Announcement

Collapse
No announcement yet.

BHUMSUVANAM.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • BHUMSUVANAM.

    09/03/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸுவனம் என்கின்ற ஒரு அனுஷ்டானத்தில் சொல்லக்கூடிய தான மந்திரங்கள் அதன் முக்கியத்துவத்தை மேலும் தொடர்கிறார்.*


    *அந்த ஹோம மந்திரங்களுக்கு அதர்வ மந்திரங்கள் என்ற பெயர். கேட்கக் கூடிய பலனை அப்படியே அனுகிரகம் செய்யக்கூடிய தான மந்திரங்கள். அதில் மூன்றாவதாக ஆகுதியில் சொல்லி செய்யக்கூடிய தான மந்திரம், தாதாவான பரமேஸ்வரன் அழியாத செல்வத்தை எனக்கு அனுக்கிரகம் செய்து கொடுக்கட்டும் இங்கே அது புத்திரன் வாரிசு இதுதான் அழியாத செல்வம்.*



    *_எப்படி இருக்க வேண்டும் அந்த வாரிசு, என்னுடைய வாழ்க்கையில் நான் மேலும் மேலும் மேன்மை அடைந்து, என்னுடைய வாழ்நாள் முழுவதும் மேன்மையை கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும் அந்த வாரிசு. மேலும் என்னுடைய வாழ்க்கைக்கு பயன்பட வேண்டும் அந்த குழந்தை. மேலும்

    என்னுடைய கடைசி வாழ்க்கை வரை எனக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் அந்த குழந்தை. அந்த அளவுக்கு ஆரோக்கியமாகவும் ஆயுளுடனும் இருக்கவேண்டும் அந்த குழந்தை. எந்தவிதமான குறைபாடும் இருக்கக் கூடாது. ஒரு குழந்தை பிறந்தவுடன் அது நமக்கு துணையாகவும் கடைசி காலம்

    நமக்கு பயனுள்ளதாகவும் இருக்க வேண்டுமே தவிர, நாம் அந்த குழந்தைக்கு துணையாக இருக்கிறோம் என்று இருக்கக்கூடாது. அப்படி அந்தக் குழந்தை எதிலும் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் தம்பதிகளாக இருவரும் இந்த பும்ஸுவனம் என்கின்ற அனுஷ்டான த்தை செய்கிறோம், பெரிய பலனை விரும்பி இதை நாங்கள் செய்கிறோம்._*


    *அந்தக் குழந்தைதான் சத்தியமான தனம். அதாவது அழியாத வஸ்து நம்முடைய வாரிசு. இந்த அழியாத செல்வத்திற்கு நாங்கள் இதை விரும்பி செய்கிறோம், நல்ல எண்ணத்தோடு இருக்க வேண்டும் அந்த குழந்தை. அந்தக் குழந்தைக்கு நல்ல எண்ணமானது எப்பொழுது ஏற்படும் என்றால், அழியாத ஒரு கல்வியை அந்த குழந்தை படிக்க வேண்டும். அழியாத செல்வத்தை அந்த குழந்தை பெற வேண்டும் அப்போதுதான் நல்ல மனநிலையில் இருக்க முடியும். அழியாத படிப்பு எது என்றால் வேதம் தான்.*


    *வேதத்திற்கு தான் அழிவே கிடையாது. நாம் உலக வாழ்க்கையிலே பார்க்கலாம். எத்தனையோ வருஷ காலமாக எத்தனையோ மதங்கள் இங்கே ஆண்டாளும் கூட, இன்று வரை நம்முடைய வேதமந்திரங்கள் நம்முடைய தர்ம சாஸ்திரம் சனாதன தர்மம் இருக்கிறது என்றால், அழியாத வஸ்து வேதம் தான் என்று தெரிந்து கொள்ளலாம்.*


    *மற்ற அனைத்தும் காலத்திற்குத் தகுந்தாற்போல் மாறிக்கொண்டே வருகிறது. எல்லா விஷயங்களும் மாறிவருகிறது உலகமே மாறி இருக்கிறது. ஆனால் நாம் சொல்லக்கூடிய தான வேத மந்திரம் மட்டும் அப்படியே இருக்கிறது.*


