Announcement

Collapse
No announcement yet.

40 samskaarangal. -1.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 40 samskaarangal. -1.

    நாற்பது ஸம்ஸ்காரங்கள்:-
    ஸம்ஸ்காரங்கள் என்பது நமது ஜீவனிடம் உள்ள மலங்களை அகற்றி நம்மை ப்ரும்மத்துடன் ப்ருஹ்ம லோகத்தில் சேர்க்கின்றன.
    இவைகளில் சில நம் பெற்றோர்களால் செய்ய தக்கவை. சில நாமே செய்ய தக்கவை.


    கர்ப்பாதானம். பும்ஸவனம், ஸீமந்தம், ஜாதகர்மா, நாம கரணம், அன்ன ப்ராஶனம். செளளம், உப நயனம்.
    ப்ராஜாபத்யம், ஸெளம்ய, ஆக்னேய வைஶ்வதேவ வ்ருதங்கள், ஸ்நானம், விவாஹம், வைஶ்வதேவம் அல்லது
    தேவ, பித்ரு, மனுஷ்ய, பூத, ப்ரும்ம எனும் பஞ்ச மஹா யக்யம். இவை 19.


    பாக யக்யங்கள்-7. அஷ்டகா, ஸ்தாலி பாகம், பார்வணம், ஆக்ரஹாயணீ, ஶ்ராவணீ, சைத்ரீ, ஆஶ்வயூஜீ.


    ஹவிர் யக்யங்கள்-7. அக்னி ஆதானம், அக்னி ஹோத்ரம், தர்ஶ பூர்ணமாசம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூட பஶுபந்தம், ஸெளத்ராமணீ.


    ஸோம ஸம்ஸ்தைகள்:-7 அக்னிஷ்டோமம்; அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடஶ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம்.


    ஆக இவைகளே 40 ஸம்ஸ்காரங்கள்.
    ஸ்தாலி பாகம்:- இது அமாவாசைக்கு மறு நாளும், பெளர்ணமிக்கு மறு நாளும் வரும் ப்ரதமை அன்று மாதா மாதம் செய்ய வேண்டும்.
    ஒளபாசன அக்னியிலேயே ஸ்தாலியில் சருவை வைத்த அக்னிக்கும் ஸ்விஷ்ட க்ருத்துக்கும் ஒவ்வொரு ஹோமம் செய்ய வேண்டும். ஆக்ரயன, ஸர்ப்ப பலி முதலியவைகளுக்கு இது ப்ரக்ருதி ஆகும்.


    பார்வணம்:- இதை மாஸி ஸ்ராத்தம் என்று கூறுவார்கள். இது தான் எல்ல ஶ்ராதத்திற்கும் ப்ரக்ருதியானது. ப்ரக்ருதி என்றால் பூர்ணம் என்று பொருள்.
    இதை போலவே மற்றவைகளை செய்ய மேற்கோளாக இருக்கிறது.
    இதற்கு மாறானது விக்ருதி எனப்படும். சில மாறுதல்களுடன், மாறுதல்கள் இல்லாத இடத்தில் ப்ரக்ருதியை போல் செய்வது என்று பொருள்.
    ஶ்ராவணீ ஆவணி மாதம் பெளர்ணமியில் செய்ய வேண்டிய கர்மா. இதை ஸர்ப்ப பலி என்றும் கூறுவர்.


    ஆவணி பெளர்ணமி இரவில் சரு ஆஜ்ய ஹோமம் செய்து , சரு என்றால் கஞ்சி வடிக்காத அன்னம் என்று அர்த்தம். ஆஜ்யம்= நெய்.
    பலாச புஷ்பங்களால் இரு கரங்களாலும் ஹோமம் செய்து , ஸர்ப்பங்களுக்கு புற்று அல்லது சுத்தமான இடத்தில் பச்சை அரிசி மாவினால் கோலம் போல போட்டு
    ஸர்ப்ப மந்திரங்களை கூறி உபஸ்தானம் செய்வது ஸர்ப்ப பலியாம். இம்மாதிரி தினமும் ஆவணி பெளர்ணமி முதல் மார்கழி பெளர்ணமி வரை தினமும் செய்ய வேண்டும்.


    ஆக்ர ஹாயணீ;- ஆவணி பெளர்ணமியில் ஆரம்பித்த ஸர்ப்ப பலியை மார்கழி மாத பெளர்ணமியில் , ஆவணி மாதம் செய்ததைபோல் ஹோமம் செய்து பூர்த்தி செய்யனும்.


    ஸர்ப்பங்களை அடித்து அதனால் ஸர்ப்ப சாபம் பெற்று அதனால் சந்ததி இல்லாதவர்கள் ஸர்ப்ப சாந்தி செய்வது போல் ஸர்ப்ப பலி செய்தால் ஸர்ப்ப சாபமாக இருந்தாலது அகன்று விடும்.


