Announcement

Collapse
No announcement yet.

bhagya suktham

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • bhagya suktham

    *24/02/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்ற தலைப்பில் முக்கியமானதொரு சம்ஸ்காரம் கர்ப்பாதானம் என்கின்ற ஒன்றை விரிவாகப் பார்த்தோம்.*


    *இந்த கர்ப்பாதானத்தை எப்படி செய்ய வேண்டும் எப்போது செய்ய வேண்டும் யார் செய்ய வேண்டும் யார் செய்து வைக்க வேண்டும் எந்த முறையில் செய்ய வேண்டும் இதனால் நாம் அடையக்கூடிய தான பலன்கள் அதில் சொல்லக்கூடியது ஆன மந்திரங்களின் பெருமைகள், இவைகளை விரிவாக தெரிந்து கொண்டோம்.*


    *இந்த கர்ப்ப காலத்திற்கு நாம் சொல்லக்கூடிய தான மந்திரங்களை அனுக்கிரகம் செய்து, அதற்கு அடுத்ததாக உடனேயே வேதம், இந்த பாக்கிய சூக்தத்தை வேதம் நமக்கு காண்பிக்கிறது.*


    *பஹஹா என்றால் கால தேவதையான சூரியனையும் குறிக்கும். ஐஸ்வர்யம் இதையும் குறிக்கிறது. நல்ல எண்ணங்களை குறிக்கிறது.*
    *அப்படிப்பட்ட பஹனை உத்தேசித்து நாம் சொல்லக்கூடிய தான மந்திரம் என்பதினால் அதற்கு பாக்ய சூக்தம் என்ற பெயர். இதை வேதம் ஒரு யாகத்தில் உபயோகப்படுத்தும் படியாக காண்பித்துள்ளது.*


    *அதாவது இந்த ப்ராதர் அக்னியும் என்று ஆரம்பிக்கக் கூடியதான இந்த மந்திரங்களை ஒரு யாகத்தில் உபயோகப்படுத்த வேண்டும். அந்த யாகத்தில் பஹஹா என்கின்ற தேவதை. அங்கே இந்த மந்திரங்களை சொல்லி செய்தால் ஆணுக்கோ பெண்ணுக்கோ மலட்டுத்தன்மை இருந்தால்கூட, அது நிவர்த்தி ஆகி, நல்ல குழந்தைகளைப் பெறலாம் என்று வேதம் நமக்கு காண்பிக்கின்றது.*


    *நல்ல குழந்தைகளை நாம் பெற வேண்டுமானால், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். தேக ஆரோக்கியம் இருக்க வேண்டும். மனதளவில் அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.*


    *மனதளவில் அவர்கள் தயாராக ஆவதற்கு இந்த மந்திரங்கள் பிரார்த்திக்கின்றது. மனதை நமக்கு சுத்தமாக/ஆரோக்கியமாக செய்வதற்கு மந்திரங்கள் தான் மருந்து நமக்கு.*


    *எவ்வளவோ வைத்திய வசதிகள் உலகத்தில் இன்று வந்தாகிவிட்டது. நகம் கேசம் இவைகளிலிருந்து ஆரம்பித்து இருதயம் வரையிலும், மாற்று அறுவை சிகிச்சை செய்து மாற்றக்கூடிய அளவிற்கு வந்து விட்டாலும் கூட மனதை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு மருந்துகள் இன்றும் வரவில்லை.*


    *ஏனென்றால் அது நம் கையில் இல்லை. இந்த மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், மந்திரங்களால் தான் முடியும். அதனால்தான் வேதம் என்கின்ற ஒரு பெரிய பொக்கிஷத்தை மகரிஷிகள் நமக்கு அனுக்கிரகம் செய்து, நாம் படிக்க வேண்டிய படிப்பாக வேதத்தை தமக்கு காண்பித்திருக்கிறார்கள்.*


    *வேத மந்திரங்கள் இல்லாமல் மனத்தெளிவு ஆரோக்கியத்தையும் நம்மால் பெற முடியாது. அதனால்தான் ஆங்காங்கு மந்திரங்களை நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத ஒரு வஸ்து மனசு. அந்த கண்ணுக்குத் தெரியாத ஒரு வஸ்துவை, சுத்தமாக ஆக்க வேண்டும்.

