பெண்மையின் தெய்வாம்சம்


பெண்மை இருக்கும் இடம் எங்கும் லக்ஷ்மிதேவி இருக்கிறாள். பிரபஞ்சத்தில் பெண்மை எல்லாம் பிராட்டியின் அம்சமே. ஸ்ரீ பராசர ப்ரம்ம ரிஷியின் இந்த ஸீத்தாந்தத்தை ஸ்வாமி தேசிகனும்

புரிஸா துஜ்ஜ விஹுஇ அச்சுய லச்சிய இத்தியா ஸந்நோயோ

என்பதாக அச்சுத சதகத்தில் அருளியுள்ளார். காலசக்கரத்தால் இயங்கிவரும் சம்சார சக்கரத்தில் பெண்மையும் ஆண்மையும் சரிபாதி என்று எல்லோரும் அறிவர். பரம்பொருள் தத்துவமும் இப்படிப்பட்டதே. பிராட்டியும், பெருமாளும் பிணைந்து எங்கும் நீக்கமற நிறைந்து கலந்து ஒரே ஈஸ்வர தத்வமாக இருக்கிறார்கள்.


என்ற ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸுக்தியில் இவ்வர்த்தத்தை தெளியலாம்.


உத்தமர்களோ, உத்தமிகளோ அவர்களிடத்தில் தெய்வ சாநித்தியம் நிச்சயம் உண்டு. திருவிருத்தத்தில், நம்மாழ்வார் எம்பெருமானைக் காண ஆசைபடும் இடங்களாவன தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும் ஐயநல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம் கா பொன்னாழி வெண்சங்கோடும் காண்பான் அவாவுவன் நான் ..
சதுர்புஜனான எம்பெருமானை முதலில் உத்தம ஸ்திரீகளின் குழுவில் தேடுகிறார். அடுத்து ப்ராம்ஹணோத்தமர்களின் மத்தியில் காண ஆசைபடுகிறார். முதலில் உத்தமப் பெண்களிடத்தில் பெருமாளை காண்பான் ஏன்? உத்தமிகள் மங்களத்தின் இருப்பிடம். அதுவே பிராட்டி உறைவிடம். பிராட்டி இருக்கும் இடத்தில நிச்சயம் பெருமாள் இருக்கிறார். அவர் தான் திருமால் லக்ஷ்மியிடம் மோஹித்திருப்பவர் ஆயிற்றே. பேயாழ்வாரும் மலரால் தனத்துள்ளான் தண்துழாய்மார்பன் என்றார்வைதீக மடத்தில் பெண்களும் மேன்மைநம் வைதீக தர்மத்தில் பெண்களுக்கு என்று ஒரு அலாதியான சிறப்பு. மனைவி இல்லாதவர் யாகங்கள் செய்யகூட அர்ஹதை அற்றவர். கணவனில் பாதி ஆவாள் மனைவி என்றது வேதம். கணவனை விட மனைவி வயதில் சின்னவள் தான். அனால் கணவருக்கு எவ்வளவு வயதோ அதே வயதுக்கான கெளரவம் மனைவிக்கும் உண்டு. சாஸ்த்ரம் அப்படித்தான். தம்பதிகளை நமஸ்கரிக்கும்போது இந்த வயது முறையை இன்றும் நாம் அனுஷ்டிக்கிறோம்.


பெண்களை கர்புக்கடவுளாக போற்றுவது நம் நாட்டில்தான். நீதி வழவாத மன்னருக்காக ஒரு முறை , வேதம் ஓதிய வேதியர்களுக்காக ஒரு முறை, மாதர்களின் கற்பின் சிறப்பினால் ஒரு முறை. என மாதம் மும் மழை பொழிவதாக ஒரு தமிழ்ப்பாடலும் உண்டு.உயர்வு எல்லாம் பெண்களுக்கே என்ற நிலை நம் ஸநாதன தர்மத்தில் உள்ளது. இப்போது நம் நாட்டில் பெரும்பாலும் க்ருஹங்களில் மாமி ராஜ்ஜியம்தான். அப்படி இல்லை என்று சொல்பவர்கள் உண்மையை மாற்றிச் சொல்பவர்களே. பல விதங்களில் பெண்களுக்கு முக்யத்துவம் தகுந்ததுதான். புருஷர்களை நல்வழிபடுத்தும் விஷயத்தில் ஸ்திரீகள் பெரும்பங்கு வஹீகின்றனர்.புண்ணிய பாபங்கள்


எப்படி புருஷர்களின் புண்ணியத்தில் மனைவிக்கு பாதி சொந்தமோ, அதுபோல் மனைவி செய்யும் பாபத்தில் புருஷனுக்கு சரிபாதி சேரும்.


என்றார் நாரதர். நாடு செய்யும் பாபம் ராஜாவையும், ராஜ செய்யும் பாபம் ராஜகுருவையும், மனைவியின் பாபம் புருஷனையும் , சிஷ்யனின் பாபம் ஆச்சர்யனையும் சேரும் என்றபடி தம்முடையவர்களை தவறை செய்யவிடாமல் திருத்தி நல்வழி நடத்திச் செல்ல வேண்டியவர்கள், தம் கடமையிலிருந்து தவறினால் அதுவே பாபமாகிறது. நமது பாரத நாடு தர்ம பூமி, பாபம் புண்ணியம் என்ற இரண்டையும் தெளிவாகப் பேசும் மகரிஷிகளின் புண்யபூமி. இதில் வாழப்பெறும் நாம் எல்லாரும் பாக்யசாலிகள்.

உலக நாடுகள் பலவற்றுக்கும் ஒரு சிறந்த ஆன்மிக வழிகாட்டியாக விளங்கி வருகிறது. ஸ்ரீராமனும் ஸ்ரீ க்ருஷ்ணனும் இங்கு தான் அவதாரம் செய்து தர்மோபதேசம் செய்தனர். ராமோ விக்ரஹவான் தர்ம. என்றார் ரிஷி க்ருஷ்ணம் தர்மம் சநாதனம் என்பது உலகறிந்த விஷயம் . வேத இதிஹாச புராணங்கள் நமது கடமைகளை நமக்குத் தெளிவாக உபதேசிக்கின்றன. அவை சொல்லும் தர்மங்கள் எல்லாம் க்ருஹஸ்தர்களை ஆணிவேராக உடையது. க்ருஷஸ்தன் தன் மனைவியைச் சார்ந்தே வாழ்கிறேன். பெண்கள் தன் தம் கடமைகளை, தர்மத்தை சரிவர புரிந்துகொண்ட செயல்பட்டால் தான் லோக க்ஷேமமும்,மோக்ஷமும் சாத்தியமாகும்.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendshttp://anudinam.org/2012/05/24/stri-dharmam-article-in-tamil/