Announcement

Collapse
No announcement yet.

சங்கு, சக்கர முருகன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சங்கு, சக்கர முருகன்

    கும்பகோணம்
    அருகிலுள்ள அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயிலிலுள்ள முருகன்
    கையில் சங்கு, சக்கரம் வைத்தபடி காட்சி தருகிறார்.



    ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை
    காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன், அசுரர்களை அழிக்க
    முருகனை அனுப்பினார். அப்போது திருமால் முருகனுக்கு தனது சங்கு,
    சக்கரத்தை கொடுத்தார்.

    ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை
    சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள
    முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம்
    மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். இந்திர மயில்
    மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, கல்யாணசுந்தர சண்முக
    சுப்பிரமணியர் என்று அழைக்கிறார்கள். இவரது திருவாசி ஓம் வடிவில்
    அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி, தெய்வானை உடனிருக்கின்றனர்.
    மகாலட்சுமிக்கும் சன்னதி இருக்கிறது.
Working...
X