Announcement

Collapse
No announcement yet.

bhagya suktham

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • bhagya suktham

    19/02/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் அதனுடைய முக்கியத்துவத்தை மேலும் தொடர்கிறார்.*


    *நாம் வேதத்தில் இருந்து பாக்ய சூக்தம் என்று சொல்லக்கூடிய ஒரு மந்திரத்தின் பெருமையைப் பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். இந்த மந்திரத்தை யார் ஒருவன் தம்பதிகளுக்குள் அன்னியோன்யத்தை விரும்புகிறார்களோ, அவர் இந்த மந்திரங்களை ஜெபம் செய்ய வேண்டும்.*
    *அந்தப் பலனை உடனே கொடுக்கக் கூடியது இந்த சூக்த மந்திரங்கள். இந்த மந்திரங்களின் உடைய அர்த்தம் என்று பார்த்தோமேயானால், நாம் அனைவரும் சேர்ந்து இந்த தேவதைகளை தியானம் செய்வோம் வரவழைப்போம் ஆராதனை செய்வோம்.*


    *எந்த எந்த தெய்வங்களை தியானம் செய்வோம். இந்த காலை வேளையில், அத்துணை தேவதைகளுக்கும் முதலாவதாகவும் முகமாகவும் இருக்கக்கூடிய அக்னியை ஆராதிப்போம். அத்துணை தேவதைகளுக்கும் இராஜாவாக உள்ள இந்திரனை தியானம்/பூசை செய்வோம். இந்த காலை வேளையில், மித்தரஹா என்றால் உதயம் ஆகக்கூடிய சூரியன், உதயமானதும் சூரியன் மிகுந்த ஒளியோடு இருக்கிறார். அந்த இளம் சூரியனுக்கு மித்தரஹா என்ற பெயர். அவரை தியானம் செய்வோம். இப்படியாக ஒரு அர்த்தம்.*


    *மற்றும் ஓர் அர்த்தம், நாம் காலைவேளையில் நதியிலே ஸ்நானம் செய்து எழுந்தவுடன், உதயமான சூரியன் அந்த ஜலத்திலே விழும். உதயம் ஆகின்ற சூரியனை நாம் நேரடியாக பார்க்க கூடாது என்று சாஸ்திரம். அந்த சூரியனுடைய நிழல் ஜலத்திலே விழும். அப்படி அந்த ஜல தேவதையான வருணனையும் சூரியனையும் சேர்த்து சொல்லக்கூடியது மித்தரா வருணா. அப்படி அவ்விருவரையும் தியானம் செய்வோம்.*


    *நம் தேகத்திற்கு, ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியதான அஸ்வினி தேவர்களையும் ஆராதிப்போம். இந்த காலை வேளையில், பஹம் நமக்கு அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொடுப்பதற்கான நம் கூடவே இருக்கும் பஹனை ஆராதிப்போம்.*


    *பூஷா என்றால் வயதான தோற்றத்தில் உள்ள சூரியனுக்கு பூஷா என்று பெயர். அதாவது பற்கள் எல்லாம் விழுந்த நிலையில் இருக்கக்கூடியது ஆன நிலையில் உள்ள சூரியனுக்கு அந்த பெயர். அப்படிப்பட்ட சூரியனை தியானம் மற்றும் ஆராதனை செய்வோம். பிரம்மா என்றால் வேத மந்திரங்கள், அந்த வேத மந்திரங்கள் அனைத்திற்கும், நாயகனாக/நாதனாக உள்ள மந்திர இராஜா தேவதையும் நாம் தியானம் செய்வோம்.*
    *சோமனையும் ருத்தரனையும் நாம் தியானம்/பூசை செய்வோம். இப்படியாக முதல் மந்திரம்.*


    *இந்த காலை வேளையில் தியானம் ஆராதித்தல் பிரார்த்தனை செய்தல் யாரை அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொடுக்கக்கூடிய தான, பஹனை தியானம் செய்வோம். எப்படிப்பட்ட காரியத்தை சாதித்துக் கொடுக்க கூடியவர், மனிதனால் முடியாதது இந்த காரியத்தை செய்ய முடியாது என்று சொல்லக்கூடிய காரியங்களைக் கூட நமக்கு சாதித்துக் கொடுக்கக்கூடியவர் பஹன்.*


