"கச்சேரிக்குத்தான் கூட்டம் வந்துடுச்சே...பாடகர் ஏன் பாடாமல் உட்கார்ந்து இருக்கிறார்?''
""மெளனராகம் பாடறாராம்!''

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends""சங்கீத வித்வானுக்கு கடன் கொடுத்தது தப்பாப் போச்சே''
""ஏன்...என்னாச்சு?''
""திருப்பிக் கேட்டா ஒரே பஞ்சப்பாட்டு பாடுறார்''

""இப்படி சம்பந்தம் சம்பந்தமேயில்லாமல் பேசிக்கிட்டு போறாரே! யார் இவர்?''
""எங்க சம்பந்தி!''

""டாக்டர் என் கணவன் எப்போ கண் திறந்து பேசுவார்?''
""பேசுவார்...ஆனா கண் திறந்து பேசமாட்டார். வாயைத் திறந்துதான் பேசுவாரு''


""உங்க ஆஃபீஸ்ல மரம் நடுவிழா கொண்டாடுனீங்களே என்ன மரம் நட்டீங்க?''
""தூங்கு மூஞ்சி மரம்''

""உங்க மனைவிக்குப் பட்டுப்புடவை வாங்கித் தந்தீங்களாமே, காஞ்சிப்பட்டா? ஆரணிப்பட்டா?''
""கடன் பட்டு! !

""ஆபரேசனுக்கு பின்னாடி கண் நல்லாத் தெரியும்னு டாக்டர் சொன்னார்''
""நல்லாத் தெரியுதுங்களா?''
""பின்னாடி எங்க தெரியுது. இப்பவும் முன்னாடிதான் தெரியுது''

""பயில்வானுக்கு இரண்டு குழந்தைகளா?''
""ஆமாம். ஆஸ்திக்கு ஒண்ணு, குஸ்திக்கு ஒண்ணு''

""நீயும் உன் தம்பியும் எப்பவும் ரொட்டி சாப்பிடுறீங்களே''
""நாங்க ரொட்டி சகோதரர்கள்''

பேங்க் மேனேஜர்: என்னை ஏன்யா கட்டிப் பிடிக்கிறாய்?
வந்தவர்: உங்களைப் பிடிச்சா லோன் கிடைக்கும்னு சொன்னாங்க

வேலைக்காரன்: சாவியை என்னிடம் பொறுப்பாக வைத்திருக்கச் சொல்லி குடுத்தீங்களே...
வீட்டுக்காரர்: அதுக்கென்ன?
வேலைக்காரன்: இந்த சாவி எந்த பூட்டுக்கும் சேரலையே...

""பொங்கலுக்கும் இட்லிக்கும் என்ன வித்தியாசம்?''
""பொங்கலுக்கு லீவு விடுவாங்க; இட்லிக்கு லீவு விடமாட்டாங்க!''

""அவர் ஏன் ஒளிந்து ஒளிந்து மாவு அரைக்கிறார்?''
""நைஸா அரைச்சிட்டு வரச் சொன்னாங்களாம் அவரின்
மனைவி''

""டாக்டர், நீங்க எழுதிக்கொடுத்த மருந்தில உடம்பு கொஞ்சங்கூட வத்தல. குண்டாவேதான் இருக்கு''
""அப்படியா? உங்களுக்கு எந்த ஊருன்னு சொன்னீங்க?''
""வத்தல குண்டு''

""தலைவருக்கு பொதுஅறிவு கம்மின்னு எப்படிச் சொல்ற?''
""ஃபேஸ்புக் எந்தக் கடையில கிடைக்குமுன்னு கேட்கிறாரு''

""ராதாவுக்கு பத்து ரூபாய் கடன் கொடுத்தேன். அதில் ஒரு ரூபாய் திருப்பித் தந்துவிட்டாள்...ஒன்பது ரூபாய் தரவில்லை. அவளை என்ன சொல்லுவ''
""நயன்'தாரா''

""இதுதான் சங்ககாலம்னு எப்படிச் சொல்றீங்க?''
""இந்தக் காலத்திலதான் எல்லாத்துக்கும் சங்கம் வச்சிருக்காங்களே, அதான்''

""ஏம்பா! சர்வர் சரக்கு மாஸ்டர் ஸ்பெஷலா என்னப் போட்டிருக்கார்?''
""லீவ் போட்டு இருக்கார் சார்!''