அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவர், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். இந்நாளைய பெண்மணியாக இருந்தாலும், உள்ளுர பக்தி இருந்தது; சமய சடங்குகளையும் மந்திர தோத்திரங்களையும் முறையாக பெற்றுக்கொண்டு அனுஷ்டிக்க முடியவில்லையே என்ற தாபம் இருந்தது.
மனமுருக பெரியவாளிடம் பிராத்தித்து கொண்டார்: Уநான் வேலைக்கு போகிறவள். எனக்கு ஓய்வு நேரம் குறைவு. அத்துடன், மடி, ஆசாரம் என்றெல்லாம் கண்டிப்புடன் இருக்க முடியாது. நீளமான ஸ்தோத்திரங்கள், பாராயணம் செய்யவும் இயலாது. அதனால், எதாவது சுலபமான மந்திர ஜெபம் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பெரியவாள் அனுக்ரகம் பண்ணனும்.Ф
Bookmarks