மகாராஷ்ட்ரத்தில் ஓரிடத்தில் பெரியவா முற்றிலும் அந்தர்முகமாக ஜபயோகத்திலிருந்தபோது, ஒரு பெரிய கருநாகம் அவருக்கு பின் பாங்காக குடை பிடித்துகொண்டிருந்தது. இன்று இதை படிக்கும் நாம், நாகம் குடை பிடிக்கும் லிங்கபிரானாக, ஸ்ரீமன் நாராயணனாக பெரியவா தரிசனம் தந்தார் என்று பாடலாம். ஆனால், இன்று நேரில் கண்ட இரு தொண்டர்களுக்கோ குலை நடுக்கம்தான்! தாங்கள் சிறிய அதிர்வை உண்டாக்கினாலும் நாகம் குருநாதனை தீண்டிவிடக்கூடுமே என்பதால் அலமாந்து Уஈஸ்வரோ ரக்ஷது;Ф அவரே அவரை ரக்ஷது;Ф என்று விட்டுவிட்டனர். நல்ல காலமாக படத்தை விட்டு விட்டு, பாம்பு ஒரு துவாரத்தின் வழியாக போய் விட்டது.

பெரியவா ஜபம் முடிந்து எழுந்ததுதான் தாமதம்! பாரிஷதர், அந்த துவாரத்தை அடைக்க முற்பட்டார். பெரியவா காரணத்தை வினவினார். பாரிஷதர் நடந்ததை சொன்னார்.

Уஅதுக்காக? நாம என்னமோ நேத்திக்கு வந்தோம். நாளைக்கே இங்கே விட்டுட்டு போய்டுவோம். நாம வரதுக்கு முன்னாடியும், பின்னாடியும் இந்த எடம் என்னென்னவோ ஜீவராசிகளுக்கு வாசஸ்தலமா இருந்தது, இருக்கப்போறது! நடுவாந்த்தரத்துல நாம அதுகள் எடத்துல வந்து பூந்துண்டது போறாதுன்னுЕЕЕЕ.நம்மாத்துக்குள்ள வந்து பூந்துண்டவன், நாம உள்ளே வரப்படாதுன்னு கதவை அடைச்சா எப்டி இருக்கும்?Ф

துவாரத்தை அடைப்பதை தடுத்துவிட்டார். Уநமக்கு அது ஒரு ஹிம்சையும் பண்ணாதபோதே, Уஇனிமே பண்ணும்Фன்னு இப்பவே நாம நெனச்சுண்டு அதுகளை ஹிம்சை பண்ணினா எப்படி நியாயம்?Ф

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



Source: mahesh