Announcement

Collapse
No announcement yet.

40 samskaarangal. -4

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 40 samskaarangal. -4

    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் முதல் 40 ஸம்ஸ்காரங்கள் ஒவ்வொன்றாக விரிவாக பார்க்க இருக்கிறோம்*


    *சம்ஸ்காரங்கள் என்பது மிக மிக அவசியம் நாம் கட்டாயம் செய்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் கூட முடிந்தால் செய்யலாம் முடியாவிடில் தவறில்லை. ஆனால் சரியான காலத்தில் இந்த சம்ஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும் அப்படி செய்தாலே, நாம் அதிகப்படியாக எதுவுமே செய்ய வேண்டி வராது. வேதம் நமக்கு அப்படி அமைத்துக் கொடுக்கிறது.*


    *இதன் அடிப்படையிலேதான் மனுஸ்மிருதியில் மனு இதனுடைய தேவையை பல இடங்களில் காண்பிக்கிறார். நீ பிறக்கும்போது தனியாகத்தான் பிறந்தாய் உன்னுடைய கடைசி காலமும் தனியாகத்தான் போகும் என்று மனு காண்பிக்கிறார். உனக்கு எது கூடவே இருக்கும் என்றால் நீ செய்த தர்மம். அதாவது நீ செய்யக் கூடிய கடமையிலிருந்து அதாவது சம்ஸ்காரங்களில் இருந்து வரக்கூடிய பலன் தான்.*


    *மேலும் உன்னுடைய கடைசி காலத்தில் கஷ்டப்பட கூடாது என்பதற்காகத்தான் வேதம் இந்த ஸம்ஸ்காரங்களை அமைத்துக் கொடுக்கிறது. அதனால் இந்த சமஸ்காரங்கள் எல்லாம் சரியாக நடக்க வேண்டும். சொந்தங்கள் நிறைந்திருக்கிறது வேலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் வீடு இருக்கிறது என்றெல்லாம் நீ நினைக்காதே, அவைகள் எல்லாம் உன் கூட வராது தர்மம் தான் உனக்கு துணை புரியும். அதனால் நீ எவ்வளவு தர்மம் செய்து இருக்கிறாயோ அதற்கு தகுந்தார்போல் தான் கடைசியில் அமையும்.*


    *ஏதோ வாழ்க்கையில் ஒன்றை பெரியதாக செய்துவிட்டு நான் எல்லாம் செய்துவிட்டேன் என்று சொல்லக்கூடாது. சிறிது சிறிதாக உன்னுடைய கடமையை நீ செய்திருக்க வேண்டும். சகாயத்திற்கு ஆக கொஞ்சம் கொஞ்சமாக சிறிது சிறிதாக உன்னுடைய கடமைகளைச் செய்து கொண்டு வரவேண்டும்.*


    *தர்மம் என்கின்ற ஒரு சகாயத்தினால் தான் தாண்ட முடியாத நரகங்களை கூட நீ தாண்டி விடலாம். அந்த அளவுக்கு உனக்கு தகுதி இருக்கிறது. அதனால்தான் நீ என் தூக்கத்தை எல்லாம் தாண்டி செல்கிறாய் என்பதை தெரிந்து கொள். தர்மத்தை அனுஷ்டிக்கின்றவனும் தர்மத்தினால் தன்னுடைய பாவத்தைப் போக்கிக் கொள்பவனும் எப்போதும் அவனுக்கு மரணம் என்பது தெரியவே தெரியாது அவனுடைய வாழ்க்கையில். அப்படி பிரம்ம ரூபமாக பரமேஸ்வரனை ஆராதிக்கின்றான் இந்த சம்ஸ்காரங்களின் மூலமாக.*


    *அதனால் பரமேச்வரனுடைய அனுகிரகத்தாலும் நீ செய்யக்கூடிய இந்த தர்மத்தினாலும் உயர்ந்த ஒரு உலகம் உனக்கு கிடைக்கும் அதனால் சுருதிகள் என்று சொல்லக்கூடிய வேதமும் ஸ்மிருதிகள் என்று சொல்லக்கூடிய தர்ம சாஸ்திரமும் எது உனக்கு உயர்ந்தது என்று காட்டுகிறதோ அதை நீ செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.*


    *அவரவர்களுடைய கர்மாக்களின் மூலம்தான் அவரவர்களுக்கு சரீரம் கிடைக்கின்றது அந்த சரீரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அந்த சம்ஸ்காரங்கள் செய்யப்படவேண்டும். அவனுடைய எண்ணம்/சுற்று/நட்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், இந்த சமஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும். அவனுடைய கடைசி காலம் அனாயாசமாக இருக்க வேண்டும் என்றால் ஒரு மருத்துவமனையில் சேர்ந்து கஷ்டபட்டு துக்கப்பட்டு இல்லாமல், வேண்டுமானால் இந்த சமஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும்.*


