ஓதுவார்கள் எங்கே? ==================
ஒருமுறை காஞ்சிக்கு தருமபுரம் மடாதிபதி வந்திருந்தார். அவருடன் பலர் வந்திருந்தனர். சந்திப்பின் போது வரவேற்பும் நடந்தது. மகாபெரியவர் அங்கிருந்த அனைவரையும் பார்த்து விட்டு, கை ஜாடையால் ஓதுவார்கள் எங்கே? என்றார். உடனே அவர்கள் வர, அப்பர் சுவாமிகள் அருளிய திருத்தாண்டகத்தில் வரும் நிலைபெறுமாறு எண்ணுயேல் என்ற பாடலை பாடச் சொன்னார். ஓதுவார் மூர்த்திகள் கல்லும் கரையும்படி பாடினார். அனால் என்ன அதிசயம் நிகழ்ந்ததெனில் நடமாடும் தெய்வம் நடமாடும் தெய்வமாகிறது. தன்னை மறந்து பாடலுக்கு அபிநயம் செய்து ஆடினர். கூடியிருந்த அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர். எது புலி, பதஞ்சலிக்கும், காரைக்கால் அம்மைக்கும் கிடைத்ததோ, அது சாமானியர்களுக்கும் கிடைத்தது.
விஜய பாரதம் தீபாவளி இதழ்