Announcement

Collapse
No announcement yet.

பீன்ஸ் சத்துப்பட்டியல்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பீன்ஸ் சத்துப்பட்டியல்


    பீன்ஸின் மகத்துவத்தை இங்கே படித்தபின் நீங்கள் பீன்ஸ் பிரியர் ஆனால்ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வளவு சத்துகள் அடங்கியது பீன்ஸ். பேப்பேசி குடும்பத்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் பேசில்லஸ் வல்கரிஸ். செடியில் வளரும் பீன்ஸ், கொடியில் விளையும் பீன்ஸ் வகைகள் உள்ளன.
    இதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்… புதிதாக பறிக்கப்பட்ட பீன்ஸ் குறைந்த அளவு கலோரி ஆற்றல் தரக்கூடியவை. 100 கிராம் பீன்ஸ் உடலுக்கு 31 கலோரி ஆற்றல் வழங்கும். பச்சை பீன்ஸ் நிறைய வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது. எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்து நிறைந்தது.

    100 கிராம் பீன்ஸில் 9 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவில் நார்ச்சத்து உள்ளது. ஆர்.டி.ஏ. என்பது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவை குறிப்பதாகும். நார்ச்சத்தானது பெருங்குடல் நோய் எதிர்ப்புத் தன்மையுடன் இருக்க உதவும். குடற்புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். மேலும் ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவையும் குறைக்கும்.


    மிக அதிக அளவில் வைட்டமின் ஏ, பீன்ஸில் இருக்கிறது. லுடின், ஸி-சாந்தின், பீட்டா கரோட்டின் ஆகியவையும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. இது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், நோய் எதிர்ப்புத்திறனை வழங்கும். குழந்தைகளுக்கான வியாதியை உருவாக்கும் ஆக்சிஜன்-பிரி-ரேடிக்கலுக்கு எதிராக செயல்படும்.


    பீன்ஸில் உள்ள ஸி-சாந்தின், புறஊதாக்கதிர்களில் இருந்து கண்களின் ரெட்டினாவைக் காக்கிறது. பச்சை பீன்ஸ் வகைகள் ஏ.ஆர்.எம்.டி. எனப்படும் வயது முதிர்வு சம்பந்தமான வியாதிக்கு எதிராக உடலுக்கு ஆற்றல்தரும். 100 கிராம் பீன்ஸில் 37 மைக்ரோ கிராம் போலேட்ஸ் உள்ளது.

    இது வைட்டமின் 12 உடன் இணைந்து, டி.என்.ஏ. இணைப்பு மற்றும் செல் பகுப்பில் பங்கெடுக்கிறது. மேலும் மாதவிடாய் மற்றும் கர்ப்பகாலத்தில் நரம்புக் குழாய்கள் பாதிக்கப்படாமல் காக்க உதவுகிறது. பைரிடாக்சின் எனும் வைட்டமின் பி-6, தையமின் பி 1, வைட்டமின் சி ஆகியவை பீன்ஸில் நிறைந்துள்ளது.

    வைட்டமின் சி, கிருமித் தொற்றுக்கு எதிராக உடலை காக்கக்கூடியது. ஆக்சிஜன்-பிரி-ரேடிக்கல்ஸ் உடலில் சேரவிடாமல் சுத்தமாக்குகிறது. ஆரோக்கியமான அளவில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. இவை வளர்ச்சிதை மாற்றத்திற்கு ரொம்ப அவசியமானது.


    மாங்கனீசு நொதிகளின் செயல்பாட்டில் துணைக்காரணியாக செயல்படக்கூடியது. பிரிரேடிக்கல்ஸை விரட்டியடிக்கக் கூடியது. பொட்டாசியம் தாதுஉப்பு செல் மற்றும் உடலில் ஈரத்தன்மைக்கு அவசியமானது. இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் பங்கெடுக்கிறது.


    Source: vayal
Working...
X