Announcement

Collapse
No announcement yet.

paakiya sooktham

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • paakiya sooktham

    *18/02/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு வரக்கூடிய வரிசையில் கர்ப்பாதானம் என்கின்ற ஒரு சம்ஸ்காரம் பற்றி விரிவாக தெரிந்து கொண்டோம்.*


    *கர்ப்பாதானம் மந்திரங்களை வேதம் காண்பித்து அதற்கு அடுத்ததாக பாக்கிய சூக்தத்தை வேதம் காண்பிக்கிறது. அதற்கான காரணம் மிகவும் முக்கியமானது. பாக்கிய சூக்தத்தை வேதம் இரண்டு இடத்தில் காண்பிக்கிறது.*


    *தைத்ரிய பிராம்மணத்திலும் மந்திரப் பிரசினம் என்று சொல்லக்கூடிய தானே ஏக்காக்கினி காண்டத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் 2 இடத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்றால், இரண்டு விதமான பலன்களை கொடுக்கிறது இந்த மந்திரங்கள்.*


    *தைத்ரிய பிராமணத்தில் ஒரு யாகத்தில் உபயோகப்படுத்தும் படியாக வைத்திருக்கிறது. மந்திர பிரஸ்னத்தில் ஒரு தம்பதிகள் அதாவது கணவன் மனைவிக்குள் ஒரு ஒற்றுமை இல்லாமல் இருந்தால் இந்த மந்திரங்களைச் சொல்லி ஒரு ஸ்தாலி பாகம் செய்ய வேண்டும் சென்று காண்பித்துள்ளது.*
    *கணவன்-மனைவிக்குள் மன ஒற்றுமையை விரும்பினால் இந்த மந்திரங்களை கொண்டு, ஸ்தாலிபாகம் செய்ய வேண்டும் என்று ஆபஸ்தம்பர் காண்பிக்கிறார்.*


    *_ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் ஒருவர் அபிப்பிராயத்தை ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இருவரும் சேர்ந்து சந்தோஷமாக குடும்பத்தை நடத்த வேண்டும். இதற்குத்தான் இதய சம்ஸர்க்கம் என்று பெயர். கல்யாணத்தின் பொழுது காசியாத்திரை ஆனவுடன் மாலைமாற்று என்று ஒன்று செய்கிறோம் அதற்கு காந்தர்வ முறை என்று பெயர். இந்த மாலை மாற்றும் பொழுது மந்திரம் சொல்வதாகவே அமைத்துக்

    கொடுத்திருக்கிறார்கள் ரிஷிகள். என்னுடைய ஹிருதயத்தில் உன்னுடைய இருதயம் ஆனது இருக்க வேண்டும். என்னுடைய சித்தத்தில் உன்னுடைய சித்தமானது இருக்க வேண்டும். அதாவது என்ன அர்த்தம் நான் என்ன நினைக்கிறேனோ அதை நீயும் நினைப்பவளாக இருக்க வேண்டும். நீ என்ன நினைக்கிறாயோ அதை நான் செய்பவனாக இருக்க வேண்டும். நம் இருவருடைய பிராண சக்தியும் ஒன்றாக இருக்க வேண்டும். இரண்டு பேருடைய இருதயமும் ஒன்றாக இருக்க வேண்டும்._*


    *புத்தி மனது பிராண சக்தி இது எல்லாம் சேர்ந்துதான் இருதயம் என்று பெயர். அற்புதமான மந்திரங்கள். இரண்டு விதமான பலன்களை தான் இந்த மந்திரங்கள் தரும் என்பது இல்லை. எவ்வளவோ விதமான பலன்களை கொடுக்க வல்லது தான் இந்த மந்திரம் என்பதினால்தான் இந்த பாக்கிய சூக்தத்தை காலை வேளையில் முதலில் இதை சொல்வது என்றும் மற்றவை அப்புறம்தான் சொல்வது என்று நாம் வைத்துக் கொண்டுள்ளோம்.*


    *பாக்கியம் என்றால் அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் பெறக்கூடியது தான். அப்படி அவ்வளவையும் அனுகிரகம் செய்யக் கூடியது இந்த மந்திரம் என்பதினால்தான் காலை வேளையில் இதை சொல்வது என்று வழக்கத்தில் நாம் வைத்துக் கொண்டுள்ளோம்.*


    *_தைத்திரீய பிராமணத்தில் யாகத்தில் உபயோகப்படுத்தும் படியாக இந்த மந்திரத்தை வைத்துள்ளனர். அது என்ன யாகம் என்றால் பகன் என்கின்ற தேவதையை உத்தேசித்து குழந்தைகள் பிறப்பதற்கு சக்தி இல்லாத ஒரு தம்பதிகள், நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கான, செய்யக்கூடியது ஆன ஒரு யாகம் இது._*