    *நம் முன்னோர்கள் நமக்கு எப்படி சொன்னார்களோ அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறோம் இன்று வரையிலும். இதற்கு அழியாத வஸ்து என்கின்ற வேதம் தான் காரணம். அப்படி இந்த அழியாத வஸ்துவை அந்த குழந்தை பெற வேண்டும்.*


    *இதன் மூலம் அந்த குழந்தையும் இல்லாத நிலையை அடைய வேண்டும். இப்படி இந்த மூன்றாவது மந்திரம் பிரார்த்தனை செய்கிறது.*


    *நான்காவது மந்திரம், திரிஷடுப் என்கின்ற மீட்டரில் அமைந்துள்ளது. தாதா வானவர் நெய் என்கின்ற இந்த வஸ்துவை கொடுக்கக்கூடிய எஜமானனான எனக்கு, நான் கேட்கக்கூடிய தான பலனை முழுமையாக எனக்கு கொடுக்க வேண்டும்.*


    *நான் எதை விரும்புகிறேன் நான் எதற்காக இந்த ஆகுதியை கொடுக்கிறேன். நல்ல வாரிசை பெற வேண்டும் என்பதற்காகத்தான் கொடுக்கிறேன். அந்த வாரிசு எப்படி இருக்க வேண்டும் நல்ல ஐஸ்வர்யம் மேலும் அந்த வாரிசும் நல்ல வாரிசு கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.*


    *குழந்தை என்று நமக்கு பிறந்துவிட்டது அதோடு நம்முடைய வம்சம் நின்று போய்விட்டது என்று இல்லாமல், அந்தக் குழந்தையும் நல்லவாரிசை கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அந்தக் குழந்தைக்கும் நல்ல கால வேளையில் கல்யாணம் நடக்க வேண்டும். நல்ல மனைவியையோ அல்லது நல்ல கணவனையோ அவர்கள் அடைந்து, நல்ல வாரிசை பெற வேண்டும்.*


    *அவ்வளவு தூரம் பிரார்த்திக்க கூடியதான எனக்கு, தேவதைகள் அனைவரும் சேர்ந்து எனக்கு இந்த அனு கிரகத்தை செய்ய வேண்டும். எப்படிப்பட்ட தேவதைகள் மரணமே இல்லாதவர்கள். அவர்கள் எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்கக் கூடியவர்கள்.*


    *பாலியம் யவ்வனும் வார்த்யஞ்யம் இளமைப்பருவம் யவ்வன பருவம் தேவதைகளுக்கு கிடையாது வயதான பருவம் என்பதெல்லாம் கிடையாது தேவதைகளுக்கு. எப்போதும் ஒரே நிலையில் உள்ள தேவதைகளை தான் நான் பிரார்த்தனை செய்கிறேன்.*


    *அந்த தேவதைகள், விஷ்வே தேவர்கள் என்று தேவதைகளில் இருக்கிறார்கள். அவர்கள்தான் பிறந்த ஒவ்வொருவருக்கும் தேவையானவற்றை கொடுக்கக் கூடியவர்கள். இந்த விஸ்வே தேவர்கள் யாருடைய உத்தரவின்பேரில் இதையெல்லாம் செய்கிறார்கள் என்றால், அதிதீ என்றால் தேவமாதா.

    இவருடைய வார்த்தையே மேற்கொண்டு, பிறந்த ஒவ்வொரு ஜீவராசிகளுக்கு மான உணவு, தேவையான ஆடை, தேவையான மன ஆரோக்கியம் இவைகளை அனுகிரகம் செய்கிறவர்கள் விச்வே தேவர்கள். இவர்களும் சேர்ந்து, நான் பிரார்த்திக்கக் கூடிய இவ்வளவு பெரிய ஐஸ்வர்யத்தை, வாரிசு என்கின்ற தனத்தை எனக்கு ஆரோக்கியமான நிலையில் கொடுக்க வேண்டும் என்று இந்த நான்காவது மந்திரம் பிரார்த்திக்கின்றது.

    மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X