கும்பகோணத்தில் ஸ்ரீமடம் இருந்த காலத்தில், அங்கு சமையல் பண்ணிக் கொண்டிருந்தவர்கள் உண்மையான பரிவோடும், தொண்டு உள்ளத்தோடும் கைங்கர்யம் பண்ணுவார்கள். சம்பளமோ ரொம்ப சொல்பம்! அதற்காக பக்குவம் பண்ணப்படும் பதார்த்தங்களில் ஏனோதானோவென்ற அலக்ஷியம் இருக்காது! மணக்க மணக்க அவர்கள் அன்போடு செய்து போடும் சாதாரண சமையல் கூட அம்ருதமாக இருக்கும். அதில் முக்யமானவர்கள் விக்ரவாண்டியம் நாராயணஸ்வாமி ஐயர், மொட்டை, மாயவரம் அகோரம், பள்ளிவர்த்தி ரங்கஸ்வாமி ஆகியோர். எத்தனை பேர் வந்தாலும் இவர்கள் முகத்தில் சுளிப்போ, அலுப்போ எதுவுமே இருக்காது.

ஒரு ஏகாதஸிக்கு பக்கத்து கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக பக்தர்கள் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தனர்.

"ஏகாதஸிக்கு பெரியவங்களை தர்சனம் பண்ணிக்கிட்டு, தீர்த்தப்ரஸாதம் வாங்கிட்டுப் போகலான்னு வந்தோம்.." என்று, வந்த கூட்டத்தில் சிலர் பெரியவாளிடம் கூறினர்.

"அதெல்லாம் இல்லே! இன்னிக்கி உப்புமா பலகாரம்! மடத்து உப்புமா ரொம்ப நன்னா இருக்கும்...நம்ம மடத்து பாகசாலை சமையக்காராளுக்கு நல்ல கைமணம்! உப்புமா நல்ல வாசனையா, ஜோரா இருக்கும்! தொட்டுக்க சட்னி, சாம்பார் வேறே!...அதுக்குத்தானே வந்திருக்கேள்?" என்று சிரித்துக் கொண்டே அவர்களிடம் சொன்னதும், தலையை குனிந்துகொண்டு, வெட்கத்தோடு சிரித்துக் கொண்டே "ஆமா.....ஸாமீ " என்று ஒத்துக் கொண்டனர் அந்த கபடு அறியாத மக்கள்!

"அந்தக் காலத்துலே நம்ம மடத்தோட ஏகாதஸி உப்புமாவோட பெருமை ரொம்ப தூரம் பரவியிருந்துது......அந்த மாதிரி பெரிய்ய மனசோட, மணக்க மணக்க பண்ணறதுக்கு இப்போ ஆளே இல்லையே!" என்று, அன்று அக்காலத்தை அனுபவித்து, இன்று அதை அசைபோடும் சில வயோதிக பக்தர்களுக்கு இருக்கிறது

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends