Announcement

Collapse
No announcement yet.

seemantham.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • seemantham.

    *25/03/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாற்பது சம்ஸ்காரங்களின் முக்கியத்துவத்தை வரிசைப் படுத்திப் பார்க்கும் வகையில் மேற்கொண்டு தொடர்கிறார்.*


    *அதில் இப்போது சீமந்தம் என்கின்ற ஒரு முக்கியமான முகூர்த்தத்தை பார்க்கப்போகிறோம். இதை ஆபஸ்தம்பர் காண்பிக்கும் பொழுது சீமந்தோநயனம் என்று காண்பித்துள்ளார்.*


    *இந்த சீமந்த கர்மாவை முதல் கர்ப்பத்தில் நான்காவது மாதத்தில் செய்ய வேண்டும் என்று ஆபஸ்தம்பர் காண்பித்துள்ளார். முதலில் சீ மந்தத்தை காண்பித்து பிறகுதான் பும்ஸுவனத்தை காண்பிக்கின்றார் ஆபஸ்தம்பர்.*


    *காரணம் வேதம் எந்த வரிசையில் மந்திரங்களை நமக்கு காண்பிக்கின்றதோ, அந்த வகையில்தான் சொல்ல வேண்டும் என்கின்ற ஒரு அடிப்படையான சட்டம் இருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு முதலில் சீ மந்தத்தை ஆபஸ்தம்பர் காண்பிக்கிறார்.*


    *பிறகுதான் பும்ஸுவனத்தை காண்பிக்கின்றார். ஆனால் நாம் சம்ஸ்காரங்கள் வரிசைப்படுத்தும் போது முதலில் பும்ஸுவனம் பிறகுதான் சீமந்தம். சீமந்தோநயனம் என்பது அந்த கர்மாவினுடைய என்னுடைய பெயர். இது ஒரு முக்கியமான அனுஷ்டானம்.*


    *தர்ம சாஸ்திரம் இதைப்பற்றி நிறைய தகவல்களை நமக்கு காண்பிக்கின்றது. புராணங்களும் நிறைய தகவல்களை சொல்லியிருக்கிறது. அந்தப் பெண்ணிற்காக செய்யப்படுவது இந்த சீமந்தம் என்பது நான்காவது மாதத்தில் இதை செய்ய வேண்டும்.*


    *கர்ப்பத்தில் குழந்தை உற்பத்தி ஆனவுடன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சக்தியானது அந்த குழந்தைக்கு கிடைக்கிறது. தாயாரிடம் இருந்து அந்த குழந்தை அந்த சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. இந்த நான்காவது மாதம் என்று எதற்காக சொல்லியிருக்கிறார் என்றால், அதுதான் ரொம்ப முக்கியம்.*
    *அந்தக் குழந்தைக்கு கழுத்திற்கு மேல் உள்ள பாகங்களுக்கு சக்திகளை பெறுவது இந்த நான்காவது மாதம். நான்காவது மாதத்தில் தான் அந்த குழந்தைக்கு இரத்த ஓட்டம் சீராக கிடைக்க ஆரம்பிக்கின்றது. அதுவரை ஒரு சீர் இல்லாமல் இருக்கும்.*


    *நான்காவது மாதத்தில் தான் அந்த குழந்தைக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்க ஆரம்பிக்கிறது. மேலும் எலும்பிற்கு சக்தியைக் கொடுக்கக் கூடியது இந்த நான்காவது மாதம். எலும்பை அடிப்படையாகக் கொண்டுதான் நம் உடம்பு செயல்படுகிறது.*


    *நம் உடல் பூராவும் நாடி நரம்புகள் ஓடுகின்றது. இந்த நரம்புகள் பூராவும் எலும்பு அடிப்படையாகக் கொண்டுதான் வியாபித்திருக்கிறது. சோடியம் பொட்டாசியம் மக்னீசியம் கால்சியம் இது போன்ற சத்துக்கள் சொல்கிறோம். இது எல்லாம் தாயாரிடம் இருந்து அந்த குழந்தைக்கு கிடைக்கின்றது கர்ப்பத்தில் இருக்கின்ற வரையிலும்.*


    *இந்த சத்துக்கள் எல்லாம் அந்த குழந்தைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய காலம் தான் இந்த நான்காவது மாதம். மேலும் கழுத்திற்கு மேலே தான் நமக்கு அனைத்துமே இருக்கிறது. ஒரு வண்டியை எடுத்துக் கொண்டால் (கார்/பஸ்) முன்னால் இருக்கிறது எஞ்சின். இதுதான் பிரதானம். அதுபோல்தான் நம்முடைய உடலில் பிரதானம் எதுவென்றால் ஒன்று இதயத்தை சொல்லுவோம், இல்லையென்றால் கிட்னி என்று சொல்லுவோம், ஆனால் பிரதானம் எதுவென்றால் தலை பாகம் தான்.*