    அதனால் இது ஸம்ஸ்கார மான நித்ய கர்மாவாக இருந்தாலும் , காம்ய கர்மா போல் காம்யத்தையும் பூர்த்தி செய்யும்.
    சைத்ரீ:- சித்திரை மாத பெளர்ணமி யன்று செய்ய வேண்டியது. ஈசான தேவதையை ஆராதிப்பதால் ஈசான பலி என்று பெயர். இதை கோவில்களில் செய்ய வேண்டும்.


    ஆஶ்வயுஜி:- கார்த்திகை மாத பெளர்ணமியில் செய்ய வேண்டிய கர்மா இது. இதை ஆக்ரயண ஸ்தாலி பாகம் என்று கூறுவார்கள்.
    இதில் ஶ்யாமாகம் என்னும் தான்யத்தை கொண்டு பாகம் செய்து ஹோமம் செய்ய வேண்டும்.


    அக்னி ஆதானம்:- கார்ஹ பத்யம், ஆஹவனீயம், தக்ஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளை ஆரம்பிப்பது .
    அக்னி ஹோத்ரம்:- தினமும் காலை மாலைகளில் ஒளபாசனம் மாதிரி இவைகளில் ஹோமம் செய்வது.
    தர்ஶ பூர்ண மாசம்:- ப்ரதமைகளில் செய்யும் இஷ்டி. இது தர்ச பூர்ண ஸ்தாலி பாகம் போன்றது.
    ஆக்ரயணம்:- ஶ்யாமை தான்யத்தை கொண்டு செய்யும் இஷ்டி.


    சாதுர் மாஸ்யம்:- பல இஷ்டிகள் சேர்ந்த ஒரு கர்மா.
    நிரூட பஶுபந்தம், ஸெளத்ராமணி இவ்விரண்டும் ஆண்டுக்கு ஒரு முறை செய்யும் கர்மா.
    கர்ப்பா தானம் போல் ஒவ்வொரு ப்ராஹ்மணனும் அவசியம் செய்ய வேண்டிய முக்கிய கர்மா இவைகள்.
    அஷ்டகா;-
    திஸ்ரேஷ்டகா; அஷ்டகா; அன்வஷ்டகா.


    மார்கழி ,தை, மாசி ,பங்குனி மாதங்களின் க்ருஷ்ண பக்ஷ ஸப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் பித்ருக்களுக்கு சிராத்தம் அல்லது தர்பணம் செய்ய வேன்டும். ஜனவரி-5,6,7.;பெப்ரவரி -3,4,5.;மார்ச்-5,6,7.ஏப்ரல் 3,4,5.






    அஷ்டமி அன்று செய்யப்படும் அஷ்டகைய ப்ரதானமாக க்கொண்டு முதல் நாள் சப்தமிக்கு பூர்வேத்யு; என்று பெயர். மறு நாள் நவமிக்கு அநு+அஷ்டகா
    ==அந்வஷ்டகா என்று பெயர்.


    மேற்கூறிய நான்கு மாதங்களிலும் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் வீதம் 12 தர்பணங்கள் ஷண்ணவதி தர்பணம் செய்பவர்கள் செய்ய வேண்டும்.
    இது முதல் பக்ஷம்.


    ஷண்ணவதி தர்பணம் செய்ய இயலாதவர்கள் தை மாதம் மட்டும் (மாக மாதம்) ஸப்தமி, அஷ்டமி, நவமி அன்று தர்பணம் செய்யலாம். அல்லது அஷ்டமி ஒரு நாளாவது பித்ருக்களுக்கு தர்பணம் செய்ய வேண்டும். மார்ச் 5,6,7.


    ஒவ்வொரு வருஷமும் தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்வது போல் இந்த அஷ்டகை, அந்வஷ்டகை நாட்களிலும் பித்ருக்களுக்கு ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு , முறையாக சிராத்தமாக செய்யலாம். இது இரண்டு விதமாக இருக்கிறது.


    1, ஸப்தமி அன்று மாலை ஒளபாசனாக்னியில் அப்பம் தயார் செய்து ஹோமம் செய்ய வேன்டும். மறு நாள் அஷ்டமியன்று காலையில் எட்டு பேரை வரித்து தர்பணம் செய்து விட்டு, ஹோமம் செய்து முறையாக சிராத்தம் செய்ய வேன்டும். மறு நாள் (நவமி) அன்வஷ்டகா அன்று
    ஐந்து பேரை வரித்து சிராத்தம் செய்ய வேண்டும்.