    *_இவர்களுக்கு குழந்தையே பிறக்காது என்கின்ற நிலையில் இருந்தாலும் கூட, இந்த மந்திரங்களைச் சொல்லி அந்த யாகத்தை செய்தால் கட்டாயம் குழந்தை பிறக்கும். இந்த மாதிரியான யாகங்களை எல்லாம் செய்து தான் தசரதன் தனக்கு பகவானையே ராமனாக புத்திரனாக /வாரிசு ஆக அடைந்தார் என்று இராமாயணத்தில் பார்க்கிறோம்._*


    *அதேபோல் தான் இந்த மந்திர பிரஸ்னத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. அதை ஸ்தாலி பாகமாக செய்ய முடியாவிட்டாலும் கூட அந்த மந்திரங்களை யாவது சொன்னாலே அந்த அளவுக்கு பலன்களை கொடுக்கக் கூடியது. தம்பதிகளுக்குள் ஒற்றுமை குறைவாக இருக்கின்றது என்றால், இந்த மந்திரத்தை அவர்கள் காதில் விழும்படியாக தினமும் ஜெபம் செய்ய வேண்டும். அந்த தம்பதிகளே மந்திரத்தை அத்தியனம் செய்து தினமும் சொல்ல வேண்டும்.

    எவ்வளவு விரிசல்கள் இருந்தாலும் சரியாக போய்விடும். குடும்பத்தின் உள்ளே எவ்வளவு மனக்கசப்புகள் இருந்தாலும் மறைந்து போய்விடும். தம்பதிகள் இணைந்து விடுவார்கள். அந்த அளவுக்கு சக்தியைக் கொடுக்கக் கூடியது இந்த மந்திரம். சப்தம் பயன்தரும் என்று அதைத்தான் தமிழில் சொல்கிறோம்*
    *சப்தம் என்றால் இந்த வேத சப்தங்கள் தான். இந்த வேத ஒலி பயன்தரும். நாம் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது பின்னால் ஒரு

    வாகனம் ஒலி எழுப்புகிறது என்றால் அதைக்கேட்டு நாம் நகர்ந்து கொள்கிறோம். எந்த வாகனமாக இருந்தாலும் ஹிந்தி காரோ தமிழ் காரோ அல்லது அந்த வாகனமோ நம்மளை நகர் என்று சொல்லியதா இல்லை, அது ஒரு சப்தத்தை வெளியிட்டது. அந்த சப்தம் அனைவருக்கும் புரிகிறது. இதுதான் சப்தம் பயன்தரும் என்பதற்கு உதாரணம்.*
    *இன்னும் நாம் உள்புகுந்து பார்த்தோமேயானால் புகைவண்டி பல விதமான ஒலிகளை எழுப்பும். சின்னதாகவும் தொடர்ந்தும் விட்டு விட்டும் ஒலிகளை எழுப்பும். இவை எல்லாவற்றுக்கும் ஒரே அர்த்தமா என்றால் இல்லை. போய் வண்டி நிலையத்தில் இருந்து கிளம்பும் பொழுது முதலில் நீண்டும் பிறகு குறைவாகவும் ஒலி எழுப்பும். இப்படி இரண்டு தடவை எழுப்பும். இது புகை வண்டி கிளம்புவதற்கான அறிகுறி. இரண்டு தடவை சிறியதாக அடித்தால் ஒரு அர்த்தம் ஒரு தடவை சின்னதாக அடித்தால் லெவல் கிராசிங் வருகிறது என்று அர்த்தம். ஒரு தடவை நீண்டு அடித்தால் வேறு ஒரு அர்த்தம். இப்படி ஒலி எழுப்புவதை வைத்துக்கொண்டே அர்த்தம் மாறுபடுகிறது.*


    *மந்திரத்தை நாம் எப்படி சொல்கிறோமோ அதற்கு தகுந்தார்போல் அர்த்தம் மாறுபடும் என்பதால் தான் தைத்ரிய பிராமணத்தில் ஒவ்வொரு மந்திரமும் நான்கு வாக்கியங்கள் ஆகவும், மந்திர பிரசன்னத்தில் ஒவ்வொரு மந்திரமும் இரண்டு வாக்கியங்கள் ஆகவும் நமக்கு காண்பிக்கிறது. ஏனென்றால் அர்த்தம் மாறுபடுவதால் அப்படி காண்பிக்கப்படுகிறது. இந்த மந்திரத்திற்கான அர்த்தத்தை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்*
Working...
X