எனது பெயர் v.தனராமன், நான் kuwait தில் வேலை பார்த்து வருகிறேன், தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும், நான் பணம் எவ்வாறு தருவது என்று சொல்லவும், நான் செலுத்த வேண்டிய பணம் எவ்வளவு என்று சொல்லவும், நன்றி

அன்புள்ள தனராமன் அவர்களே,
நல் வாழ்த்துக்கள்!
பணத்திற்காக ஜாதகம் பார்ப்பதை அடியேன் தொழிலாகக் கொள்ளவில்லை,
எனது தொழில் பூஜைகள் செய்வது.
எனவே தாங்கள் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டுள்ள
யாரவது ஒரு நல்ல ஜோதிடரை அணுகுமாறும்,
அவரின் உதவி தேவையில்லாமலே, தங்கள் அனைத்து
சிரமங்களும் நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படவேண்டும்
என்று இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.
நன்றி,
என்.வி.எஸ்

ஐயா,
உங்களுடய ஆசீர்வாததிற்கு மிகவும் நன்றி, நான் உங்களின் வலைதளத்தை பார்தேன், பொறுத்த பட்டியலில் 9 பொருத்தம் இருந்தது, அதனால் தான் தாங்கள் ஜாதகம் பார்ப்பதாக நினைத்தேன். எனது பிரச்சனையை சொல்லலாமா, நான் என்ன செய்ய வேண்டும்.


அன்புடையீர்,
பிரச்சினைகள் எப்போதும் நிகழ்காலத்தவையாக இருப்பதால் மிகவும் பெரிதாகத் தெரிகின்றன.
"உம்மால் கண்டிப்பாக தீர்க்க முடியாத பிரச்சனையாகில்" - உம்மால் தீர்க்க ஏதுவான நிலை வரும்வரை,
என்னவேண்டுமானாலும் நடக்கட்டடும் என்று, அவற்றை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு,
அன்றாட வேலைகளை கவனமாகச் செய்து வாருங்கள், ஒரு காலக்கட்டத்தில்,
எந்த ஒரு பிரச்சினையும் கைக்கடக்கமானதாக மாறும், அப்போது அவற்றை சுலபாமாக (என்போன்ற பிறர் உதவியின்றி)
தீர்த்துக்கொள்ளலாம்.
நன்றி,
வணக்கம்.
என்.வி.எஸ்