Announcement

Collapse
No announcement yet.

aavahanthi homam.-2.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • aavahanthi homam.-2.

    22/12/2020*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமத்தின் பெருமைகளை மேலும் தொடர்கிறார்.*


    *ஆவஹந்தி ஹோமம் என்பது மந்திர சாஸ்திரத்தில் ஒரு முறையாகவும், வைதிக முறையில் ஒரு முறையாகவும் பார்க்கிறோம். மந்திர சாஸ்திரத்தில் அதை பார்க்கும்பொழுது நாம் தினமும் செய்யக்கூடிய ஒரு அனுஷ்டானம் ஆன வைஸ்வ தேவத்தில், கடைசியில் இந்த ஆவஹந்தி ஹோமத்தை சேர்த்து செய்ய வேண்டும் என்று மந்திர சாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.*


    *அதாவது நாம் சமையல் செய்யும் பொழுது, 5 விதமான தோஷங்கள் ஏற்படுகின்றன. அது போவதற்காக செய்யக்கூடிய தான் இந்த வைஸ்வ தேவம் என்பது.*


    *கண்டினி என்றால் காய்கறி பழங்களை நறுக்குவது. அவைகள் பூமியில் போட்டால் நன்றாக முளைத்து வரக்கூடிய சக்திவாய்ந்தவை. அப்படி இருக்கக் கூடியதை நாம் இருக்கின்றோம். அது ஒருவிதமான ஹிம்சை. அந்தப் பாபம் போவதற்காகவும், பேஷினி அதாவது இடிப்பது அரைப்பது தானியங்களை. அந்த தானியங்களில் ஜீவராசிகள் இருக்கின்றன. அதை நாம் இம்சை செய்கின்றோம். அந்தப் பாபம் போவதற்காக.*


    *சுள்ளி எரிபொருளாக நிறைய வஸ்துக்களை நாம் உபயோகம் செய்கின்றோம். அவைகள் எரிகின்ற போது அதிலே பூச்சிகள் வந்து விடும். அது ஒருவகையான பாவம். ஜலகும்பஹாக தண்ணீரை எடுத்துக் கொண்டு வருகிறோம். அதை சூடு செய்து உபயோகம் செய்கிறோம். அதிலே நல்லவைகள் செய்யக்கூடிய தான பாக்டீரியாக்கள் இருக்கின்றன. அந்த ஜீவராசிகளை நாம் அழிக்கின்றோம்.

    அதேபோல புடைத்தல் சலித்தல் இதுபோன்ற காரியங்களில் நாம் சில இம்சைகள் செய்கிறோம். இந்த ஐந்து விதமான இம்சைகள் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய பாவங்கள் போவதற்காக தான், இந்த வைஸ்வதேவம் என்கின்ற இந்த அனுஷ்டானம் நாம் தினமும் செய்ய வேண்டும் என்று மகரிஷிகள் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.*


    *அந்த வைஸ்வதேவ அனுஷ்டானம் செய்கின்ற பொழுது, இந்த ஆவஹந்தி ஹோமத்தை சேர்த்து செய்ய வேண்டும். வைஸ்வதேவம் என்பது மூன்று பாகமாக இருக்கிறது.*


    *முதலில் தன்னை சுத்தி செய்து கொள்வதற்காக செய்ய வேண்டிய விஷயம். இரண்டாவது தேவதைகளை உத்தேசித்து அக்னியில் செய்யக்கூடிய ஆகுதிகள். மூன்றாவது பல ஜீவராசிகளை உத்தேசித்து செய்யக்கூடியது ஆன பலி. இப்படி மூன்று பாகமாக இருக்கின்றது வைஸ்வதேவம்.*