    *ஆகையினாலே தான் ஆங்கிலத்தில் ஹெட் என்று சொல்கிறோம் முதல். தலையில்லாமல் உடம்பில் எந்த பாகமும் செயல்படாது. உடலில் உள்ள அனைத்து பாகங்களும் செயல்படுவதற்கான கண்ட்ரோல் தலையில் தான் உள்ளது. முக்கியமாக மூளைப் பகுதி என்பதை தலையில்தான் பகவான் வைத்து கொடுத்துள்ளார்.*


    *அந்த மூளைப் பகுதியில் சில ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கிறது இந்த நான்காவது மாதத்தில் தான் என்று கருடபுராணம் காண்பிக்கின்றது. ஆண்களுக்கு சில விதமான ஹார்மோன்களும் பெண்களுக்கு என்று சில ஹார்மோன்களும் இருக்கின்றன. அதெல்லாம் சீராக சுரப்பதற்கான காலம் இந்த நான்காவது மாதம்.*


    *மூளைப் பகுதி என்றால் அனைவருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்று நாம் நினைப்போம், ஆனால் மருத்துவரிடம் கேட்டால் இரண்டு பேருக்கும் வித்தியாசம் இருக்கிறது. கார் டாக்ஸ் இன்னும் சில சுரப்பிகள் சுரக்கின்றன. இதெல்லாம் பெண்களுக்கு மட்டும்தான் சுரக்கக்கூடிய ஹார்மோன்கள்.*


    *மருத்துவரிடம் கேட்டால் இதைப்பற்றி விரிவாக சொல்லுவார்கள். எல்லாம் எங்கு சொல்லப்பட்டு இருக்கிறது என்றால் கருடபுராணம் தான் நமக்கு விரிவாக காண்பிக்கிறது. ஒரு அத்தியாயமே தனியாக இருக்கிறது கருடபுராணத்தில்.*


    *_இந்த ஹார்மோன்கள் எல்லாம் எந்த வரிசையில் உற்பத்தி ஆகிறது என்பதை வரிசைப்படுத்தி காண்பிக்கிறது கருட புராணம். 10 மாத காலம் கர்ப்பம் என்றால் முதல் மாதத்தில் இருந்து, குழந்தைக்கு முதல் மாதத்திலிருந்து என்ன அங்கமெல்லாம் எவ்வாறு/எப்படி உருவாகின்றன, தாயாரிடம் உள்ள எந்த சக்தியை கொண்டு அந்த அங்கம் உருவாகிறது, இதை கருடபுராணம் காண்பிக்கிறது._*


    *_அதை அடிப்படையாகக் கொண்டுதான் பரிகாரங்களும் கருடபுராணம் சொல்கிறது. கர்ம விபாஹா அத்தியாயத்தில் எந்த அங்கம் ஒருவனுக்கு சரியாக செயல்படவில்லையோ, அந்த அங்கம் எதனால் செயல்படவில்லை, அதற்கான காரணத்தையும், இது எந்த பாவத்தினால் அந்த அங்கத்தில் குறை ஏற்படுகிறது என்பதையும், அதற்கான பரிகாரத்தையும் கருடபுராணம் நமக்கு காண்பிக்கிறது._*


    *இவ்வளவுக்கும் காரணம் அந்த தாயாரிடம் இருந்து அந்த குழந்தை பெறக்கூடிய சக்தியை பொருத்து அமைகிறது. இதெல்லாம் நடக்கக் கூடியது அந்த நான்காவது மாதத்தில் தான் என்று ஜீவோத்பத்தி அத்தியாயத்தில் கருடபுராணத்தில் சொல்லப்படுகின்றது. இந்த ஹெட் தலை பாகம் முழுமையாக ஆரம்பித்து செயல்படக்கூடிய காலம் இந்த நான்காவது மாதம் என்கின்ற காரணத்தினால் தான், நான்காவது மாதத்தில் இந்த சீமந்தம் செய்ய வேண்டும் என்று காண்பிக்கிறார். இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப் பட்டிருக்கின்றது இதை கருடபுராணமும் காண்பிக்கின்றது ஆபஸ்தம்பறும் காண்பிக்கிறார். அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X