    *மேலும் மறுபிறவியும் ஆரோக்கியமாக கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஸம்ஸ்காரங்கள் சரியாக செய்ய வேண்டும். இப்படி இந்த அளவுக்கு மனு முக்கியத்துவத்தை காண்பிக்கிறார். அப்படி இல்லை என்றால் நீ மிருகங்களைப் போல் அதாவது பிராணிகளைப் போல் உன் ஜென்மா ஆகிவிடும். இவைகளுக்கெல்லாம் உதாரணங்கள் புராணங்களில் நிறைய சொல்லப் படுகிறது. இது விஷயமாக கருடபுராணத்தில் தர்ம விபாஹா அத்தியாயம் என்று சொல்லப்பட்டுள்ளது.*


    *இது அனேகமாக அனைத்து புராணங்களிலும் இருக்கின்றது. ஒரே இடத்திலேயே சொல்லாமல் பதினெட்டு புராணங்களிலும் விரிவாக விளக்கி சொல்லியிருக்கிறார் வியாசர். கொஞ்சம் கொஞ்சமாக நாம் படித்தால் தான் நம்முடைய மனதில் பதியும் என்பதினால் அனைத்து புராணங்களிலும் இதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.*


    *அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரையும் அந்த புராணமே காண்பிக்கிறது. ஒருவன் சம்ஸ்காரம் எதுவும் செய்து கொள்ளவில்லை அல்லது முடிந்ததை செய்கிறான் என்றால் அவனுக்கு கடஹா என்று பெயர் இதை கருடபுராணம் சொல்கிறது. கடஹா என்றால் அதற்கு உதாரணம் கருடபுராணம் காண்பிக்கிறது.*


    *நண்டு இருக்கிறது அதனுடைய ஜீவிதம் அதாவது வாழ்க்கையை பார்த்தால் அது தனக்காகவே வாழும் அனைவரோடும் சேர்ந்து வாழாது, எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழாது. இஷ்டப்பட்ட இடத்திற்கு செல்லும் கடைசியில் தானாகவே வினையை தேடிக் கொண்டு மாண்டு போகும். அதாவது ஆடி மாதத்தில் வரப்பில் தண்ணி ஓடும், அதனால் வரப்பின் இரண்டு ஓரமும் ஈரமாக இருக்கும் அப்போது இந்த நண்டு குட்டியாக இருக்கும் போதே தாயாரை விட்டு பிரிந்து வந்துவிடும். பின்பு அது மிருதுவாக உள்ள அந்த ஈர மண்ணிலே ஒரு துளை போடும் பின் அதன் உள்ளே சென்றுவிடும். பின்பு அந்த துளையின் உள்ளே ஒரு பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வாசலை சின்னதாக அடைத்துவிடும். ஏனென்றால் வேறு ஒரு நண்டு உள்ளே வரக்கூடாது என்பதற்காக. சின்ன குட்டியாக இருக்கும்போது ஒரு இன்ச் அளவுதான் இருக்கும் அந்த அளவுக்கு வைத்துவிடும். அந்த துளையின் வழியாக தண்ணீரானது வந்து போய்க்கொண்டு சுத்தமாகவே இருக்கும்.*


    *அந்தத் தண்ணீரின் மூலமாக வரக்கூடிய புழுக்கள் பூச்சிகளை சாப்பிட்டுக் கொண்டு வளர்ந்து கொண்டே வரும், இப்படி ஒரு ஆறு மாத காலம் அந்த கூட்டின் உள்ளே வாழும். அறுவடை காலம் வரும்பொழுது அந்த வரப்பு எல்லாவற்றையும் அடைத்து விடுவார்கள். அப்போது அந்த மண் எல்லாம் நன்றாக காய்ந்து விடும். அப்பொழுதும் அந்த துறையின் உள்ளே தண்ணீர் இருக்கும் அதை வைத்துக்கொண்டு ஜீவனம் நடத்திக் கொண்டு வரும்.*


    *கோடை காலம் வந்தவுடன் நன்றாக காய்ந்து போய்விடும் அந்த வாசலும் அடைந்துவிடும். பிறகு அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்யும் பொழுது அதனுடைய உடலளவு பெருத்து விடும். அப்பொழுது அந்த வாசலை இடிக்க முயற்சி செய்யும் ஆனால் முடியாது ஏனென்றால் ஆரம்பத்திலேயே நன்றாக கட்டி விடும். அதனால் அதனுள்ளேயே பசி தாகத்தினால் இருந்து இறந்து போய்விடும். அப்படி யார் ஒருவன் இந்த சமஸ்காரங்கள் எல்லாம் சரிவர செய்து கொள்ளாமல் தன் இஷ்டப்படி வாழ்கின்றானோ அவனுக்கு கடஹா என்று பெயர் சூட்டுகிறது கருடபுராணம்.*


    *ஏன் இப்படி சொல்லி இருக்கிறது என்றால் நாம் இந்த அளவுக்கு வாழக் கூடாது என்பதற்காகத்தான், மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X