*03/01/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமம் மந்திரத்தின் அர்த்தங்களை விரிவாக மேலும் தொடர்கிறார்.*
*மிகவும் அற்புதமான மந்திரம். ஒரு தடவை அந்த மந்திரங்களை ஜெபம் செய்தால் நம்முடைய ஆயுள் காலம் முடிய எல்லாவற்றையும் ஸ்திரமாக நமக்கு அளிக்கக்கூடிய சக்தி அந்த மந்திரங்களுக்கு உண்டு.*


*அவைகள் பணங்காசு ஆக இருக்கட்டும் தேக ஆரோக்கியமாக இருக்கட்டும் மனைவி குழந்தைகளாக இருக்கட்டும் நல்லோர் உடைய சேர்க்கை நம்மைப் பற்றிய நல்ல விஷயங்களை சொல்பவர்கள் இவர்களை ஸ்திரமாக இருக்கும் படி நாம் செய்ய வேண்டும்.*


*அப்படி இந்த மந்திரங்கள் பிரார்த்திக்கின்றன. முதலில் நாம் செய்த ஆகுதி நல்ல வஸ்திரம் கட்டிக் கொள்வதற்கு. நல்ல பால் கொடுக்கக்கூடிய பசுக்கள். சாப்பிடுவதற்கு யோக்கியமாக உள்ள அன்னம். அதனியியம் அதாவது சாப்பிடும் படியாக இருக்க வேண்டும். அரிசி என்றால் இப்பொழுது ரப்பரில் வருகிறது அது சாப்பிடக்கூடய வஸ்துவா அலங்காரத்திற்கு ஒரு பாக்கெட்டில் மாட்டி வைக்கலாம். காருக்குள்ளேயே கொத்துக்கொத்தாக திராட்சைகள் தூங்கும் பிளாஸ்டிக்கில். பார்ப்பதற்கு அழகாக இருக்குமே தவிர சாப்பிடுவதற்கு லாயக்கில்லை.*


*நமக்குப் பசி வந்தால் அதிலிருந்து ஒரு திராட்சை எடுத்து சாப்பிட முடியுமா முடியாது பார்க்கத் தான் முடியும். அப்படி இல்லாமல் சாப்பிடுவதற்கு யோக்கியமாக அன்னம். குடிப்பதற்கு நல்ல தண்ணீர். அது இல்லாமல் நல்ல பூமி நல்ல சொல்பேச்சு கேட்கும் படியான குழந்தைகள். நம் மனது போல் நடந்து கொள்ளும் மனைவி. இவர்கள் எல்லாம் எனக்கு அமைய வேண்டும் என்று முதல் மந்திரம் பிரார்த்தனை செய்கிறது.*
*அடுத்து வரக்கூடிய தான மந்திரங்கள் நல்லோருடைய சேர்க்கை எனக்கு எப்படி இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றது மற்ற ஆகுதிகளில் வரக்கூடிய மந்திரங்கள்.*


*ஆமாயந்து அப்படி என்றால், பிரம்மச்சாரி அதாவது நம் சொல் பேச்சு கேட்டு நம்மிடத்தில் உள்ள வித்தையைக் கற்றுக் கொள்ளக் கூடியவன். அவனுக்குத்தான் பிரம்மச்சாரி என்ற பெயர்.*

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
*நாம் படித்த படிப்பை நம்மிடம் சொல்லிக் கொள்வதற்கு மாணவர்கள் எப்போதும் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்றால், இது மூன்றாவது ஆகுதி. விமாயந்து வி என்றால் மிகுந்த கெட்டிக்காரனாக இருக்க வேண்டும். அசடாக இருக்கக்கூடாது.*


*மேதா சக்தி அதிகமாக உள்ளவனாக இருக்கவேண்டும். இது நான்காவது ஆகுதி. பிரமாயந்து பிரம்மச்சாரினஹா என்றால், சொல்லிக் கொடுக்கக் கூடிய படிப்பை அவன் பயன்படுத்துவதாக இருக்க வேண்டும்.*


*ஏதோ படித்தோம் எதற்காக என்றால் ஒரு கம்பெனியில் வேலை கிடைக்கும் என்ற காரணத்திற்காக படிப்பது. அல்லது இவ்வளவு சம்பளம் வரும் ஸ்டைபன்டு வரும் என்று படிப்பது என்பது கூடாது. அப்படி இல்லாமல் அந்தப் படிப்பை படித்து முடித்த பிறகு பயன்படுத்த கூடியவனாக இருக்க வேண்டும்.*


