Announcement

Collapse
No announcement yet.

yama tharpanam etc.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • yama tharpanam etc.

    03-11-2021. yama tharpanam.






    கிழக்கு பக்கம் பார்த்து உட்காரவும். ஆசமனம் செய்யவும்.






    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. ப்ராணாயாமம்;






    மமோ பாத்த ஸமஸ்த துரிதய க்ஷயத் வாரா ஸ்ரீ் பரமேஸ்வர ப்ரீத் யர்த்தம்
    சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மணஹ த்வீதியே பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்ஸதி தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்புத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலி வாஹன சகாப்தே அஸ்மின் வர்த்த மானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஶ்டி


    ஸம்வத்ஸரானாம் மத்யே ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் சுப திதெள ஸெளம்ய வாஸர ஹஸ்த நக்ஷத்ர விஷ்கம்ப நாம யோக பத்ர கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சதுர்தசியாம் சுப திதெள ம உபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்




    ஆஸ்வயுஜ க்ருஷ்ண பக்ஷ சதுர்தசி புண்ய காலே யம தர்ப்பணம் கரிஷ்யே. என்று சொல்லி கைகளை துடைத்து க்கொண்டு






    பூணல் வலம்.( உபவீதி ) கையில் மஞ்சள் கலந்த அக்ஷதை வைத்து கொண்டு கிழக்கு நோக்கி நுனி விரல்கள் மூலம் ( தேவ தர்ப்பணம் ) ஜலத்தால் அர்க்கியம் விடவும். தந்தை இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோரும் இதை செய்யலாம். மங்கலாக்ஷதை இல்லாமலும் செய்யலாம்.








    யமாயதர்மராஜாய ம்ருத்யவே தா அந்தகாயச, வைவஸ்வதகாலாய சர்வபூத க்ஷயாய சஒளதும்பராய தக்னாய நீலாயபரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராயசித்ரகுப்தாயவை நம: இதயே தர்பணமாக செய்ய வேண்டும்.
    மூன்று தடவைகள்.ஒவ்வொன்றும். தர்ப்பிக்கவும்.


    1.யமாயநம: யமம்தர்பயாமி.
    2.தர்மராஜாயநம;தர்மராஜம்தர்பயாமி
    3.ம்ருத்யவேநம:ம்ருத்யும்தர்பயாமி.
    4.அந்தகாயநம:அந்தகம்தர்பயாமி.


    5.வைவஸ்வதாயநம:வைவஸ்வதம்தர்பயாமி
    6.காலாயநம:காலம்தர்பயாமி.




    7.சர்வபூதக்ஷயாய நம:ஸர்வபூதக்ஷயம் தர்பயாமி.
    8.ஒளதும்பராயநம;ஒளதும்பரம்தர்பயாமி.


    9.தத்நாயநம:தத்நம்தர்பயாமி
    10.நீலாயநம:நீலம்தர்பயாமி
    11.பரமேஷ்டிநேநம:பரமேஷ்டிநம்தர்பயாமி.




    12.வ்ருகோதராயநம:வ்ருகோதரம்தர்பயாமி.
    13.சித்ராயநம:சித்ரம்தர்பயாமி


    14.சித்ரகுப்தாய நம:சித்ரகுப்தம் தர்பயாமி..


    தெற்கு திசைநோக்கி நின்று கொண்டு கீழ்காணும் ஸ்லோகம் சொல்லி யமதர்ம ராஜனை ப்ரார்த்தித்து கொள்ளவும்.


    யமோ நிஹந்தாபித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோதண்ட தரஸ்ச கால: ப்ரேதாதிபோதத்த க்ருதாந்தகாரி க்ருதாந்தஏதத் த சக்ருஜ் ஜபந்தி. ---நீலபர்வத சங்காச ருத்ரகோப ஸமுத்பவ காலதண்டதர ஸ்ரீ மந் வைவஸ்வத நமோஸ்துதே. ஆசமனம்.


    am-50gm, வாயுவிடங்கம்




    krambhu-50gm, க்ராம்பு
    vaal milagu-50gm, வால்மிளகு
    sathakuppai-50 gm, சதகுப்பை




    seeragam-50gm, ஜீரகம்
    perunjeeragam-50gm, பெருஞ்ஜீரகம்
    kasturi manjal-50 gm, கஸ்தூரி மஞ்சள்




    athimathuram 50 gm, அதிமதுரம்
    virali manjal-50gm, விராளி மஞ்சள்
    adhi vidayam-50gm, அதிவிடயம்




    kadukkai poo-50gm, கடுக்காய்
    sirunaagap poo-50 gm, சிறுநாகப்பூ
    thaalisa pathri-50 gm, தாளிசாபத்திரி




    kaattaathi poo-50, காட்டத்திபூ
    omam-250gm, ஓமம்




    ghee- நெய் தேவையான அளவு.
    honey enough quantity. தேன் தேவையான அளவு.