    2. அல்லது ஸப்தமி அன்று மாலை மற்றும் அஷ்டமி அன்று செய்ய வேண்டிய அஷ்டகா சிராத்தம் இரண்டிற்கும் பதிலாக தத்யஞ்சலி ஹோமம்
    என்னும் ஹோமம் செய்துவிட்டு மறு நாள் (நவமி) அன்வஷ்டகை அன்று ஐந்து பேரை வரித்து ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு சிராத்தம் செய்யலாம்.


    அல்லது இந்த நாட்களில் சிராத்தம் அல்லது தர்பணம் செய்யும் போது ஏற்படும் குறைவை நிறைவு செய்ய ஒரு மந்திரத்தை நூறு முறை ஜபம் செய்யலாம்.


    (ரிக் விதானம்) ஏபிர் த்யுபிர் ஜபேந் மந்திரம் சத வாரம் து தத் திநே..
    அன்வஷ்டக்யாம் யதா ந்யூனம் ஸம்பூர்ணம் யாதி சர்வதா. என்பதாக
    அன்வஷ்டகை யன்று சிராத்தம் அல்லது தர்பணம் செய்யும்போது ஏற்படும் குறைவை நிறைவு செய்ய விரும்புவர்கள் ,


    ரிக் வேதத்திலுள்ள ஏபிர் த்யுபி: (அஷ்டகம்-1,53,4 ).என்று தொடங்கும் வேத மந்திரத்தை நூறு முறை ஜபம் செய்யலாம். இதனால் அஷ்டகை, அந்வஷ்டகையில் ஏற்பட்ட தோஷம் விலகு மென்கிறது ரிக் விதானம் என்னும் புத்தகம்.


    அஷ்டகா : மாக மாசத்தில் அஷ்டகாதி சிராத்தம்.:- முதல் நாள் இரவு ஒளபாசனம் செய்து . ஒரு வகையான அடைபோல் செய்து , அஷ்டகா தேவதைக்கு ஒரு ஹோமமும் ,


    ஸ்விஷ்டக்ருத்திற்கு ஒரு ஹோமமும் செய்ய வேண்டும். . அதன் மிகுதியை , மறு நாள் ப்ராம்மணர்களாக வரிக்கும் எட்டு ப்ராஹ்மணர்களுக்கும் அளிக்க வேண்டும்.


    அஷ்டகா சிராத்தத்தில் விச்வேதேவர் இருவர், பித்ரு வர்க்கம் மூவர், மாத்ரு வர்க்கம் மூவர் ஆக எட்டு ப்ராஹ்மணர்களை வரித்து , பார்வண சிராத்தம் போல் சில மாறுதல்களுடன் செய்ய வேண்டும்.


    அஷ்டமி இரவு ஒளபாசனம் செய்து விச்வே தேவர்களுக்காக ஒருவர் ,பித்ரு, பிதாமஹர். ப்ரபிதாமஹருக்கு ஒருவர், மாத்ரு, பிதாமஹி ப்ரபிதாமஹிக்கு ஒருவர், மாதாமஹ வர்க்கத்திற்கு ஒருவர், மஹாவிஷ்ணுவிற்கு ஒருவர்,




    ஆக ஐந்து ப்ராஹ்மணர்களை வரித்து , நவமி அன்று சில மாறுதல்களுடன் பார்வண சிராத்தம் போல் செய்ய வேண்டும்.


    அந்வஷ்டகைக்கு ப்ரதிநிதியாக தத்யஞ்சலி ஹோமம் ஒன்றை செய்ய வேண்டும்.. அதில் இரு கரங்களாலும் தயிரை எடுத்து , அஷ்டகா தேவதைக்கு ஒரு ஹோமமும் , ஸ்வஷ்டக்ருத்துக்கு ஒரு ஹோமமும் செய்ய வேண்டும்.


    மாக மாதத்தில் பெளர்ணமிக்கு பிறகு வரும் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி , கேட்டை நக்ஷதிரத்துடன் கூடும். அதில் அஷ்டகா சிராத்தம் செய்ய
    வேண்டும். ஸுதர்சண பாஷ்யத்தில் கேட்டை நக்ஷத்திரம் கூடாமலிருந்தாலும் அந்த அஷ்டமியில் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும் ..எனக்கூறபடுகிறது.


    அஷ்டமி அன்று செய்ய வேன்டிய அஷ்டகா சிராதத்திற்கு அங்க பூதமான
    அபூப ஹோமம் செய்ய வேண்டும். ஸப்தமி அன்று மாலை ஒளபாசனம் செய்து அதில் (நெல்லைக்குத்தி அரிசியாக்கி, மாவாக்கி, அதை தட்டையாக செய்து வேக வைக்க வேண்டும்.) இது தான் அபூபம் என்பது.


