Announcement

Collapse
No announcement yet.

garbha aadhaanam.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • garbha aadhaanam.

    *12/02/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் பற்றிய ஒரு விவரத்தை மகாபாரதத்தில் இருந்து ஒரு சரித்திரம் மூலமாக மேலும் நமக்கு விவரிக்கிறார்.*


    *கர்ப்பாதானம் எப்பல்லாம் செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்பதைப்பற்றி அந்த சம்பவத்தில் விவரிக்கிறார். காந்தாரி யானவள் குந்திக்கு முதலில் குழந்தை பிறந்து விட்டது என்பதை கேள்வியுற்று, வயிற்றில் அடித்துக்கொண்டு கோவப்பட்டு அழுதாள். அதனால் அந்த கர்ப்பமானது பிண்டமாக கீழே விழுந்துவிட்டது.*


    *அந்த சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வியாசரை இங்கு அழைத்து யோசனை கேட்கிறாள். அவரும் ஒன்று சொல்கிறார். இதை அப்படியே விடக்கூடாது பாதி அளவு குழந்தை உற்பத்தி ஆகி இருக்கிறது. இதை நாம் பாதுகாக்க வேண்டும் ஏனென்றால் என்னுடைய வரம் ஆனது வீணாகப் போகாது. உன்னுடைய கர்ப்பத்தில் உற்பத்தியான குழந்தையும் வீணாகப் போகாது.*


    *அதனால் இதற்காக என்று ஸ்தீரிகளை நியமனம் செய்ய வேண்டும். இந்த கர்ப்பத்தை ஒரு கலசத்தில் போட்டு உள்ளுக்குள் கதகதப்பாக இருக்க வேண்டும். வெளியில் குளுமையாக இருக்க வேண்டும். அப்படி ஒரு இடம் ஏற்பாடு செய்து அந்த கலசத்தில் இந்த கர்ப்பத்தை வைக்க வேண்டும்.*
    *அதை நன்கு பராமரிக்க வேண்டும் ஆட்களை நியமித்து. கலசத்தை நெய்யினால் நிரப்பி அதனுள் இந்த கற்பத்தை வைத்து பின்பு சுற்றிவர ஜலத்தினால் நிரப்பவேண்டும். இப்படி ஜலத்தை விட்டுக் கொண்டே வரவேண்டும் என்று வியாசர் சொல்ல, அப்படி கலசத்தை கொண்டுவர அந்த முட்டையில் இருந்து எடுத்துப்பார்த்தால் சின்ன சின்னதாக கட்டை விரல் அளவுக்கு குழந்தைகள் இருக்கின்றன.*


    *கட்டை விரல் அளவு தான் குழந்தைகள் வளர்ந்து இருக்கின்றன. நூற்றி ஓர் சிசுக்கள் இருக்கின்றன. அத்தனையும் வரிசையாக கலசங்களில் வைத்து ஜலம் விட்டு அந்த குழந்தைகளை வைத்தார்கள். அதற்காக ஒரு அறையை ஏற்பாடு செய்து ஆட்களை வைத்து பாதுகாக்க சொல்கிறார்கள்.*


    *இவ்வளவெல்லாம் செய்த பிறகுதான் திருதராஷ்டிரனுக்கு தெரியவந்தது இப்படி ஆகிவிட்டது என்று. பின்பு திருதராஷ்டிரன் மிகவும் கோபித்துக் கொண்டான் காந்தாரியை. ரொம்ப சத்தம் போட்டு வருத்தப் பட்டான். யாசர் அவனிடம் சொன்னார் இது வருத்தப்படக்கூடிய காலமும் கோபப்பட கூடிய காலமும் இல்லை ஈஸ்வரனுடைய ஆஞ்யை பகவானுடைய சித்தப்படி தான் நடக்கும். கர்ப்பாதானம் ஆனது சரியான காலத்தில் செய்யப்படாததால், இந்த விஷயத்தில் இவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டன. இனிமேல் செய்ய வேண்டிய காரியங்கள் சரியாக நடக்க வேண்டும் என்று சொல்லி, அந்த கலசங்களில் உள்ள சிசுக்களுக்கு பும்ஸவனம் செய்து வைக்கிறார் வியாசர்.*