    மேற் கண்ட பொருட்களை நாட்டு மருந்து கடையில் வாங்கி வறுத்து மிக்ஸியில் பொடித்து தீபாவளி லேகியம் செய்து சாப்பிடலாம்.






    தீபாவளி 03-11-2021 இரவு; 04-11-2021 விடியற்காலை.


    நிர்ணய சிந்து—147:--- “”தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவள்யாஸ் சதுர்தசீம் ப்ராத: ஸ்நாநம் து ய: குர்யாத் ஸ: யம லோகம் ந பச்யதி””.


    அதிகாலை 5-30 மணிக்கு முன்பாக நல்லெண்ணை தேய்த்து வெந்நீரில் ஸ்நாநம் செய்ய வேன்டும்.. புதிய வஸ்த்ரம் தரிக்கவும். பட்டாசு வெடித்து சந்தியா வந்தனம் , பூஜை செய்து உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்.


    ஸ்நாநம் செய்யும்போது அபாமார்கம் என்னும் நாயுருவி செடியை கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி மூன்று முறை தலையை சுற்றி தூர எறிந்து விட வேண்டும். இதனால் நரக பயம் ஏற்படாது.


    நிர்ணய சிந்து-148----அபாமார்க மயே தும்பீம் ப்ரபுன்னாட மதாபரம்
    ப்ராமயேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாய வை


    ஸீதா லோஷ்ட ஸமாயுக்த ஸ கண்டக தளான்வித


    ஹர பாபம் அபாமார்கம் ப்ராம்யமாண: புந:புந;








    கார்த்திகை ஸ்நானம் 05-11-2021 முதல் 04-12-2021 முடிய.


    ஐப்பசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் கார்த்திகை சாந்திரமான மாதம் ஆவதால் இன்று முதல் தினந்தோறும் ஸூர்ய உதயத்திற்கு முன்பாக அதாவது 6 மணிக்கு முன்பாக தினமும் ஸ்னாநம் செய்ய வேண்டும்.


    இதற்கு கார்த்திகை ஸ்நானம் எனப்பெயர் .இதனால் நாம் அறியாமல் செய்யும் பாபம் விலகி மனதில் சுத்தமான எண்ணங்கள் உன்டாகும். இன வேறுபாடின்றி ஆண்கள் பெண்கள் எல்லோரும் இதை செய்யலாம்.


    ஸ்நானம் செய்யும் போது கூற வேண்டிய மந்திரம்.




    கார்த்திகே அஹம் கரிஷ்யாமி ப்ராதஸ் ஸ்நானம் ஜநார்தன: ப்ரீத்யர்த்தம் தவ தேவேச தாமோதர மயா ஸஹ.


    ஸ்நானம் செய்துவிட்டு காய்ந்த ஆடைகள் உடுத்திகொண்டு நெற்றிக்கு இட்டுகொண்டு மயா க்ருத கார்த்திக ஸ்நானாங்கம் அர்கிய


    ப்ரதானம் கரிஷ்யே என சங்கல்பம் செய்துகொண்டு கையில் ஜலம் எடுத்துக்கொண்டு அர்க்கியம் விடவும் கீழ் கண்ட மந்திரம் சொல்லி.


    வ்ரதிந: கார்த்திகே மாஸி ஸ்நானஸ்ய விதிவன் மம க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் தநுஜேந்திர நிஷூதன ஶ்ரீ க்ருஷ்ணாய நம: இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.


    நித்ய நைமித்திகே க்ருஷ்ண கார்திகே பாபநாசனே க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் ராதயா ஸஹிதோ ஹரே ; ஶ்ரீ ஹரயே நம: இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.


    அநேன அர்க்கிய ப்ரதாநேன ஶ்ரீ ஹரி: ப்ரீயதாம் எனச்சொல்லி கார்த்திகை மாதம் முழுவதும் செய்ய முடியா விட்டலும் முடிந்த நாட்களில் செய்யலாம்.