    பிறகு பார்வண ஸ்தாலி பாகத்தில் சொன்ன மாதிரி அக்னிப்ரதிஷ்டை முதல்
    ஆஜ்ய பாகம் வரை செய்துகொண்டு , அஞ்சலியால் அபூபம் எடுத்துக் கீழ் கண்ட மந்திரத்தை சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.


    “”யாம் ஜனா: ப்ரதிநந்தந்தி ராத்ரீம் தேநுமிவாயதீம் ஸம்வத்சரஸ்ய யா பத்னீ ஸா னோ அஸ்து ஸுமங்கலி ஸ்வாஹா.””
    ஏகாஷ்டகையை ஸம்வத்சர பத்நியாக மற்ற விடத்தில் சொல்லியிருந்தாலும்
    ஏகாஷ்டகையின் ஸாமீப்யம் இருப்பதால் ஸப்தமி திதியின் ராத்ரியும் சம்வத்ஸர பத்நியாக இங்கு ஸ்துதிக்கப்படுகிறது.


    கேட்டை நக்ஷதிரத்துடன் மாக மாத க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியும் சேர்வதை ஏகாஷ்டகை என்கின்றனர்.
    ஹோமம் செய்த பிறகு மிச்சமுள்ள அபூபத்தை எட்டாக பிறித்து எட்டு ப்ராஹ்மணர்களுக்கு கொடுக்க வேன்டும். ராத்ரியின் அபிமான தேவதையை ஹோமத்தால் பூஜிக்கிறோம்.


    பாலில் மாவை போட்டு கிண்டிய கூழுக்கு பிஷ்டான்னம் என்று பெயர்.
    இந்த பிஷ்டான்னத்தால் ஹோமம் செய்ய வேன்டும்.””உக்தயஸ்ச அஸி அதிராத்ரஸ்ச ஸாத்யஸ்கிஸ்சந்த்ரஸாசஹா. அபூபத்ருதாஹுதே நமஸ்தே அஸ்து மாம்ஸபிப்லே ஸ்வாஹா. “


    பிறகு ஆஜ்ய ஹோமம் .பின் வரும் ஏழு மந்திரம் சொல்லி.
    .பூ: ப்ருதிவ்யகினமர்சாமும்மயி காமம் நியுநஜ்மிஸ்வாஹா.
    ,.புவோ வாயுநா அந்தரிக்ஷேண ஸாம்னாமும் மயே காமம் நியுனஜ்மி ஸ்வாஹா.
    ஸ்வர்திவஆதித்யேன யஜுஷாமும் மயே காமம் நியுனஜ்மி ஸ்வாஹா.


    ஜனதப்திரதர்வாடிங்கரொ பிரமும் மயி காமம் நியுநஜ்மி ஸ்வாஹா.
    ரோசனாயாசிராயாக்னயே தேவஜாதவே ஸ்வாஹா.
    கேதவே மனவே ப்ருஹ்மணே தேவஜாதவே ஸ்வாஹா


    ஸ்வதா ஸ்வாஹா.
    அக்னயே கவ்ய வாஹனாய ஸ்வதா ஸ்வாஹா.
    பிறகு ஸ்விஷ்ட கிருத் என்ற கர்மம் முதல் பிண்டப்ரதானம் என்ற கருமம் முடிய உள்ள கார்யங்களை மாஸி சிராதத்த்தில் செய்த மாதிரி செய்ய வேணும்..


    நவமி அன்று மட்டும் தான் ( அன்வஷ்டகையில் தான்) பிண்டதானம் செய்ய வேண்டும். என சிலர் வாதம். இது அஷ்டகையின் முக்ய கல்பம்.


    இனி கெளண கல்பம் கூறப்படுகிறது. எந்த மந்திரம் சொல்லி அபூப ஹோமம் செய்கிறோமோ அதே மந்திரத்தை சொல்லி அஞ்சலியால் தயிரை ஹோமம் செய்ய வேண்டும்.இது மற்றொரு முறையாகும்.


    யாம் ஜனா: ப்ரதிநந்தந்தி என்றதால் தயிரை ஹோமம் செய்ய வேண்டும். அபூபத்தை விலக்க வேண்டும். இந்த தயிர் ஹோமமானது அபூப ஹோமம் முதல் ஆஜ்ய ஹோமம் முடியவுள்ள


    எல்லா கர்மங்களின் ஸ்தானத்திலும் விதிக்க படுவதால் இந்த தயிர் ஹோமத்தை தவிர்த்து மற்ற ஹோமங்களை செய்ய வேண்டுவதில்லை என்று ஸுதர்சன பாஷ்யத்தில் கூறப்பட்டிருக்கிறது.
Working...
X