*அவன் கற்றுக்கொண்ட படிப்பை திரும்பவும் சொல்லிக்கொடுக்கும் படியாகவும் அவன் படிக்க வேண்டும். என்னிடத்தில் கற்றுக் கொள்ளக்கூடிய படிப்பையும் வஸ்துக்களையும் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கும்படி உள்ளவனாக இருக்கவேண்டும். மேலும் நல்லதையே நினைப்பவன் ஆக இருக்க வேண்டும்.*


*நாம் ஓரிடத்தில் சென்று படிக்கிறோம், அந்தப் படிப்பு நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் பயன்படும். மேலும் அந்த வாழ்க்கையை மேன்மைப்படுத்தும் அந்த படிப்பு என்கின்ற எண்ணத்தோடு உள்ளவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மாணவன் எனக்கு கிடைக்க வேண்டும்*
*இப்படியாக நம்மிடம் வித்தையை கற்றுக் கொள்ளக்கூடிய மாணவனை பற்றியும் பிரார்த்தனை செய்கிறது இந்த மந்திரம். மேலும் இம் மந்திரம் எப்படி பிரார்த்திக்கின்றது என்றால், எனக்கு எப்பொழுதும் உதவி செய்வதற்கு என்னை சுற்றி எப்போதும் மாணவர்களும் மற்றும் எல்லோரும் இருக்க வேண்டும். அவர்கள் ஆலோசனை சொல்பவர்கள் ஆக வேலையாட்கள் ஆக மாணவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு அந்தேவாசினஹா என்று பெயர்*


*தக்க சமயத்தில் அவர்கள் எனக்கு ஆலோசனை சொல்ல கூடியவர்களாக கிடைக்க வேண்டும். வேலையாட்கள் எப்போதும் எனக்கு நிறைந்து இருக்க வேண்டும். இவர்களெல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்றால், ஒருவர் உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஆனால் அவரே கஷ்டப்படுகிறார். அப்படி இருக்கக் கூடாது. நமக்கு பணம் தேவைப்படுகிறது என்றால் உடனே அதைக் கொடுத்து உதவி செய்பவராக இருக்க வேண்டும் நம்மிடத்தில் இருக்கக் கூடியவர்.*


*வேலையாட்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்றால் சம்பளத்துக்காக அவர்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்று இருக்கக்கூடாது. சம்பளம் என்பது தேவைதான் ஆனால் அதுவே முக்கியம் என்று நினைக்காமல், இவ்வளவு நாள் நமக்கு சம்பளம் கொடுத்து நம்மை காப்பாற்றியிருக்கிறார், அப்படிப்பட்ட நல்ல எண்ணத்தோடு என்ன சுற்றி இருக்க வேண்டும் அவர்கள். அவர்கள் உண்மையாக வேலை செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். என்னிடத்தில் ஒரு மாதிரியாகவும் வெளியில் சென்றால் வேறுவிதமாகவும் பேசக் கூடியவர்களாக இருக்கக்கூடாது.*


*எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக பேசக் கூடியவராக இருக்க வேண்டும். தமாயந்து எப்பொழுதும் நமக்கு உண்மையாக உழைக்க கூடியவராகவும், ஓரிடத்தில் வேலை செய்யும்பொழுது அந்த முதலாளி நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவராகவும், நானும் என் முதலாளியும் சௌக்கியமாக இருக்க வேண்டும் என்று என்ன கூடியவரும், முதலாளி நஷ்டபட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. நம்மால் முடியவில்லை என்றால் அவரே கொடுத்து உதவி செய்யக் கூடியவராகவும் எனக்கு அமைய வேண்டும் என்னை சுற்றி உள்ளவர்கள்.**இப்படி இரண்டு விதமான அர்த்தங்களையும் இந்த மந்திரம் பிரார்த்திக்கின்றது. மேலும் யசஹா என்றால் என்
னைப் பற்றி நல்லவிதமாக, அனைவரும் பேச வேண்டும். ஜனங்களுக்கு மக்களுக்கு மத்தியில் என்னைப் பற்றி நல்லபடியாக பேசம்படியாக நான் இருக்க வேண்டும்.*


*ஸ்ரேயான் என்றால் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தை நான் அடைய வேண்டும். என்னை சுற்றியுள்ள சினேகிதர்கள் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்களும் ஈஸ்வரன் இடத்திலேயே பக்தியோடு நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சினேகத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நண்பர்களை எனக்கு நீ ஏற்படுத்த வேண்டும் இப்படியாக இந்த மந்திரம் பிரார்த்தனை செய்கிறது மேற்கொண்டு மந்திரங்கள் பிரார்த்திக்கின்றன அவை என்ன என்று அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*