“லிங்க வடிவமே வழிபாட்டுக்கு உரியது என்பது புலனாகிறது

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsThis is a picture of a Shiva Lingam in Hampi.
லிங்க ரூபத்தில் சக்தியும் பீடகதியில் கிடக்கிறாள் …
மஹாபாரதத்தில் ஒரு நாள் கவுரவர்கள் சார்பாக பாண்டவர்களோடு யுத்தம் புரிகிறார் அஸ்வத்தாமன்; அவரை வெல்வது எளிதல்ல; அவரிடம் உள்ள அஸ்திரங்களில் ‘அக்னி அஸ்திரம்’ ஒன்று போதும்; மொத்த உலகத்தையே சாம்பலாக்கிவிடமுடியும்; இது பாண்டவர்களுக்கும் தெரியும்! குறிப்பாக கிருஷ்ண பரமாத்மா நன்கறிவார்.

அன்றைய யுத்தத்தில், அஸ்வத்தாமா அந்த அஸ்திரத்தை இறுதியாகப் பிரயோகித்தார்; மொத்த பாண்டவ சைதன்யமும் சாம்பலாகப்போகிறது என்றே எல்லோரும் நினைக்க, க்ருஷ்ண பரமாத்மா பதிலுக்கு ‘பாசுபதாஸ்திரத்தை’ பிரயோகிக்கும்படி அர்ஜீனனைப் பணித்தார்; சிவனாரைக் குறித்து தவமிருந்து அர்ஜீனன் பெற்றதே பாசுபதாஸ்திரம். அது, அக்னியாஸ்திரத்தை அடக்கிவிடுகிறது. அஸ்வத்தாமனிடம் திகைப்பு!

அக்னியாஸ்திரத்தை மிஞ்சும் ஓர் அஸ்திரம் இருக்கமுடியுமா, என்று! பின்னர், அவர் வியாசரிடம் இது தொடர்பாக கேட்க, அவர் பதில் கூறத் தொடங்கினார்:
“அஸ்வத்தாமா! நீயும் அர்ஜீனன் போன்று மிகச் சிறந்த வீரனாக இருந்தபோதிலும், அவன் ஈஸ்வரனின் லிங்க ரூபத்தை தியானித்து தவம் செய்து,பாசுபதாஸ்திரத்தைப் பெற்றான். நீயோ அந்தப்பெருமானை விக்கிரக ஆராதனை புரிந்தாய். லிங்க ரூபத்தில் சக்தியும் பீடகதியில் கிடக்கிறாள்; ஸ்தூபம் நாதமாக விளங்குகிறது; எனவே, சிவபெருமான் லிங்க ரூபத்தில் வழிபாடு உடையவர்களை, வரம் பெற்றவர்களை முந்தி ஆட்கொள்கிறான். அதனாலேயே அர்ஜீனனை உனது அஸ்திரத்தால் வெல்ல முடியவில்லை”.

மஹாபாரதத்தில் கிடைக்கும் இந்தச் செய்திப்படி லிங்க வடிவமே வழிபாட்டுக்கு உரியது என்பது புலனாகிறது; இதன்படி லிங்கம் என்பது மணியாகும்; மந்திரம் என்பது ‘ஓம்நமச்சிவாய’ எனும் பஞ்சாட்சரமாகும். விபூதியே மருந்தான அவுஷதமாகும்; இதையே ‘மணிமந்திர ஓளஷதம்’ என்பார்கள்; சித்த புருஷர்களும் மிக எளிதாக, மணி மந்திர ஒளஷதமாக லிங்கத்தை பஞ்சாட்சரத்தை விபூதியைக் கொண்டார்கள்.நன்றி: சக்தி விகடனில் வெளிவரும் தொடர்: ‘சித்தம்,சிவம்,சாகசம்’ எழுதி வருபவர் இந்திரா சவுந்தரராஜன்.