    *இவருடைய அனுக்கிரகத்தினால் தான் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு கூட, நம் முன்னோர்கள் காரியங்களை சாதித்துள்ளனர். உதாரணத்திற்கு பார்த்தோமேயானால், தஞ்சாவூர் பெரிய கோவில் பெருமைகளை நாம் பார்க்கிறோம். அதில் உள்ள சிற்ப வேலைகளையும், அந்தப் பிரதேசத்தில் கருங்கற்களே கிடையாது. எங்கிருந்தோ அவைகளை எடுத்துக் கொண்டு வந்து கல்லே இல்லாத ஒரு இடத்தில் கருங்கற்களினால் ஒரு

    பெரிய கோவிலை நம் முன்னோர்கள்/இராஜாக்கள் கட்டியிருக்கிறார்கள். அதில் உள்ள சிற்ப வேலைபாடுகளை பார்த்தால் மனிதனால் செய்ய முடியுமா என்றால் செய்ய முடியாத காரியங்களை, அது எல்லாம் கூட ஒரு அரசன் ஒரு இராஜா செய்தார் என்றால், இந்த பஹன் போன்ற தேவதைகளின் அனுக்கிரகத்தினால் தான் அது செய்யப்பட்டிருக்கிறது.*


    *கல்லணை என்ற ஒன்றை நாம் பார்க்கிறோம். இன்று வரையிலும் எந்த ஒரு சேதமும் இல்லாமல், அப்படியே இருக்கிறது இந்த கல்லணை என்றால், இந்த பஹன் போன்ற தேவதைகளின் அனுக்கிரகத்தினால் தான் இந்த அரசர்கள் எல்லாம் காரியங்களை செய்து முடித்திருக்கிறார்கள். அதனால் தான் இன்று வரையிலும் இருக்கிறது.*


    *_அப்படி அனைத்து காரியங்களையும் நமக்கு சாதித்துக் கொடுக்கக்கூடியது ஆன பஹனை நாம் தியானிப்போம். நாம் அனைவரும் சேர்ந்து ஆராதிக்க வேண்டும். அதிதி என்று சொல்லக்கூடிய தான தேவமாதாவின் புத்திரனான பஹனை பூஜை செய்வோம். எப்படிப்பட்டவர் பஹன் இந்த தேசத்தையே உயிரோடு இருக்கும்படி சூரியனை சாட்சியாகக் கொண்டு, காப்பாற்றக் கூடியவர். உயிர் சக்தியோடு இந்த தேசம் நடப்பதற்கு,

    காரணமாக உள்ளவர் இந்த பஹன். மேலும் எப்படிப்பட்டவர், இந்த தேசத்தை முழுவதும் நடத்துபவர் என்பதினால், அவர் எந்த அரண்மனையில் எந்த இராஜாவாக இருக்கிறார் என்றால் கிடையாது. தரித்திரன் ஆக ஜனங்களோடு ஜனங்கள் ஆக இருக்கக் கூடியவர். தான் ஒன்றும் இல்லாதவன் தரித்திரன் என்று காட்டக் கூடியவர். எந்த ஒரு காரியத்தையும் நினைத்த மாத்திரத்தில் சாதிக்கக்கூடிய இந்த பஹன். நாம் எப்படி அவரை ஆராதனை செய்கிறோம் அப்படி நமக்கு பலனைக் கொடுக்கக் கூடியவர்._*


    *நாம் தரித்திரனாக தேவதைகளை ஆராதனை செய்தால் அப்படிப்பட்ட பலன்களை கொடுப்பார். நாம் நன்றாக தேவதைகளை பூஜை செய்தோமே ஆனால், அதுபோல் கொடுப்பார். இராஜாக்கள் செய்வது போல் நிறைய கூடை கூடையாக புஷ்பங்களை/பழங்களை வைத்துக்கொண்டு, நிறைய

    நிவேதனங்களை செய்து தேவதைகளை ஆராதித்தால், இராஜாவாக இருந்து பலன்களை நமக்கு அள்ளிக் கொடுப்பார். ஒன்றுமே இல்லை என்று தரித்திரன் ஆக இருந்து நாம் பூஜை செய்தால், அந்தப் பலனை கொடுக்க கூடியவர். அப்படிப்பட்ட பஹனை, நாம் தியானம் செய்வோம் இந்த காலை வேளையில் என்று இந்த இரண்டாவது மந்திரம் பிரார்த்தனை செய்கிறது. மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X