    *அதன்பிறகு நாலாவது மாசம் பிறந்ததும், அந்த சீ மந்தத்தையும் செய்து வைக்கிறார். பின்பு அந்த கலசங்களை ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும் என்று சொல்லி அந்த குழந்தைகள் பிறக்க வேண்டிய காலம் வந்தால், தானாகவே அந்த கலசத்தில் இருந்து குழந்தைகள் வெளியே வந்துவிடும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி தனியாக திருதராஷ்டிரனை அழைத்துக்கொண்டு சென்று அவன் காதில் சில விஷயங்களை சொல்லி, கவலைப்படாதே நல்ல குழந்தைகளே உனக்குப் பிறக்கும். இப்படி இருவருக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு வியாசர் அங்கிருந்து இமய பர்வதத்திற்க்கு தவம் செய்ய வந்து விடுகிறார்*


    *அப்படிப் இருக்கவேண்டிய காலம் வந்ததும் அந்த கலசத்தில் இருந்து ஒரு குழந்தை வெளியே வந்தது. அதை திருதராஷ்டிரனிடம் பொய் சொன்னார்கள். அதைச் சொன்னதும், மூத்தவன் யுதிஷ்டிரன் தான் இராஜாவாக வரவேண்டும் என்பது தெரிந்து போய்விட்டது.*


    *பரவாயில்லை அவருக்கு அடுத்ததாக இந்த குழந்தை இருக்கட்டும் என்று திருதராஷ்டிரன் சொல்லி, பீஷ்மர் விதுரர் அவர்களுக்கு இந்த தகவலை அனுப்பினார். அனைவரையும் அங்கு வர வைத்தார். குழந்தை பிறந்ததற்கான விறை தானம் செய்து, அப்படி ஜாதகர்மா அவை செய்தார்கள்.*


    *அப்படி நாமகரணம் செய்ய வரும்பொழுது திருதராஷ்டிரன், எப்படிப்பட்ட எதிரிகளையும் தன்னுடைய சாமுத்திரியம் மூலம் ஜெயிக்கும் படியான காலத்திலேயே இவன் பிறந்திருக்கிறான், அதனால் இவனுக்கு துரியோதனன் என்று பெயர் வைத்து பீஷ்மர் முன்னால் அதை நாம கரணம் சூட்டுகிறேன்.*


    *அதே நாளில் இங்கு பீமனும் பிறக்கிறான். இருவரும் ஒரே நாளில் பிறந்தார்கள். அசாத்தியமான காரியங்களை செய்ய வேண்டும் என்பதற்காக பீஷ்மர் அவனுக்கு பீமன் என்று பெயர் சூட்டுகிறார்.*


    *இங்கு துரியோதனன் பிறந்த உடனே குழந்தை ஓவென்று அழ வேண்டும் அப்பொழுதுதான் ஆரோக்கியமாக இருக்கிறது என்று பொருள். துரியோதனன் பிறந்தவுடன் அவன் ஒரு குட்டிக் கழுதை போல் அழுதான். அதைக் கேட்டதும் அவ்வளவு பேருக்கும் தெரிந்து போய்விட்டது இவனுடைய சப்தமே சரியில்லையே என்று. விசித்திரமாக இவனுடைய குரல்/சிரிப்பு இருக்கிறது.*


    *அப்போது எல்லோரும் இது சாதாரண குழந்தை அல்ல என்று தெரிந்து கொண்டனர். திருதராஷ்டிரன் சொன்னார் குழந்தை பிறந்திருக்கிறது நூறு குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள் வியாசரின் அனுக்கிரகத்தினால், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, என்ன இருந்தாலும் எனக்கு மூத்த புத்திரன் என்பவன் யுதிஷ்டிரன் தான். இந்த குலத்திற்கு அடுத்த இராஜா என்பவன் யுதிஷ்டிரன் தான் என்பதை நான் தீர்மானிக்கிறேன். அதற்கு அடுத்ததாக துரியோதனன் இராஜாவாக வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று சொல்லி மேற்கொண்டது சரித்திரம் போகிறது. ஏன் அப்படி சொன்னார் திருதராஷ்டிரன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X