பேரீச்சம்பழத்துக்கு புஸ்தகம்!
![]()
கும்பகோணத்தில் மடம் இருந்தபோது, ஒருநாள் பெரியவா ப்ரும்மசூத்ர பாஷ்ய பாடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஒரு வித்வான் ஏதோ சந்தேகம் கேட்கவும், பெரியவா பாமதி யிலோ, பரிமளத்திலோ இதுக்கு விஸ்தாரமா பதில் இருக்கு. அத படிச்சா போறும்மடத்து லைப்ரரில அந்த புஸ்தகம் இருக்கா பாக்கலாம் என்றார்.
லைப்ரரி பொறுப்பாளர், அதை யாரோ வித்வான் எடுத்துக்கொண்டு போயிருப்பதாக சொன்னார்.
அதே சமயம் தெருக்கோடியில் பேரீச்சம்பழக்காரன் குரல் கேட்டது.
பழைய புஸ்தகத்தை போட்டுட்டு செலபேர் பேரீச்சம்பழம் வாங்கியிருப்பா..ஒடனே போய் அவன்ட்ட இருக்கற அத்தனை புஸ்தகங்களையும் வெலைக்கு வாங்கிண்டு வா என்று ஒரு தொண்டரை அனுப்பினார்.
ஒரு கட்டு புஸ்தகத்தோடு அவர் வந்தார். எல்லாம் அபூர்வமான சம்ஸ்க்ருத புஸ்தகங்கள்! பழுப்பேறின காகிதம்!
சாஸ்த்ரிகளே! என்னென்ன புஸ்தகம் இருக்குன்னு பாருங்கோ!
வரிசையாக படித்துக்கொண்டே வந்தார். .பாமதியும், பரிமளமும் அதில் இருந்தன!
பாஷ்ய பாடம் நடக்கும் போது பேரீச்சம்பழக்காரன் வருவானேன்? இல்லாத புஸ்தகங்கள் விலைக்கு வாங்கின புஸ்தகங்கள் நடுவில் இருப்பானேன்?
விடை காண முடியாத கேள்வி!
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
source:mahesh
Bookmarks