    ஏனென்றால் அந்த கண்ணுக்கு தெரியாத வஸ்து தான் நம்முடைய உடம்பை இயக்குவதற்கு தேவைப்படுகிறது. எனர்ஜி கரண்ட் இருக்கின்றது என்றால், அதை கண்ணில் காண்பிக்க முடியுமா முடியாது. ஆனால் (கரண்ட்) இல்லாமல் மின்சாரம் இந்த உலகமே இல்லை.*


    *மின்சாரம் போய் விட்டால் நம்முடைய வாழ்க்கையே இருண்டு போய் விடுகிறது. எதையும் சார்ஜ் செய்ய முடியவில்லை வெளிச்சமில்லை. எல்லாவற்றையும் இழந்து விட்டது போல் நிற்கிறோம்.*



    *எப்படி அந்த மின்சாரம் நம்முடைய கண்ணுக்குத் தெரியாத ஒரு வஸ்துவாக இருந்து நமக்கு உபயோகப் படுகின்றதோ அதேபோல்தான் மனதும். நம் கண்ணுக்குப் புலப்படாமல் நம் கூடவே இருந்து, நம்மை சரியாக இயங்க வைக்கிறது.*


    *இந்த கண்ணுக்குத் தெரியாத மனதை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, இன்னொரு கண்ணுக்குத் தெரியாத வஸ்து வேண்டும். அந்த கண்ணுக்குத்தெரியாத வஸ்துவை தான் நமக்கு, உறுதுணையாக இருந்து மன ஆரோக்கியத்தை பெற்று தருகிறது இந்த மந்திரங்கள்.*


    *அதிலும் இந்த கர்மாக்களில் சொல்லக்கூடிய தானே மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஜடமாக உள்ள வஸ்துவை கூட அது சைத்தன்யமாக செய்துவிடும் இந்த மந்திரங்கள்.*


    *ஒரு தர்ப்பை இருக்கிறது என்றால், தர்பையை பார்த்து ஒரு மந்திரத்தை சொல்ல வேண்டும் என்று வேதம் நமக்கு காண்பிக்கின்றது என்றால், அந்த தர்பையை பார்த்து மந்திரத்தைச் சொன்னால், தர்ப்பைக்கு உயிர்சக்தி வந்துவிடும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவை மந்திரங்கள்.*


    *அதை முறையாக நாம் அத்தியனம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் மகாபெரியவா நமக்கு நிறைய இடங்களில் காண்பித்துள்ளார். நிறைய உயர்வு அவர்களுடன் சென்று நமஸ்காரம் செய்து கல்யாணம் வருகிறது பெரியவா அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்று சொல்லும் பொழுது பெரியவா முதலில் சொல்லக்கூடியது என்னவென்றால் கல்யாண மந்திரங்களில் எல்லாம் உன் ஆத்து வாத்தியாரை வைத்துக்கொண்டு அத்தியனம் செய் என்று சொல்லி அனுகிரகம் செய்வார்.*


    *ஏனென்றால் அந்த மந்திரங்கள் தான் முக்கியம். இந்த கல்யாணம் ஆனது நல்ல முறையிலே நடக்கின்றது. அந்தக் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை யானது முழுமையாக ஏற்படுகின்றது என்றால் அதில் முக்கியமான பங்கு வகிப்பது மந்திரங்கள் தான். மாலை போட்டுக்கொண்டு நல்ல வஸ்திரங்களை உடுத்தி அந்த சபையில் உட்கார்ந்து அத்தனை பேர் முன்னிலையிலும் அந்த மாங்கல்ய தாரணம் செய்த நேரத்திலேயே / கையைப் பிடித்த நேரத்திலேயே ஒற்றுமை ஏற்பட்டு விடாது. அங்கே சொல்லக்கூடியது ஆன மந்திரங்களின் மூலமாகத்தான் நமக்கு ஒற்றுமை ஏற்படும்.*


