுலபமாக எல்லா பலன்களையும் அடைய முடியும் என்பதை என்பதை மகா பெரியவா காண்பித்திருக்கிறார். மிகவும் முக்கியமான ஹோமம்.*

    *இந்த ஆவஹந்தி ஹோமத்தின் உடைய சொரூபத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்னர் கொண்டு நாம் தெரிந்துகொள்ள வேண்டும் நம் வேதங்களில் உள்ள மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒரு தடவை நாம் முறையாக சொன்னால் அவைகள் நல்ல பலனை நமக்கு அளிக்கக் கூடியவை. நம்முடைய சந்தியாவந்தனம் முதற்கொண்டு சொல்லப்பட்ட மந்திரங்கள் அனைத்துமே ஷௌத அனுஷ்டானங்களில் சொல்லப் பட்டவைதான்.

    அதாவது அக்னி ஹோத்திரம் ஷ்டிகள் ஸோம யாகங்கள் செய்பவர்கள் அந்தக் கர்மாக்களில் உபயோகப்படுத்தக் கூடிய மந்திரங்கள் தான் வேதத்தில் உள்ள மந்திரங்களில் 99%. ஒரு சதவிகிதம்தான் அதிலேயே சொல்லப்படாத மந்திரங்கள்.*



    *இப்பொழுது சந்தியாவந்தனத்தில் நாம் எடுத்துக் கொண்டால் முதலில் நாம் சொல்வது ப்ரோக்ஷணம் மந்திரம். ஆபோ சிஷ்டா என்று மந்திரம். அனைத்து சூத்திர சந்தியாவந்தன களிலும் வரக்கூடிய மந்திரம் இது.*



    *ரிக் யஜுர் சாமம் அதர்வணம் சுக்ல யஜுர் வேதம் என்று எல்லாவற்றுக்கும் பொதுவான ப்ரோக்ஷண மந்திரம் இதுதான். ஆனால் இது எங்க சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் சோமயாகம் செய்யக்கூடிய எஜமானன்சில தீக்ஷ்சைகள் எடுத்துக் கொள்கிறார். அதாவது சில கட்டுப்பாடுகள் விரதங்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். பத்து விதமான கட்டுப்பாடுகளை அவர் அந்த இடத்திலேயே எடுத்துக் கொள்கிறார்.*



    *அந்த பத்து நியமங்களை எடுத்துக் கொண்ட பிறகு முதலில் வருவது வபனம் மற்றும் ஸ்னானம். ஸ்நானம் செய்த பிறகு முதலில் வரும் மந்திரம் இதுதான் ஆப்போ சிஷ்டா. அப்படிப்பட்ட அங்கு சொல்லக்கூடிய ஒரு மந்திரத்தை தான் மகரிஷிகள் நமக்கு சந்தியாவந்தனத்திலேயே அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.*



    *இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றால் அந்த மந்திரத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்வது. பத்தாக பிரித்துச் சொல்வது என்று இன்னொரு முறை. மூன்றாகப் பிரித்து சொல்வதினால் அந்த மந்திரத்தினுடைய பலன்களில் அர்த்தங்களில் வித்தியாசம் இருக்கிறது. அதேபோல் பத்தாக பிரித்து அந்த மந்திரத்தைச் சொல்லும் பொழுது அதிலிருந்து வரக்கூடிய பலன்கள் மற்றும் அர்த்தங்களில் வித்தியாசம் ஏற்படுகிறது.*

    *சந்தியாவந்தனத்தில் மகரிஷிகள் முதல் மந்திரமாக நமக்கு இதை வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் யாகத்தில் இது உபயோகப்படுத்தக்கூடிய மந்திரம். நாம் செய்யக்கூடிய கர்மாக்களில் பார்த்தால் க்ஷௌத அனுஷ்டானங்களில் உள்ள மந்திரமாக தான் அனேகமாக இருக்கும்.*
    *ஆனால் இந்த ஆவஹந்தி ஹோமத்தில் என்ன விசேஷம் என்றால், நிறைய விஷயங்கள் இருக்கிறது அதாவது, இந்த ஹோமம் செய்வதே தனி யாகத்தான் இருக்கும்.*

    *பொதுவாக நாம் எந்த ஒரு ஹோமத்தை ஆரம்பித்து செய்தாலும் முதலிலேயே சங்கல்பம் செய்து கொண்டு, ஒரு கலசத்தில் அல்லது பிரிதிமை அல்லது ஒரு மண்டலத்தில் தேவதைகளை ஆவாகனம் செய்து, ஒரு குறிப்பிட்ட அளவு ஜெபம் செய்து பிறகு ஹோமம் ஆரம்பித்து செய்து, பிறகு கடைசியில் புனர் பூஜை செய்து யதாஸ்தானம் செய்து அபிஷேகம் செய்து கொண்டு முடிப்பது என்று செய்வோம். இப்படித்தான் அனேகமாக எல்லாரும் ஹோமங்களின் முறைகளும் இருக்கும். ஆனால் இந்த ஆவஹந்தி ஹோமம் எப்படி என்றால் அதிலும் விசேஷம் இருக்கிறது.*



    *இந்த ஆவஹந்தி ஹோமம் செய்ய வேண்டிய முறைகளிலும் மந்திரங்களிலும் வித்தியாசம் இருக்கிறது. அந்த மந்திரங்கள் உன்னுடைய பலன்களிலும் வித்தியாசம் இருக்கிறது. அதைத்தான் நாம் விரிவாகப் பார்க்கப் போகிறோம். ஆவஹந்தி ஹோமம் செய்யும் முறையை பார்ப்பதற்கு முன்னர் வேதத்திலிருந்து, மந்திரங்களை நம்முடைய சாஸ்திரங்கள் அனேக விதமாக பிரித்து காண்பிக்கிறது. சில மந்திரங்கள் ஜெபத்திற்கு மட்டும் சொல்ல வேண்டியவைகள்.

    சில மந்திரங்கள் ஒரு வஸ்துவை யோ அல்லது ஒரு தெய்வத்தையும் பார்த்து சொல்ல கூடியவைகள். சில மந்திரங்கள் காரியங்கள் செய்யும்போது சொல்லக்கூடிய மந்திரங்கள். சில மந்திரங்கள் ஹோமத்திற்கு மட்டும் சொல்லக் கூடியவைகள். இப்படி அநேக விதமாக நம்முடைய சாஸ்திரங்கள் மந்திரங்களைப் பிரித்து காண்பிக்கின்றன.*


    *இந்த வழியிலே ஆவஹந்தி ஹோமம் ஆனது மந்திரங்களை வேதத்திலிருந்து எப்படி சொல்லப்பட்டிருக்கிறது அதை எப்படி உபயோகித்து இந்த ஹோமத்தை செய்ய வேண்டும் என்பதை அடுத்த அடுத்த உபன்யாசங்களில் பார்ப்போம்.*
Working...
X