Announcement

Collapse
No announcement yet.

aavahanthi homam.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • aavahanthi homam.

    06/01/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமத்தின் பெருமைகளையும் மந்திரத்தினுடைய அர்த்தங்களையும் இதுவரை விரிவாக பார்த்தது என்னவென்று தெரிந்து கொண்டோம்.*


    *இந்தப் பதிவில் சில சந்தேகங்கள் ஆவஹந்தி ஹோமத்தை எப்பொழுது செய்ய வேண்டும் காலம் யார் செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு பதிலாக பார்க்க இருக்கிறோம்.*


    *அதில் கேள்வி என்ன என்றால் இந்த ஹோமத்தை எந்த நேரத்தில் செய்ய வேண்டும். எந்த அக்னியில் இதை செய்ய வேண்டும் என்றால் அக்னி பலவிதமாக உள்ளது. ஹௌபாசனா / சமிதாதானா / லௌகீகா அக்னி என்று இருக்கிறது. எந்த அக்னியில் இந்த ஹோமத்தை செய்ய வேண்டும். பிரம்மச்சாரி அல்லது கிரகஸ்தன் இதில் யார் இந்த ஹோமத்தை செய்யலாம். இப்படி நிறைய பேர் சந்தேகங்கள் கேட்டு இருப்பதினால், அதற்கான பதிலைப் பார்ப்போம்.*


    *இந்த ஆவஹந்தி ஹோமம் செய்ய வேண்டிய காலமானது காலை வேளையில் தான் செய்ய வேண்டும். நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் எந்த ஒரு அனுஷ்டானத்திற்க்கும் காலம் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அனுஷ்டான திற்கும் ஒவ்வொரு காலங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.*
    *அதிலே ஹோமங்கள் செய்வதற்கு காலம் காலை வேளையில்தான் சொல்லப்பட்டிருக்கிறது.*
    *மாத்தியானிக்க*


    *காலத்திற்கு முன்பாக ஹோமங்களை முடிப்பதாக செய்ய வேண்டும். பொதுவாகவே ஸ்மார்த்த கர்மா, ஸ்மார்த்தம் என்றால் தனிப்பட்ட முறையில் காலம் சொல்லப்படாத கர்மாக்களுக்கு பிராதஸ்காலம் தான். சூரிய உதயத்தில் ஆரம்பித்து மாத்தியானிக்க காலம் முடிவதற்கு முன்பாக செய்துவிடவேண்டும் அபரான்ன காலத்திற்க்கு போகக்கூடாது.*


    *அதாவது மத்தியானம் பன்னிரண்டே முக்கால் மணியை தாண்டக்கூடாது எந்த ஒரு அனுஷ்டானமும். ஸ்மார்த்த கர்மாக்கள். அதற்கான காலம் சொல்லப்பட்டால் அதில் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு காலங்களிலும் ஒரு அனுஷ்டானம் சொல்லப்பட்டிருக்கிறது. சூரிய உதயத்திற்கு முன்னர் செய்ய வேண்டிய அனுஷ்டானங்கள் இருக்கின்றன. சூரிய உதயத்தில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்கள். சூரிய உதயம் ஆனவுடன் செய்ய வேண்டிய அனுஷ்டானங்கள் அதாவது சங்கம காலம். மாத்தியானிக்க/குதப்ப/அபரான்ன/சாயங்காலத்தில்/சூரிய அஸ்தமன வேளையில்/ முன்/பின்/நடு ராத்திரியில் இப்படி அனைத்து காலங்களிலும் அனுஷ்டானம் சொல்லப்பட்டு இருக்கிறது,*


    *நாம் ஒரு ஜபம் பூஜை ஹோமம் செய்ய வேண்டுமானால், வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு செய்ய வேண்டும். அந்தக் காலங்களை நாம் தெரிந்து கொண்டு செய்யாவிட்டால் நல்ல பலன்கள் ஏற்படுகின்றனவோ இல்லையோ கெடுதல்கள் நிறைய வரும்.*


    *மருத்துவர் நமக்கு மாத்திரை கொடுத்தால் ஒரு மாத்திரை சாப்பிட்ட பிறகு அடுத்த மாத்திரை சாப்பிட வேண்டிய காலத்திற்கும் இடைவெளி இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை மாத்திரை எழுதிக் கொடுத்தால் மூன்று வேளையும் ஒரே நேரத்தில் நாம் சாப்பிட முடியுமா? மூன்று வேளைக்கு பதில் இரண்டு வேளை என்று நாம் அப்படி மாற்றக்கூடாது. அப்படி செய்தால் டாக்டர் சொல்வதை நாம் செய்யவில்லை என்கின்ற ஒரு காரணம் மேலும் இரண்டு வேலை சாப்பிடதன் மூலம் வேறு விதமான பாதிப்புகள் வந்து சேரும்.*


    *இப்படி இரண்டு விதமான நஷ்டங்கள். இதே போல தான் அந்தக் கர்மாக்களுக்கும் எந்த நேரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறதோ அப்போது தான் செய்ய வேண்டும். சில கர்மாக்கள் வேண்டுமானால் நேரம் தவறி செய்யலாம் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கின்றது.*


    *அதைத் தெரிந்து கொண்டு செய்ய வேண்டும். அப்படி இந்த ஆவஹந்தி ஹோமம் செய்வதற்கு காலை வேளைதான் காலம். சூரிய உதயத்திற்குப் பிறகு மாத்தியானிக்க காலம் முடியும் முன்பு செய்து முடிக்க வேண்டும்.*


