வணக்கம் அய்யா,

நான் ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளேன். ஜோதிட விஷயங்களைப் படிக்கிறேன்.
தங்களது வெப் சைட் பார்த்தேன். மிக்க நன்றி.

என்னால் மாலை எட்டு மணிக்கு மேல் தான் இவ்விஷயத்தில் ஈடுபடமுடிகிறது. ஆனால், சூரிய அஸ்தமனத்திற்குப் பின் ஜோதிடத்தில் ஈடுபடக்கூடாது, தரித்திரம் வந்து சேரும் என்று சிலர் சொல்லுகிறார்கள்.

அக்கூற்றில் சாஸ்திரப்படி அர்த்தம், விளக்கம் உண்டா என்பது எனது கேள்வி. தயவு செய்து எனது சந்தேகத்தைப் போக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

ராஜா


நன்றி,
ஜோதிட விஷயங்கள் ஓலைச்சுவடியில் இருந்த காலத்திலும்,
மின் விளக்குகள் இல்லாத காலத்திலும் இவ்வாறு கூறப்பட்டது.


பகல் ஒளியிலேயே ஓலைச்சுவடியை படிக்கமுடியாது
சிம்னி விளக்கில் படித்து தப்பாக போக வாய்ப்பிருந்த காலத்து வழக்கு!!


தற்காலத்திற்குப் பொருந்தாது.
நன்றி.

ஐயா,

எனது சந்தேஹத்தைப் போக்கியமைக்கு மிக்க நன்றி

ராஜா