முடிந்த போதெல்லாம் ருத்ரம் ஸஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டிரு


உண்மையான பக்தியுடைய அடியார். ஸ்ரீமடத்துக்கு ஏராளமாகப் பொருளுதவியும் செய்திருந்தார்.
அவருக்குள் ஏதோ ஓர் ஏக்கம்,தவிப்பு, கவலை.
ஒரு நாள் தட்டுத் தடுமாறி, நான் கடைத்தேறுவதற்குப் பெரியவாள் தான் வழி சொல்லணும் என்று கண்ணீர் மல்க விண்ணப்பித்துக் கொண்டார்.

பெரியவாளுக்கு அந்த அன்பரைப்பற்றி நன்றாகத் தெரியும். ரொம்பவும் பயந்த சுபாவமுடையவர்,கூச்சமுடையவர், முன்னின்று தனியாக ஒரு காரியத்தையும் செய்ய முடியாதவர்.அப்படிப்பட்டவரை, யாத்திரை போய் வா என்பதா ? உபாசனை செய் என்பதா ? கோவில் திருப்பணிகளுக்கு உதவி செய் என்பதா ?..உனக்கு, விஷ்ணு ஸஹஸ்ரநாமம் தெரியுமா ? தெரியும், பத்து வயசிலே அப்பாவோட கூடச் சேர்ந்து எங்கள் கிராம பஜனை மடத்தில் தினமும் சாயங்காலம் சொல்லிருக்கேன்..
ஸ்ரீருத்ர சமகம் ?
புஸ்தகத்தைப் பார்த்து ஒழுங்காகச் சொல்லிடுவேன்..
பாதகமில்லை.. முடிந்த போதெல்லாம் ருத்ரம் ஸஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டிரு.. போதும் ..
வந்தனம் செய்துவிட்டுப் பிரசாதம் பெற்றுக்கொண்டு போனார்.அவர் பின்னர் அடிக்கடி மடத்துக்குக் கூட வருவதில்லை. ஆனால், பெரியவாள் அந்தக்கிராமத்து அன்பர்கள் தரிசனத்துக்கு வந்தால் அவரைப் பற்றி விசாரிக்கத் தவறுவதில்லை.

அவரா ?அவர் இப்போ உருத்திரங்கண்ண நாயனார் மாதிரி ஆயிட்டார் ! எப்போதும் ஸ்ரீருத்ர பாராயணம் தான் ! தினமும் பத்துத் தடவையாவது விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்..

அவர் வெகுநாள்கள் ஜீவித்திருந்து ஒரு நொடிப் பொழுதில் சமகம் எட்டாவது அனுவாகம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, உடலை உகுத்தாராம்.

பெரியவா உபதேசம் அவருக்கு மட்டும் தானா ?
அல்லது, பக்குவம் பெற்ற எல்லோருக்கும் தானா ?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

Source:Panchanathan Suresh