வேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.
ஒருமுறை மஹாபெரியவரை காஞ்சியில் பார்க்கச்சென்றிருந்தேன். வேதத்தை பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தார். உற்றுக்கேட்டு கொண்டு இருந்தேன்.
வேதம் பொய் சொல்லுமா, என்று கேட்டார். அவர் கேட்கும் போது ஏதோ விஷ்யம் வரப்போகிறது என்று மௌனமாக இருந்தேன்.
சரி ராத்திரி 12 மணிக்கு சூரியனை பார்க்க முடியுமா, என்று கேட்டார். முடியாது என்று சொன்னேன். அப்போ வேதம் பொய் சொல்லரதே, சதா பஸ்யந்தி சூர்யாக: வரதே சூக்தத்தில்.அப்ப்டின்னா எப்பவும் சூர்யனை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்னுதனே அர்த்தம்.
மனதில் குழப்பம் இருந்தாலும் பெரியாவாவே சொன்னா நன்ன இருக்கும்ன்னு சொன்னேன்.
அவர் சொன்னார், வேதம் சொன்னவா நம்மளை மாதிரி கண்ணுக்குத்தெரிந்த உலகை மட்டும் பார்க்கவில்லை அவா ஞனக்கண்ணால் உலகை பாத்தவா. அதனாலதன் எப்பவும் பனிக்கட்டியா இருக்குமாமே பின்லாந்துன்னு ஒரு ஊரு அங்கே வருஷத்துலே சிலநாள் எப்பவும் சூர்யன் பிரகசிக்குமாமே அதை வெச்சுத்தான் எழுதி இருப்பாளோ!
வேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.
Source: Panchanathan Suresh
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks