Announcement

Collapse
No announcement yet.

BHUMSUVANAM.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • BHUMSUVANAM.

    *07/03/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸுவனம் என்கின்ற ஒரு முக்கியமான அனுஷ்டானம் பற்றி மேலும் தொடர்கிறார்.*


    *இதில் செய்யக்கூடிய தான ஹோமத்தில், இதில் உபயோகிக்கக்கூடிய தான மந்திரங்கள் நமக்கு மிகவும் பலனைக் கொடுக்கக் கூடியது.*


    *_ஒவ்வொரு மகரிஷியும் ஒவ்வொரு விதமான மந்திரங்களை நமக்கு அனுக்கிரகம் செய்து இருக்கிறார்கள். இந்த மந்திரங்களைச் சொல்லி நாம் அந்த ஆகுதிகளை செய்தால், கர்ப்பத்தில் உற்பத்தியான குழந்தைக்குப் உயிரே இல்லை, என்றாலும்கூட, அந்தக் குழந்தைக்கு ஒரு உயிரைக் கொடுத்து, நல்ல மனநிலையை கொடுத்து, அந்த குழந்தையை பிறக்க வைக்கும் இந்த மந்திரங்கள்._*


    *அந்த மந்திரங்களின் உடைய அர்த்தம் ஆனது, அற்புதமாக பிரார்த்தனை செய்கிறது, பலவிதமான ஐஸ்வர்யங்களையும்/சுகங்களையும் இந்த மந்திரம் பிரார்த்தனை செய்கிறது.*


    *மொத்தம் எட்டு ஆகுதிகள் ஆபஸ்தம்ப சூத்திரத்தில் இந்த பும்ஸுவனம் செய்யும்பொழுது. அதாவது எட்டு ஹோமங்கள். இந்த எட்டிலும் பிரார்த்திக்க கூடியதான தெய்வம், முதலில் தாதா இரண்டாவது நமக்கு நல்ல புத்திரனையும் கொடுக்கக்கூடியதாக அக்னி, நல்ல வாரிசை பொருளாதார வசதியுடன் நமக்கு கொடுக்கக்கூடியவர் இந்திரன், இந்த மூன்று தெய்வங்களையும் நாம் பிரார்த்தித்து தான் அந்த ஆகுதி களை செய்கிறோம்.*


    *இந்த மூன்று தெய்வங்களையும் முக்கியமாகக் கொண்டு, நமக்கு ஆரோக்கியமான ஒரு குழந்தையை அனுகிரகம் செய்கிறார்கள் தேவதைகள்.*


    *நான் இந்த மந்திரங்களை சொன்னாலே போதும் அந்த தேவதைகள் அனுக்கிரகம் செய்து விடுவார்கள். நாம் அந்த தேவதைகளுக்கு எந்த பணமும் கட்ட வேண்டியதில்லை. அவர்களுக்கு என்று நாம் எதுவும் செய்ய வேண்டாம். இந்த ஆகுதிகள் மட்டும் செய்தால் போதும்.*



    *மந்தராதினாஹி தேவதாஹா என்று புராணம் காண்பிக்கின்றது. ஒரு மந்திரத்தைச் சொல்லி அந்த இடத்தில் நாம் ஆகுதியை செய்தால் தேவதைகள் தானாக அந்த பலனை நமக்கு அனுக்கிரகம் செய்து விடுவார்கள். கேட்க வேண்டும் என்றுதான் தேவதைகள் எதிர்பார்க்கின்றனர். கேட்காமல் தேவதைகள் நமக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள். நாம் என்ன நினைக்கிறோம் என்றால் நமக்கு என்ன கிடைக்க வேண்டும் என்று தேவதைகளுக்கு தெரியும், நான் எதுவும் கேட்க வேண்டாம் அவர்களே கொடுப்பார்கள், என்று ஒரு பேச்சு உண்டு ஆனால் அப்படி கிடையாது.*


    *கேட்காமல் கொடுக்கக் கூடாது என்பதுதான் தர்ம சாஸ்திரம். எதுவும் கேட்காமல் சொல்லவும் கொடுக்கவும் கூடாது என்பதினால், நாம் கேட்டு தான் பெற வேண்டும். இதுதான் நம்முடைய வேதத்தின் சித்தாந்தம். அதனால்தான் வேதம் அங்கங்கே அவ்வப்போது பிரார்த்தனை செய்யச் சொல்கிறது. இதை நான் அடையனும் வேணாம் கொடுக்கனும் என்று நிறைய பிரார்த்தனைகளை நாம் பார்க்கிறோம்.*



    *_காரணம் இந்த பிரார்த்தனைகளினால் நாம் நிறைய பெற முடியும் அதனால் கேட்க வேண்டும். ஆசைப்படு என்று தான் வேதம் காண்பிக்கின்றது. நான்கு விதமான புருஷார்த்தங்கள் என்று சொல்கிறோம். தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம். இந்த நான்கையும் வேதம் நமக்கு காண்பிக்கின்றது அதில் காமம் என்று ஒன்று இருக்கிறது, தர்மம் என்றால், நல்லவைகளை நிறைய செய்வது/கேட்பது/பேசுவது இவைகளுக்கெல்லாம் தர்மம் என்று பெயர்.

    அர்த்தம் என்றால் நல்ல பொருளாதார வசதியுடன் வாழ்வது. நம் வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதார வசதிகளை பெறுவது. அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் பணமாகவோ/வீடுவாசல் களாகவும் இருக்கலாம்/வாகனங்கள் ஆகவும் இருக்கலாம்/மனைவி குழந்தை களாகவும் இருக்கலாம் இவைகள் அனைத்திற்கும் அர்த்தம் என்று பெயர். மூன்றாவது காமம் அதாவது ஆசைப்படு என்று அர்த்தம். காமம் என்றால் வேறு ஏதோ அர்த்தம் என்று நினைக்கிறோம் அப்படி அல்ல. இது வேண்டும் இந்த நிலையை நாம் அடைய வேண்டும் என்கின்ற ஆசை இருக்க வேண்டும்.

    இந்த ஆசைப்படுதல் என்பது ஒரு முக்கியமான புருஷார்த்தம். எதற்கும் ஆசைப்பட வேண்டும். நான்காவது மோக்ஷம். பிறவிப் பயனை அடைவது. இந்த நான்கு விதமான புருஷார்த்தங்களில் காமம் என்றால் ஆசைப்படு என்று அர்த்தம். நான் இப்படிப்பட்ட நிலையை அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டு ஆசைப்பட்டு தான் ஒவ்வொன்றையும் நாம் அடைய வேண்டும். அதுதான் நிலைத்திருக்கும். இதைத்தான் வேதம் நமக்கு காண்பிக்கிறது._*


    *இந்த ஆசைகளை பூர்த்தி செய்யக்கூடிய தான் இந்த கால தேவதைகள். இவர்களை உத்தேசித்து தான் நாம் அந்த ஆகுதிகளை செய்கிறோம் பும்ஸுவனத்தில். அந்த மந்திரம் எப்படி பிரார்த்தனை செய்கின்றது என்றால், இந்த மந்திரங்களை வேதம் நமக்கு எப்படி அமைத்துக் கொடுத்திருக்கிறது என்று பார்த்தால் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. நமக்கு கர்ப்பத்தில் உற்பத்தியாகி வளரக் கூடியது ஆன குழந்தை, மன

    நிலையிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்/உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்/தாயாருக்கும் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும்/எந்த ஒரு சிரமமும் இல்லாமல் பிரசவம் ஆனது ஆகி அந்த குழந்தை முழுமையாக வரவேண்டும் என்பதை மட்டும் பிரார்த்தனை செய்யாமல், அந்தக் குழந்தை வேத வழியில் வாழ வேண்டும், என்றும் இந்த வேதமந்திரம் பிரார்த்தனை செய்கிறது.*


