ஒரு வாரந்தான் ஆயுஸ்!

மயிலாப்பூர் சங்கர மடத்தை ரொம்ப நன்றாக நிர்வாகம் பண்ணியவர் பத்மநாப ஐயர். பெரியவாளுடைய பரம பக்தர். பிடி அரிசி திட்டம், பூஜை, கச்சேரிகள், உபன்யாஸங்கள், சன்யாசிகள் வந்தால் குறிப்பறிந்து தொண்டு செய்வது என்று அவருடைய கைங்கர்யங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.


இப்பேர்ப்பட்ட நல்ல மனிதரின் முகத்தில் ஒரு கட்டி தோன்றி, நாளுக்கு நாள் வளர்ந்தது. டாக்டர்களிடம் காட்டியதும் பலவித டெஸ்டுகளுக்கு பிறகு ஒரு "குண்டை" தூக்கி போட்டார்கள்!

"இது cancer! ரொம்ப முத்திப் போச்சு! ஒடனே ஆபரேஷன் பண்ணணும்.....பண்ணினாலும் பொழைக்கறதுக்கு சான்ஸ் இல்லே!.." அதென்னமோ இவர் விஷயத்தில், எல்லா டாக்டர்களும் ஒருமித்த கருத்தையே கூறினார்கள்.

அடுத்து ஒரு ஜோஸ்யரிடம் போய் ஜாதகத்தை காட்டினார்.........."ஒரே வாரந்தான் ஒய்! ஒம்மோட ஆயுஸ்!" பட்டென்று போட்டு உடைத்தார் ஜோஸ்யர்.

திக்கற்றவருக்கு தெய்வமன்றோ துணை! பெரியவாளிடம் சென்று "டாக்டர்ல்லாம் ஆபரேஷன் பண்ணினாலும் பொழைக்கறது கஷ்டம்ன்னு சொல்றா......ஜோஸ்யர் ஒரே வாரந்தான் உயிரோட இருப்பேன்...ன்னு சொல்றார்..."

பளிச்சென்று பதில் வந்தது, கருணாமூர்த்தியிடமிருந்து !............

"சன்யாஸம் வாங்கிக்கோ!"..........

அவ்வளவுதான்! தக்ஷணமே அதற்கான ஏற்பாட்டில் இறங்கி, பெரியவா முன் சன்யாஸம் வாங்கிக் கொண்டார். எந்தவித மருந்தும் கிடையாது! எந்த ஜோஸ்யரிடமும் பரிஹாரம் தேடி ஓடவில்லை! பல வர்ஷங்கள் காஞ்சியில் இருந்து 2002ல் ஸித்தியடைந்தார்!

பெரியவாளுடைய கருணாகடாக்ஷமானது ஒருவரை யமபட்டினத்திலிருந்தாலும் இழுத்து வந்துவிடாதா என்ன?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends