11/02/2021**முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து கர்ப்பாதானம் என்கின்ற சம்ஸ்காரத்தில் ஒரு சரித்திரத்தை மகாபாரதத்தில் இருந்து காண்பித்து மேலும் தொடர்கிறார்.*


*ஒரு வயதான பெண்ணானவள் காந்தாரியின் இடத்திலிருந்து பேசிவிட்டு, உன்னுடைய கர்ப்ப முக்கியமாக ஒரு நல்ல மருத்துவரை உடனடியாக பார்த்து நீ பேசிக் கொள் என்று சொல்லி விட்டு போனதும், இவளுக்கு மிகவும் கவலையாக போய் உடனே ஒரு மருத்துவரை போய் பார்த்தாள்.*


*அந்த மருத்துவர் பார்த்துவிட்டு ஒன்றும் கவலைப்பட கூடியவகையில் இல்லை என்ன ஆகி இருக்கிறது என்றால், கர்ப்பம் எல்லாம் சாதாரணமாக தான் இருக்கிறது. எப்படி பக்ஷிகள் எல்லாம் தன்னுடைய வயிற்றில் சுமக்கும் அதுபோல் நீ சுமந்து கொண்டு இருக்கிறாய் அதாவது ஒரு மூட்டை போல் இருக்கிறது உன்னுடைய கர்ப்பம். அது மட்டுமல்ல ஒரு குழந்தை என்று சொல்ல முடியாது. நிறைய குழந்தைகள் ஆனால் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கின்றன. அத்தனை குழந்தைகளும் முதிர்ச்சி பெற்று வளர்வதற்கு ஒரு வருட காலம் ஆகும். இரண்டு வருடங்கள் கூட ஆகலாம் என்று மருத்துவர் சொல்லி, அவளுக்கு ஆலோசனை எல்லாம் சொன்னார்.*
*இப்படி கேட்டதும் அவளுக்கு மிகவும் துக்கமாக போய்விட்டது. முட்டை போலிருக்கிறது என்று சொல்கிறார்களே இது குழந்தை தானா அல்லது இல்லையா? வியாசர் உடைய வரம் வீணாக போய் விட்டதா என்று அவளுக்கு மிகவும் கவலையாக போய்விட்டது. உடனே வியாசரை வரவழைத்தாள். அவருக்கு நமஸ்காரம் செய்து இந்த விஷயத்தைச் சொன்னாள் காந்தாரி.*
*வியாசர் சொன்னார் ஒன்றும் கவலை வேண்டாம் ஈஸ்வரனுடைய ஆஞ்யை படித்தான் எல்லாம் நடக்கும். உனக்கும் நான் சொன்ன வரம் வீணாகப் போகாது. உனக்கு கட்டாயம் நூறு குழந்தைகள் பிறக்கும். அப்படி ஏன் எனக்கு இப்படி இருக்கிறது என்று காந்தாரி கேட்டதும் அந்த கர்ப்பாதான முகூர்த்தம் ஆனது செய்யப்பட வேண்டிய காலத்தில் செய்யாததினால், ஆதலால் அது தோஷமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது.*
*பக்ஷிகள் எல்லாம் தன்னுடைய வயத்தில் குழந்தைகளை முட்டையாக தான் பிரசவம் செய்கிறது. அண்டஜம் என்று பக்ஷி களுக்குககெல்லாம் பெயர். எப்பொழுது இது போல் ஆகும் என்றால், கர்ப்பாதானம் செய்யப்பட வேண்டிய காலத்தில் செய்யாவிடில், அப்படி ஆகும். பக்ஷிகள் எல்லாம் இரவிலே கர்ப்பாதானம் செய்வதில்லை பகலில் தான் செய்கின்றன. அதேபோல்தான் பருவகாலத்தில் மிருகங்கள் எல்லாம் பருவத்திற்கு வரும். இந்த பஞ்ச பர்வா என்று சொல்லக்கூடிய காலத்தில்தான், மிருகங்கள் எல்லாம் கர்ப்பத்தை தறிக்கும்.*
*அதுபோல் பஞ்ச பர்வாவில் உனக்கு கர்ப்பாதானம் ஆன காரணத்தினாலே முட்டை போல உன்னுடைய கர்ப்பத்திலே குழந்தைகள் எல்லாம் உற்பத்தியாகின்றன. கவலைப்படாதே எல்லாம் நல்லவைக்குதான் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது தான் எனக்கு ஒரு விஷயம் காதிலே விழுந்தது, அதையும் உனக்குத் தெரிவிக்கிறேன்.*
*குந்திக்கு குழந்தை பிறந்து விட்டது என்று சொன்னார். கேட்டாள் பின்பு அவர் கிளம்பி சென்றுவிட்டார். தனக்கு முன்னர் அவளுக்கு குழந்தை பிறந்துவிட்டது என்று கேட்டதும் மிகவும் துக்கமாக போய் விட்டது அவளுக்கு. நம் குழந்தை அல்லவா முதலில் பிறக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். எனக்கு குழந்தை பிறந்து பேர்சொல்லி இராஜாவாக வரணும் என்று நினைத்தேன் ஆசைப்படுகின்ற பொழுது அதற்குள் அவள் எவ்வாறு பிரசவித்தாள்?.*