    *இது அனைத்து ஸ்மார்த்த கர்மா களுக்கும் பொருந்தும். இதுதான் காலம். எந்த அக்னியில் செய்வது. ஹௌபாசன அக்னியில் சில அனுஷ்டானங்களை தான் செய்யலாம் எல்லாவற்றையும் அதில் செய்யக்கூடாது. சப்த பாத யஞ்யங்கள் என்று உள்ளது. இவைகளை அவ் ஹௌபாசன அக்னியில் தான் செய்ய வேண்டும். கல்யாணம் ஆனவுடன் அவருக்கு வரக்கூடிய அக்னியை தான் ஹௌபாசன அக்னி என்று சொல்கிறோம்.*


    *ஆவஹந்தி ஹோமம் இதில் செய்யக்கூடாது. இதற்கு தனியாக அக்னி வைத்து செய்ய வேண்டும். ஹௌபாசன அக்னியில் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை.*


    *யார் யாரெல்லாம் இதை செய்யலாம் என்றால் பிரம்மச்சரரி கிரகஸ்தன் அனைவருமே செய்யலாம். ஆவஹந்தி ஹோம மந்திரத்தை அத்தியனம் செய்திருக்க வேண்டும். அக்னி முகம் தெரிந்திருக்க வேண்டும். அப்படி முறையாக தெரிந்திருந்தால் ஷட் பாத்தர பிரயோகம் என்று ஒரு முறை இருக்கிறது.*


    *இதை செய்து அந்த ஹோமத்தை செய்ய வேண்டும். வேறு விதமாக செய்யக்கூடாது. பிரம்மச்சாரிகள் செய்யலாம் இந்த முறையில் செய்ய வேண்டும். மந்திரங்களை அத்தியனம் செய்யவில்லை என்றால் அத்தியனம் செய்தவர்களை கொண்டு செய்ய வேண்டும்.*


    *அதற்கும் பலன் உண்டு. யாரும் செய்யலாம். ஒருவரை நியமனம் செய்து எனக்காக நீங்கள் செய்ய வேண்டுமென்று செய்ய சொல்வது. அப்படியும் செய்யலாம் ஆவஹந்தி ஹோமம் என்பது மிகவும் முக்கியம். துரிதமான பலனைக் கொடுக்கக் கூடியது என்பதினால்தான் மகா பெரியவா நமக்கு இதை அனுக்கிரகம் செய்து இருக்கிறார்கள். ஆவஹந்தி ஹோமம் எல்லா இடங்களிலும் நிறைய நடக்க வேண்டும் என்று சொன்னதற்கான காரணம் இந்நாளில் வாழ்க்கை வாழ்வதற்கு நமக்கு என்ன மிகவும் தேவையோ எதை நாம் அடைய வேண்டும் என்று நினைத்து வாழ்நாள் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றோமோ அந்தப் பலனை சுலபமாக அடைவதற்கு இந்த ஆவஹந்தி ஹோமம்.*


    *ஏனென்றால் எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற ஒரு குழப்பமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளும் அப்படித்தான் இருக்கின்றன. காலத்தைப் பார்த்தால் இப்பொழுது மழை பெய்கின்றது இது மார்கழி மாதம். காலம் மாறிப் போய் விட்டது மார்கழி மாதத்தில் மழை பொழிகின்றது. ருது தர்மங்கள் மாறிப் போய்விட்டன. அதுபோல வருடம் முழுவதும் மரங்கள் காய்க்கின்றன. அனைத்து காயும் பழமும் வருடம் முழுவதும் கிடைக்கின்றன. மனுஷன் செய்த தவறா அல்லது காலத்தின் மாறுபாட என்று தெரியவில்லை.*


    *ஆனால் அப்படி இருக்கக் கூடாது. எந்த சமயத்தில் என்ன நடக்க வேண்டுமோ அது தான் நடக்க வேண்டும். வருடம் முழுவதும் மாம்பழம் கிடைக்கின்றது என்றால் அது நம் உடம்பிற்கு ஆரோக்கியமல்ல. மாம்பழம் சாப்பிட கூடிய காலம் என்று உள்ளது. அந்தக் காலத்தில்தான் மாம் பழம் காய்க்க வேண்டும் சாப்பிட வேண்டும். அதற்கு சீசன் என்று சொல்கிறோம் அந்த சீசனில் அது கிடைக்க வேண்டும்.*


    *வருடம் முழுவதும் கிடைக்கின்றது நல்லதுதானே என்றால் நம்முடைய தேகத்திற்கு அது ஆரோக்கியமற்றது. இப்படி கால தர்மங்கள் எல்லாம் மாறிப் போய்விட்டன. நம்முடைய தேகம் ஒழுங்காக செயல்பட வேண்டும் இந்த காலங்கள் மாறிப் போய் இருந்தாலும். அப்படி என்றால் இவைகள் எல்லாம் தாண்டி நமக்கு ஒரு சக்தி தேவைப்படுகின்றது.*


    *மனதளவிலும் உடலளவிலும் நமக்கு நிறைய சக்திகள் தேவைப்படுகிறது. அந்த சக்தியைக் கொடுக்கக் கூடியது இந்த ஆவஹந்தி ஹோமம் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனால்தான் மகாபெரியவா நமக்கு இந்த ஆவஹந்தி ஹோமத்தை செய்ய வேண்டும் என்று காண்பித்திருக்கிறார். அதனால் யார் யாரெல்லாம் இந்த ஹோமத்தை முறையாக கற்றுக் கொண்டு செய்ய முடிந்தால் செய்யவும் அதற்கு கட்டாயம் பலன் உண்டு.*


    *மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X