    லக்ஷ்மி குபேர பூஜை. 04-11-2021.


    லக்ஷ்மி குபேர பூஜை செய்ய முதலில் 16 மாத்ரு கண பூஜையும், பிறகு நவ தான்யங்களில் நவ கிரஹங்களை ஆவாஹனம் செய்து, தர்பையினால் கூர்ச்சம் செய்து அதில் எட்டு லோக பாலகர்களை ஆவாஹனம் செய்து பிறகு லக்ஷ்மி தேவியை பூஜிக்க வேண்டும். 16 நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.




    விக்னேஸ்வர பூஜை, ஸங்கல்பம், கலச பூஜை, 16 மாத்ரு கண பூஜை= ஓம் கெளர்யை நம: பத்மாயை நம: ஶஸ்யை நம: மேதாயை நம: ஸாவித்ரியை நம: விஜயாயை நம: ஜயாயை நம: தேவ ஸேனாயை நம:


    ஸ்வதாயை நம: ஸ்வாஹாயை நம: மாத்ருப்யோ நம: லோக மாத்ருப்யோ நம: த்ருத்யை நம: புஷ்ட்யை நம: துஷ்டியை நம: ஆத்ம தேவ்யை நம: த்யாயாமி, ஆவாஹயாமி, அர்க்கியம்,


    பாத்யம், ஆசமணீயம் ஸமர்பயாமி, ஸ்நபயாமி, ஸ்நானாந்திரம் ஆசமணியம் சமர்ப்பயாமி. வஸ்த்ரம், கந்தம்,குங்குமம், புஷ்ப தூப தீபாதி ஸகல உபசாரார்த்தே அக்ஷதான் ஸமர்ப்பயாமி.


    கதலி பழம் நிவேதயாமி. வாழை பழம் நிவேதனம் செய்யவும்.




    நவகிரஹ பூஜை:- நவகிரஹ தான்யங்கள் மீது நவகிரகங்களை புஷ்பம் அக்ஷதை எடுத்து கொண்டு அஸ்மின் மண்டலே அதிதேவதா ப்ரதி அதி தேவதா ஸஹிதம் ஆதித்ய கிரஹம் த்யாயாமி ஆவாஹயாமி


    என்று வரிசையாக ஆவாஹனம் செய்து விட்டு ஆதித்யாதி நவகிரஹ தேவதாப்யோ நம: ஆஸனம், பாத்யம், ஆசமனீயம், வஸ்த்ர யக்யோப வீத உத்தரீயார்த்தம் , ஆபரணார்த்தம் அக்ஷதான் ஸமர்பயாமி.கந்தம், குங்குமம், அக்ஷதை ஸமர்பயாமி.






    புஷ்பானி பூஜயாமி வரிசையாக அர்ச்சனை செய்யவும். தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், கற்பூரம், ப்ரதக்ஷிண நமஸ்காரம்.


    லோக பால பூஜை கூர்ச்சத்தில் செய்யவும். மஹா லக்ஷ்மி பூஜாங்க பூதாம் ப்ருஹ்ம விஷ்ணு, த்ரியம்பக க்ஷேத்திர பால பூஜாம் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்து கொள்ளவும்.


    அஸ்மின் கூர்ச்சே ப்ருஹ்மன் ஸரஸ்வத்யா ஸஹ இஹ ஆகச்ச ஆகச்ச ஸ ப்ரஸ்வதி ஸஹித ப்ருஹ்மானம் ஆவாஹயாமி ஆசனம் ஸமர்ப்பயாமி.


    லக்ஷ்மி விஷ்ணுப்யோ நம: ஆவாஹயாமி, த்யாயாமி, ஆஸனம் சமர்பயாமி.




    துர்கா த்ரயம்பிகாப்யாம் நம: த்யாயாமி, ஆவாஹயாமி, ஆஸனம் ஸமர்பயாமி.


    க்ஷேத்திர பால பூமிப்யாம் நம: த்யாயாமி, ஆவாஹயாமி, ஆஸனம் ஸமர்பயாமி என்று அக்ஷதை சேர்த்து, அர்க்கியம், பாத்யம், ஆசமனீயம்,ஸ்நபயாமி ,ஸ்நானாந்திரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி உத்திரணி தீர்த்தம் காண்பித்து பேலாவில் சேர்க்கவும்.


    ப்ருஹ்மாதீனாம் வஸ்த்ர உத்தரீய கந்த புஷ்ப தூப தீபாதி ஸமஸ்தோப சாரான் ஸமர்ப்பயாமி.அக்ஷதை சேர்க்கவும்.ப்ருஹ்மாதிப்யோ நம: கதலி பலம் நிவேதயாமி. ப்ருஹ்மாதிப்யோ கற்பூர நீராஞ்சனம் ஸமர்ப்பயாமி.


    கையை கூப்பிகொண்டு விஸ்வக்ஸேனம் நமஸ்க்ருத்ய பிதாமஹம் விஷ்ணும் ருத்ரம், ஶ்ரியம், துர்காம், வந்தே பக்த்யா ஸரஸ்வதீம், க்ஷேத்ராதிபம் நமஸ்க்ருத்ய திவா நாதம் நிஶாகரம் தரணீ கர்ப ஸம்பூதம் ஶஶி புத்ரம் ப்ருஹஸ்பதிம்.


    தைத்யாசார்யம் நமஸ்க்ருத்ய ஸூர்ய புத்ரம் மஹா க்ரஹம் ராஹு கேது நமஸ்க்ருத்ய யக்யாராம்பே விஶேஷத:




    ஶக்ராத்யா தேவதாஸ்ஸர்வா: முனீஸ்ச ப்ரணமாம்யஹம் கர்கம் முனீம் நமஸ்க்ருத்ய நாரதம் முனி ஸத்தமம். வஸிஷ்டம் முனிஶார்தூலம் விஸ்வாமிஸர்த்ரம் ப்ருகோஸ்ஸுதம் வ்யாஸம் முனீம் நமஸ்க்ருத்ய ஆசார்யாம்ஸ்ச தபோதனாத்.


    ஸர்வான் தான் ப்ரணமாம் யேவம் யக்ஞ ரக்ஷா கரான் ஸதா ஶங்க ஶக்ர கதா ஶாரங்க பத்ம பாணீர் ஜனார்தன: ஸர்வாஸு திக்ஷுரக்ஷேன் மாம் யாவத் பூஜா வஸானகம்.


    பிறகு லக்ஷ்மி பூஜை 16 உபசார பூஜை; ஈசானாதி பூஜை




    ஈசானாய நம: ஶஶினே நம: மருத்ப்யோ நம: ஸூர்யாய நம: விஶ்வ கர்மணே நம: குரவே நம: அதர்வாங்கிரோப்யாம் நம: ப்ரஜாபதயே நம:


    விஶ்வேப்யோ தேவேப்யோ நம: அமர ராஜாய நம: அஶ்வினிப்யாம் நம: மித்ரா வருணாப்யாம் நம: விஷ்ணவே நம: ஈஶானாதிப்யோ நம: ஷோட ஶோபசார பூஜார்த்தே புஷ்பானி ஸமர்ப்பயாமி .


    வடக்கு பக்கத்தில் குபேரனுக்கு 16 உபசார பூஜை .




    லக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம். ப்ரார்த்தனை.


    விசுவ ரூபஸ்ய பார்யாஸி பத்மே பத்மாலயே சுபே மஹாலக்ஷ்மி நமஸ்துப்யம் ஸுக ராத்ரிம் குருஷ்வ மே. விஷ்ணோர் வக்ஷஸி பத்மே சகடகே சக்ரே ததாம்பரே லக்ஷ்மி நித்யா ததாஸி த்வம் மயி நித்யா ததாபவ நமஸ்தே ஸர்வ தேவானாம் வரதாஸி ஹரி ப்ரியே.யாக திஸ்த்வத் ப்ரபன்னானாம் ஸா மே பூயாத் த்வத் அர்ச்சனாத்.


    இந்திரனை ப்ரார்திக்க ஸ்லோகம். விசித்ரை ராவதஸ்தாய பாஸ்வத் குலிஶ பாணயே பெளலோம் யாலி தாங்காய ஸஹஸ்ராக்ஷாய தே நம:




    குபேரனை ப்ரார்திக்க ஸ்லோகம்.


    தனதாய நமஸ்துப்யம் நிதி பத்மாதி பய ச பவந்து த்வத் ப்ரஸாதான் மே தன தான்யாதி ஸம்பத;


    ஹேமாத்ரி புத்தகம் இம்மாதிரி பூஜை செய்பவர் வீட்டிலும் செய்பவரிடத்திலும் லக்ஷ்மி தேவியின் பரிபூர்ண கிருபை கிடைக்கும் எங்கிறது.
Working...
X