*இந்த செய்தி காந்தாரி மனதை மிகவும் வாட்டியது. என்ன ஆகியது என்றால் வயத்திலே அடித்துக்கொண்டு அழுகிறாள். இப்படி அடித்துக் கொண்டு அழுததினால் அந்த கர்ப்பம் கலைந்து போய்விட்டது. இதுபோல் இந்த கர்ப்பத்திலே இவ்வளவு முட்டைகள் எல்லாம் இருக்கிறது என்பதைப்பற்றி திருதராஷ்டிரனுக்கு தெரிவிக்கவில்லை. அண்டம் போல அப்படியே கீழே விழுந்துவிட்டது.*


*எப்படி ஒரு பக்ஷியானது முட்டை போல் பிரசவிக்குமோ அதுபோல் அந்த கர்ப்பமானது கீழே விழுந்துவிட்டது. அதற்கப்புறம்தான் அவளுக்கு தெரிய வருகிறது ஒரு விபரீதம் நடந்துவிட்டது, உணர்ந்து அழுது இப்படி ஒரு குறைவான பிரசவம் ஆகின்றது என்றால் அந்தப் பெண்ணிற்கு எவ்வளவு வேதனைகள் இருக்கும். அவ்வளவு வேதனைகள் பட்டாள் காந்தாரி.*


*இருந்தும்கூட ஷத்திரிய ஸ்திரீ ஆனதால் அவளுக்கு மிகவும் மனோ தைரியம் இருந்தது. எல்லாம் அழுது முடித்த பின்னர் இந்த கர்ப்பம் அழியக்கூடாது அப்படி ஆகிவிட்டால் வியாசர் உடையவரும் வீணாகப் போய்விடும் நம்முடைய வம்சம் இல்லாமல் போய்விடும் என்று எண்ணி, குழம்பி போனாள். திரும்பவும் யோசனை செய்து வியாசரை வரவழைக்கிறாள் மரியாதையுடன் கூட.*


*ஏன் என்ன ஆகியது இப்படி இருக்கிறதே என்று வியாசர் கேட்க? அப்போது காந்தாரி சொன்னாள் குந்திக்கு குழந்தை பிறந்தது என்று கேட்டவுடன் எனக்கு கர்ப்பம் இது போல் இருக்கின்றது என்கின்ற வேதனையை விட, அவளுக்கு குழந்தை பிறந்து விட்டதே என்ற வேதனை என்னை மிகவும் வாட்டியது. அதுனாலே நான் வயத்திலே அடித்துக்கொண்டு அழுதேன்.*


*நான் கேட்ட நூறு குழந்தைகள் வரம் அப்படியே நடக்கும் என்று நீங்கள் கொடுத்தீர்கள். ஆனால் எனக்கு இது போல் ஆகி விட்டது என்று எனக்கு வருத்தமாகவும் கவலையாகவும் போய்விட்டது. ஆகையினால்தான் என்ன செய்யலாம் என்று உங்களிடம் கேட்டு வந்தேன் என்று அழுது கொண்டு நின்றாள்.*

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
*வியாசர் அவளை ஆசுவாசப் படுத்தினார். கவலைப்படாதே என்னுடைய வரம் வீணாகப் போகாது நீ சொல்வது சத்தியம். உன்னுடைய கர்ப்பத்தில் உற்பத்தியான குழந்தைகளும் வீணாகப் போகாது. கட்டாயம் இரண்டும் நடக்கும். இதுவும் ஈஸ்வரனுடைய ஆஞ்யை படித்தான் நடக்கிறது. கவலைப்படாதே தைரியமாக இரு.*


*குறை பிரசவம் ஆக வந்த இவர்களே உனக்கு புத்திரர்களாக வருவார்கள். அதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன் அதை நீ கேள் என்று ஒரு வழியைக் காண்பிக்கின்றார் வியாசர். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*