    *_அந்தக் குழந்தை வேதம் சொல்லக்கூடிய தான மார்க்கத்தில் வாழ வேண்டும். படிப்பது வேதமாக இருக்க வேண்டும். வாழ்வது வேதம் சொன்ன வழியில் இருக்க வேண்டும். உலகில் மற்றவர்களுக்கும் வேதம் சொன்ன வழியைச் சொல்ல வேண்டும். என்கின்ற முறையில் அந்த குழந்தை வாழ வேண்டும் என்று வேதமே ஆசைப்படுகிறது. ஏனென்றால் முதல் மந்திரம் காயத்ரி என்கின்ற சந்தஸ்சில் அமைந்துள்ளது._*



    *இரண்டாவது மந்திரம், திருஷ்டுப் என்கிற சந்தஸ்சில் அமைகிறது. மூன்றாவது மந்திரம் அனுஷ்டுப் என்கின்ற சந்தஸ்சில் அமைகிறது. இப்படி ஒவ்வொரு மந்திரங்களும், ஒவ்வொரு மீட்டரில் அமைத்துக் கொடுக்கிறது வேதம். இதுபோல் பார்ப்பது மிகவும் அரிது. நாம் ரிக்வேதத்தில் பார்த்தால், ஒரே மாதிரியான மீட்டரில் தான் மந்திரங்கள் வரும். எதிர் வேதத்திலும் பார்த்தால் அநேகமாக ஒரே விதமான மீட்டரில் தான் அமைத்துக்

    கொடுத்திருக்கம் ஒவ்வொரு அனுஷ்டான திற்கும். ஆனால் இந்த பும்ஸுவனத்தில் ஒவ்வொரு மந்திரத்தையும் ஒவ்வொரு மீட்டரில் அமைத்துக் கொடுக்கின்றது வேதம் காரணம், வேதத்தில் எவ்வளவு சந்தஸ்கள் இருக்கின்றது என்றால் அடிப்படையாக 7 சந்தஸ்கள் இருக்கின்றது. காயத்ரி, உஷ்ணிக்கு, திருஷ்டுப், அனுஷ்டுப், பிருகிர்தி, ஜகதி, பந்திஹி, என்று ஏழு சந்தஸ்கள்.*


    *7 மீட்டரில் தான் மந்திரங்கள் அமைந்துள்ளன. மொத்தம் வேதத்தில், 7 கோடியே 10 லட்சம் மந்திரங்கள் வேதத்தில் இப்போது நமக்கு உள்ளது. இப்போது உள்ள சாகைகளில் ஐந்து அல்லது ஆறு தான் இருக்கின்றது.*


    *இதில் இருக்கக்கூடிய தான மந்திரங்கள், 7 கோடியே 10 லட்சம் மந்திரங்கள் இருக்கிறது என்று ஒரு ஆராய்ச்சி செய்து சொல்கிறார்கள் இப்பொழுது. இவ்வளவு மந்திரங்களும் இந்த ஏழு மீட்டரில் தான் அமைந்துள்ளது. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு சக்தி உள்ளது. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு பலனைக் கொடுக்கக் கூடியதான சக்தி இருக்கிறது. இந்த பும்ஸுவனத்தில், ஒவ்வொரு மந்திரத்தையும் ஒவ்வொரு மீட்டரில் அமைத்துக்

    கொடுக்கிறது வேதம். காரணம் அந்த பிறக்கக்கூடிய தான குழந்தை ஆணோ/ பெண்ணோ வேத வழியில் வாழ வேண்டும், வேத வாரிசாக நமக்கு கிடைக்க வேண்டும் என்று இந்த மந்திரங்கள் நமக்கு பிரார்த்தனை செய்கிறது. அந்த முதல் மந்திரத்தினுடைய அர்த்தத்தை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.
Working...
X