    *ஒரு குழந்தைக்கு உபநயனம் செய்கின்றோம் என்றால், அந்த உபநயன கர்மாவில் சொல்லக்கூடிய மந்திரங்களினால் தான் அந்தக் குழந்தைக்கு வித்யா கிரகண சக்தி ஏற்படுகிறது. ஞாபக சக்தி ஏற்படுகிறது. அவன் படிக்கக்கூடிய தான படிப்பு அவனுக்கு முழுமையாக பயன்படுகிறது.*


    *அந்த உபநயன மந்திரங்கள் எல்லாம் சரியாக சொல்லாமல், உன்னை அனைத்தையும் சரியாக செய்யாமல் இருந்தால், அவன் படித்த படிப்பு அவனுக்கு உபயோகப்படாது. உன்னுடைய வாழ்க்கையும் மேன்மை படாது. அதை இந்நாளில் எவ்வளவு பார்க்கிறோம்.*


    *ஒவ்வொருவரும் படிக்க கூடியதான படிப்பிற்கும், அவர்கள் செய்யக்கூடிய தான வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. காரணத்தை நாம் யோசித்துப் பார்க்கவேண்டும். ஆகவே இந்த மந்திரிகள் எல்லாம் நமக்கு மிகவும் முக்கியம்.*


    *அதனால்தான் அனைத்து கருவிகளிலும், மந்திரங்களை முக்கியமாக சொல்லியிருக்கிறார்கள். அதிலே இந்த பாக்கிய சூக்தம் என்பது மிகவும் முக்கியம் தம்பதிகளுக்கு. தினமும் காலை வேளையில் இந்த பாக்கிய சூக்தத்தை சொல்லி நாம் எந்த காரியத்தை செய்தாலும், நமக்கு எப்போதும் வெற்றி தான் கிடைக்கும்.*


    *இந்த பாக்கிய சூக்தம் என்னவெல்லாம் பிராத்திக்கின்றது. பத்து லட்ச ரூபாய் பணம் நல்ல பட்டு வேஷ்டி தங்கம் நகைகள் வீடு வாசல் என்று பிரார்த்திக்கின்றதா? இல்லை நம்முடைய வாழ்க்கைக்கு என்ன தேவையோ, அதைத்தான் மந்திரம் பிரார்த்திக்கின்றது.*


    *நெய் சமித்து தர்பை இவைகளைத்தான் இந்த மந்திரங்கள் பிரார்த்திக்கின்றது. ஏனென்றால் நம்முடைய வாழ்க்கைக்கு அவர்கள் தான் தேவை. கட்டிக் கொள்வதற்கு வேஷ்டியும் சாப்பிடுவதற்கு அளவான ஆகாரமும் தான் அடிப்படை தேவைகள். அதை நமக்கு பகவான் அனுகிரகம் செய்திருக்கிறார் மந்திரங்கள் மூலமாக.*


    *அந்த மந்திரங்கள் அவைகளை நமக்கு தடையில்லாமல் கொடுக்கிறது. கட்டிக் கொள்வதற்கு வேஷ்டியும் சாப்பிடுவதற்கு ஆகாரமும் இல்லாமல் யாரும் இல்லை. இந்த இரண்டும் நமக்கு முழுமையாக கிடைக்கின்றது என்றால், அதுவே மந்திரங்களின் உடைய பெருமை தான்.*


    *நாம் ஆசைப்பட்டு அளவுக்கு அதிகமாக பிரார்த்திக்கின்றோம். அதையும் மந்திரங்கள் கொடுக்கும். அதை பாதுகாப்பதற்கான இட வசதிகள் நம்மிடையே இல்லை. அதிகப்படியாக எவ்வளவு கேட்டாலும் இந்த மந்திரங்கள் நமக்கு கொடுக்க முடியும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவை இந்த மந்திரங்கள்.*


    *மந்திரங்கள் உடைய பெருமைகளை நாம் தெரிந்துகொள்ளவேண்டும் அபஸ்வரமாக மந்திரங்களை சொல்லக்கூடாது. நாமாக மந்திரங்களை படிக்கக் கூடாது. ஒரு ஆச்சாரிய நீ வைத்துக்கொண்டு அந்த மந்திரங்களை எல்லாம் நன்றாக அத்தியனம் செய்து அவைகளை சொல்வதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
Working...
X