    *இந்த மூன்றையும் செய்து முடித்த பிறகு, வைஸ்வதேவ அனுஷ்டானம் செய்து முடிப்பதற்கு முன்னால், இந்த ஆவஹந்தி ஹோமத்தை செய்து கொள்ள வேண்டும் நியாசம் செய்துகொண்டு . அந்த மந்திரத்தில் சொல்லப்படக்கூடிய தான தேவதைகளை, நம்முள் ஆவாகனம் செய்து கொள்வது இதற்குத்தான் நியாசம் என்று பெயர். ஜபம் செய்து அந்த மந்திரங்களை சொல்லி ஹோமம்/தர்ப்பணம்/உபஸ்தானம் செய்வது என்கின்ற முறையிலே வகுத்து கொடுத்திருக்கிறார்கள் நைமித்தியமாக ஸ்ரீ வித்தையில் சொல்லப்பட்டிருக்கிறது.*


    *இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், அவரவர்கள் தனக்காக இதை செய்து கொள்ளலாம். மற்றவருக்காக மற்றவர் வைஸ்வதேவம் செய்ய முடியாது. செய்ய கூடாது. வைஸ்வதேவம் என்பது கிரகஸ்தன் தான் செய்ய வேண்டும். யாருக்கெல்லாம் ஹௌபாசனம் என்பது இருக்கின்றதோ, அவர்கள்தான் இந்த வைஸ்வதேவத்தை செய்ய முடியும்.*


    *பிரம்மச்சாரிகள் சன்யாசிகள் இவர்களுக்கு அந்த வைஸ்வதேவம் அனுஷ்டானம் கிடையாது. ஒருவருக்காக இன்னொருவர் சங்கல்ப்ம் செய்து கொண்டு செய்யக்கூடாது. இப்படி இந்த வைஸ்வதேவம் செய்யக்கூடிய நிலையில் ஆவஹந்தி ஹோமத்தின் உடைய முறையை விளக்குகிறார்கள் மந்திர சாஸ்திரத்தில் பகவத் பாதர் ஆதிசங்கரர்.*


    *இந்த வைதிக முறையில் பார்த்தால், அதற்கு ஷட் பார்த்ர பிரையோகம் என்று ஒருமுறை இருக்கிறது. அதாவது பாத்திரங்களை சுத்தி செய்து அதை வைத்துக் கொண்டு ஹோமம் செய்வது. அல்லது அக்னி முகம் என்று சொல்வதும் வழக்கம்.*


    *அந்த முறையை செய்துகொண்டு, ஒரு அக்னிஹோத்ரம் செய்த அக்னியையோ, அல்லது அரணியில் இருந்து கடைந்து எடுத்த அக்னியில் செய்யக்கூடியது இந்த ஆவஹந்தி ஹோமம். அனைத்து ஹோமங்களும் இப்படித்தான் செய்ய வேண்டும். இந்த ஹோமத்தை செய்யக்கூடியதான அக்னி எப்படி இருக்க வேண்டும்? ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான அக்னி சொல்லப்பட்டிருக்கிறது.

    அதை நாம் முன்னரே விரிவாக அக்னி சரித்திரத்தில் பார்த்தோம். அக்னி என்னுடைய ஆவிர்பாகம் எத்தனை விதமான அக்னிகள் அவைகள் எங்கெங்கு இருக்கின்றன எந்த அக்கினியை எந்த முறையில் எந்த ஹோமத்தில் நாம் உபயோகம் செய்ய வேண்டும் என்பதை முன்னரே விரிவாக பார்த்துள்ளோம்.*


    *அப்படி இந்த ஆவஹந்தி ஹோமத்திற்கு, அக்னி ஹோத்திரம் செய்பவருடைய அக்னி அல்லது அரனி என்கின்ற கட்டையிலிருந்து கடைந்து எடுத்துவைத்த தான அக்னி. இந்த இரண்டிற்கும் ஏதாவது ஒன்றை வைத்து இந்த ஆவஹந்தி ஹோமத்தை செய்ய வேண்டும்.*


