சிறுநீரில் இரத்தம் போவதற்கான காரணங்கள் என்ன?
பொதுவாக சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் (Red Blood Cells) வெளியே வருவதில்லை. இவை சிறுநீரகங்களின் வடிகட்டியில் தடுக்கப்பட்டு விடுகின்றன. சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் சிறுநீரக மண்டலத்தின் எந்த பாகத்தில் இருந்து வேண்டுமானாலும் வரலாம்.

கீழ்கண்ட சில காரணங்கள்

சிறுநீரகங்களின் வடிகட்டிகளில் அழற்சி (சிறுநீரக நுண்தமனி அழற்சி Glomerulonephritis)
சிறுநீரகங்களில் நீர்க் கட்டிகள் (Cysts in Kidney)
சிறுநீரகங்களில் சாதாரண கட்டிகள், புற்று நோய்க் கட்டிகள் (Benign and Cancerous tumours in Kidney)
சிறுநீரகங்களில் கற்கள் (Kidney Stones)
சிறுநீரகங்களில் கிருமித் தாக்கம் (Kidney Infections)
சிறுநீரகங்களைப் பாதிக்கும் சில பரம்பரை வியாதிகள் (Inherited disorders of Kidney)
உள்சிறுநீர்க் குழாய்களில் கற்கள், கட்டிகள், கிருமி பாதிப்புகள்
(Stones, tumours, infections of Ureters)

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsசிறுநீர்ப்பையில் கற்கள், கட்டிகள், கிருமித் தாக்கம் (Stones, tumours, infections of Bladder)
ப்ராஸ்டேட் சுரப்பியில் கட்டி, கிருமி, கல் (Swelling, Infection and stone in Prostate Gland)
அபூர்வமாக இரத்த உறைவில் குறைபாட்டு நோய்களாலும், இரத்த உறைவை தடுக்கும் சில மருந்துகளாலும் (உதாரணம்-சில இதய நோய்களுக்கு தரப்படும் வார்பாரின்- Warfarin) வரலாம்.

source:vayal