ஏழைகளுக்காக சென்னையில் 1000 சலுகை விலை உணவகங்கள்: ஜெயலலிதா

சென்னைசென்னையில் ஏழைகள், கூலி வேலை செய்பவர்களுக்காக 1000 சலுகை விலை உணவகங்களைத் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஓர் உணவகம் என்ற அடிப்படையில் இந்த உணவகங்கள் தொடங்கப்படுகின்றன. இதில் ஒரு இட்லி ரூ.1-க்கும், சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னையில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்பவர்களாகவும், ஓட்டுநர்களாகவும், பாரம் சுமப்பவர்களாகவும் உள்ளனர். இவர்கள் தவிர சென்னைக்குப் பணி நிமித்தமாக வந்து தங்கி செல்வோரின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது.

இவர்கள் அனைவரும் தங்களுக்கான குறைந்த வருவாயில் உணவுக்கு அதிகம் செலவு செய்ய முடிவதில்லை.

அனைவருக்கும் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து சலுகை விலையில் தரமான உணவு வழங்குவதற்காக சென்னை மாநகராட்சி மூலம் 1,000 சிற்றுண்டி உணவகங்களைத் தொடங்க முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக சென்னை நகரில் ஒவ்வொரு வார்டுக்கும் ஓர் உணவகம் என்ற அடிப்படையில் 200 சிற்றுண்டி உணவகங்களை தொடங்க முதல்வர் நிர்வாக ஒப்புதலை வழங்கியுள்ளார்.

500 மெட்ரிக் டன் அரிசி: இந்தத் திட்டத்துக்காக மாதம் 500 மெட்ரிக் டன் அரிசியை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற மானிய விலையில் மாநகராட்சிக்கு வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த உணவகங்களில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை தலா ரூ.1, ரூ.5, ரூ.3-க்கு விற்பனை செய்யப்படும். இந்த உணவகங்களின் பணிகளைக் கண்காணிக்க மாநகர நல அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். இதன்மூலம் அன்றாட கூலி வேலை செய்வோர், தள்ளுவண்டி, கை வண்டி ஓட்டுநர்கள், பாரம் சுமக்கும் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள் என அனைவரும் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends


Source: DINAMANI