பெரியவா திருவிசநல்லூர் என்ற இடத்தில் இருந்தபோது இரண்டு கண்ணும் தெரியாத ஸ்ரீவித்யா உபாசகி ஒருவர் வந்தார். அது தெரிந்த பெரியவா தன்னிடம் கைங்கரியம் செய்து வந்த கண்ணனை அழைத்து, அவருக்கு தங்க இடம் முதலிய ஏற்பாடுகளைச் செய்யும்படிச் சொன்னார். மேலும் அவர் மிகுந்த ஆசாரமுடையவர். ஆதலால், நீயே ஒரு பலகாரம் செய்து கொடுத்துவிடு என்றும் கூறினார்.
நானாகவே அவர் இருக்குமிடம் சென்று தரிசனம் தருகிறேன்.கண்தெரியாமல் அவர் என்னைத் தேடி வர ண்டாம்என்றும் தெரிவிக்கச் சொன்னார். கண்ணன் அவ்வாறே செய்தார். சிறிது உப்புமாவைக் கிண்டி அவளெதிரே வைத்து சாப்பிடுங்கள் என்று உபசரித்த கண்ணனுக்கு அதிசயம் ஒன்று காத்திருந்தது.
அதை நைவேத்தியம் செய்வது போல் சுற்றிவிட்டு அந்த அம்மாள் தன் மார்பிலே கையை வைத்தார். உடனே அவள் கையில் ஒரு ஸ்ரீசக்கரம் வந்துசேர்ந்தது. மறுபடியும் ஏதோ செய்தார். அது மறைந்துவிட்டது. அதைப் பார்த்த கண்ணன், பெரியவாளை அவர் தரிசனம் செய்யும்போது தானும் கூட இருப்பதென்று முடிவு செய்தார்.

இவர் என்ன மாய மந்திரங்கள் செய்யப் போகிறாரோ! இவருக்கு சுவாமிகளிடமிருந்து என்ன கிடைக்கப் போகிறதோ? என்ற கேள்விக்குறிகளால் ஆவலுடன் காத்திருந்தார். பெரியவாளிடம் போய் அவர் தரிசனத்துக்குக்காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி, தான் எதிர்பார்க்கும் சந்தர்ப்பம் சீக்கிரம் வராதா என்று ஏங்கினார்.


ராத்திரி வரேன்னு சொல்லிவிடு என்று அவரைப் பெரியவா அனுப்பப் பார்த்தார். கண்ணனுக்கு ஒவ்வொரு விநாடியும் யுகமாகக் கழிந்தது.எதிர்பார்த்திருந்த நேரமும் வந்தது.


இரவு. எலெக்ட்ரிக் விளக்குகள் இல்லாத காலம்.அங்கொன்றும் இங்கொன்றும் முணுக்முணுக் என்று எரியும் கைவிளக்குகள் ஒளியில் பெரியவா நடந்து வந்து அந்த அம்மாவின் எதிரில் அமருகிறார்.

நான் வந்துவிட்டேன்! என்று குரல் கொடுக்கிறார். அவளும் நமஸ்கரித்து விட்டு உட்காருகிறாள். எதற்கு வந்திருக்கிறாய்? என்று வினவுகிறார் எல்லாம் தெரிந்த சுவாமிகள்.

உங்களுக்குத் தெரியாதா சுவாமி! எனக்கு இன்னும் சஹஸ்ரகாரத்தில் ஜோதி தரிசனம் கிடைக்கவில்லையே! எனக்கு அதுதான் வேணும்.அதற்காகத்தான் வந்தேன்!என்கிறாள்.

என்ன நடக்கப் போகிறதோ? என்று கண்ணன் ஆவலுடன் காத்திருக்கபரமாச்சார்யாளோ, நிதானமாக, அப்படியா! நீ சிறுது நேரம் தியானம் பண்ணு! என்றார்.

கண்ணனிடம், நான் ஜாடை காட்டுவேன்.அப்போது எல்லா விளக்குகளையும் அணைத்துவிடு என்று கட்டளை இடுகிறார். காலை முதல் அந்த நொடிக்குக் காத்திருந்த கண்ணனுக்குப் பெருத்த ஏமாற்றம்.கும்மிருட்டில் நடப்பது ஒன்றுமே தெரியாதே..என்ன செய்வது? என்று ஏதுவுமே செய்ய முடியாதே!

பெரியவா சொன்னவுடன் விளக்குகள் அணைக்கப்பட்டன. அடுத்த இரண்டாவது நிமிடம் அம்மையாரிடமிருந்து பெரிய கூக்குரல் எழுந்தது.

நான் ஜோதி தரிசனம் கண்டேன், கண்டேன்! என்று கூத்தாடினார். போதும்!போதும்!காமாட்சி! நிறுத்திவிடு! நிறுத்திவிடு! என்று அலறினாள்.உடனே பெரியவா விளக்கையெல்லாம் ஏத்தச் சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்து மறைந்துவிட்டார்.


போவதற்கு முன் கண்ணனிடம், அந்த அம்மாவை ஊருக்கு அனுப்பி விடு! என்று சொன்னார்.

அந்த அம்மாள் கிளம்புமுன், கண்ணன் அவரிடம், என்ன நடந்தது? ஏன் கத்தினீர்கள்? நீன்ங்களாவது சொல்லி விட்டுப்போவீர்களா! என்று கெஞ்சினார்.
அவரும், நான் கேட்ட ஜோதி தரிசனம் சஹஸ்ராரத்தில் கிடைத்துவிட்டது. அதை இரண்டு

நிமிடத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியாததால் நிறுத்தச் சொல்லி அலறினேன்! என்றார்.

எப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்தவராக இருந்தால் இத்தனை எளிதில் ஒருவருக்கு ஜோதி தரிசனம் காணும்படிச் செய்ய முடியும்? பெரியவா இறைவன்தான் என்று நினைத்தால் மட்டுமே புரியும்! தவிர, மனிதர்களால் இப்படி ஒரு சாதனையைச் செய்ய முடியாது.

எத்தனை பாடுபட்டாலும் பெற முடியாத ஒரு தரிசனத்தை, ஒரு ரயிலில் வந்து பார்த்துவிட்டு, அடுத்த ரயிலில் ஊருக்குப்புறப்படுகிறார் ஒரு பெண். அந்த அதிசயத்துக்கு வேறு எப்படி விளக்கம் தர முடியும்?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅவரது அனுக்கிரகத்தால் உயர்ந்த ஒன்றக் கேட்டுப் பெறுபவர்களே பாக்கியசாலிகள். அந்த அம்மா பேறு பெற்றவள்.
******
Source: Panchanathan Suresh