    *அந்த மந்திரங்கள் மிகவும் அற்புதமான மந்திரங்கள். ஒரு தடவை செய்தால் போதும் இந்த ஆவஹந்தி ஹோமம், வைதிக முறையில் செய்கின்ற பொழுது, இரண்டு பாகமாக இருக்கிறது அந்த மந்திரம். அந்த அனுஷ்டானம் இரண்டு பாகமாக இருக்கிறது. அதாவது முதலில் ஜபம் அதற்கான சங்கல்பம் தனியாக செய்துகொண்டு செய்ய வேண்டும். பிறகு ஹோமம். இந்த இரண்டிற்கும் தனித்தனியாக சங்கல்பங்கள் செய்துகொண்டு, இந்த ஆவஹந்தி ஹோமத்தை செய்ய வேண்டும்.*


    *இந்த மந்திரத்தை ஒரு தடவை சொன்னாலே போதும். அது ரொம்ப பலனை நமக்கு கொடுக்கக்கூடியது. அதர்வன மந்திரம் என்று பெயர். அதாவது நாம் உபநயனத்தில் சொல்லக்கூடிய தான மந்திரங்கள். கல்யாணத்தில் சொல்லக்கூடிய தான மந்திரங்கள் போல, இந்த ஆவஹந்தி ஹோமத்திற்கு சொல்லக்கூடிய மந்திரங்கள். கல்யாண மந்திரங்களை நம்முடைய வாழ்நாளில் ஒரு முறை தான் நாம் சொல்கிறோம். அவைகள் நம்முடைய

    ஆயுட்காலம் முடிய பலனைக் கொடுக்கக் கூடியது. ஜன்மாவில் ஒரே ஒருமுறைதான் அந்த மந்திரங்களை நாம் உபயோகிக்கிறோம். * உபநயனமும் அதே போல தான். அந்த மந்திரங்கள் அந்த குழந்தைக்கு ஆயுட் காலம் வரைக்கும் பலனைக் கொடுக்கக் கூடியது. ஆகையினாலே தான் அந்த மந்திரங்களை நன்றாகத் தெரிந்துகொண்டு செய்ய வேண்டும்.*


    *அந்த மந்திரங்களுக்கு அர்த்தங்கள் தெரியவில்லை என்பதனால், அலட்சியம் செய்யக்கூடாது. அந்த விஷயங்களில் போதுமான அளவு நமக்கு புரிதல் இல்லாத காரணத்தினால், இந்த நாட்களில், உபநயனம் மற்றும் கல்யாணங்கள் எல்லாம் செய்தும் செய்யாதது போல் ஆகிறது. காரணம் அந்த மந்திரங்களின் மீது நமக்கு சிரத்தைகள் குறைந்துவிட்டன. அவைகள் சொன்ன முறையிலே செய்வதற்கான எண்ணங்கள் நமக்கு இல்லை.*


    *இந்த நாட்களில் எப்படி சுலபமாக இருக்கிறதோ,அப்படி செய்து கொண்டு வாழ்க்கையை ஒரு மாதிரி நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம். இந்த அளவுக்கு நாம் கஷ்டப்பட வேண்டி வருகிறது. அதனால் மந்திரங்களை நன்றாக தெரிந்து கொண்டு மிகவும் சிரத்தையாக செய்யவேண்டும். கட்டாயம் செய்து அந்த பலனை நாம் அனுபவித்துதான் பார்க்க முடியும். நம்முடைய அனுபவத்தில் அதை நாம் தெரிந்து கொள்ளலாம்.*


    *அப்படி அந்த மந்திரங்கள் அதர்வன மந்திரங்கள் என்று பெயர். கல்யாணத்தில் சொல்லக்கூடிய மந்திரங்கள் எல்லாம் அதர்வண மந்திரம் என்றால் ஒரு தடவை சொன்னால் போதும். ஆயுட் காலம் முடிய பலனைக் கொடுக்கக் கூடியவைகள். அதேபோல்தான் இந்த ஆவஹந்தி ஹோமத்தில் சொல்லக்கூடிய தான மந்திரங்கள். அந்த மந்திரத்தினுடைய அர்த்தங்கள் எல்லாம் மிகவும் அற்புதமானது. அந்த அர்த்தங்களை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X