மஹாளய தர்ப்பணம் சில குறிப்புகள்
புரட்டாசி மாதத்திய அமாவாசைக்கு முந்திய தினங்கள் (அதற்கு முன் வந்த பௌர்ணமிக்கு பிந்தைய தினங்கள்) கொண்ட
காலத்திற்கு மஹாளய பக்ஷம் என்று பெயர். அந்த பக்ஷத்தில் பொதுவாக பஞ்சமிக்கு மேல் மத்யாஷ்டமி, மஹாவ்யதீபாதம்,
கஜஜ்சாயை, மஹாபரணி அல்லது பித்ருக்கள் திதி ஆகிய புண்ய தினங்களில் மஹாளய பக்ஷ ச்ராத்தம் அல்லது தர்ப்பணம்
செய்யவேண்டும். பத்திநி து}ரமாக இருக்கும் போதும், வெள்ளிக் கிழமைகளிலும் மஹாளய ச்ராத்தம் பண்ணக்கூடாது.
புரட்டாசி அல்லது ஐப்பசி மாதத்திற்குள் பித்ரு ச்ராத்தம் வந்தால் ச்ராத்தம் செய்தபின்னரே மஹாளயம் பண்ணவேண்டும்.
இந்த காரணங்களால் மஹாளயபக்ஷ தர்ப்பணம் செய்ய கார்த்திகை மாதம் வரை கால அவகாசம் உண்டு. தகப்பனார்
ஸன்யாசியாக இருந்து மரணமடைந்திருந்தால் ஸன்யஹஸ்த மஹாளயத்தில் பண்ணவும். விஜ்ஞான ரீதியாக
பித்ருக்கள் லோகம் பூமியை ஸமீபிக்கும் காலம் கணிக்கப்பட்டு மஹாளய பக்ஷமாக வழங்கப்படுகிறது. எனவே
இந்தக்காலங்களில் ப்ராஹ்மணர் அல்லாதோரும் கூட தங்கள் பித்ருக்களை உத்தேசித்து ச்ராத்தம் (ஆம ரூபமாக)
செய்கின்றனர். மஹாளய பக்ஷம் 15 நாளும் அன்ன ரூபாமாகவோ அல்லது தர்பணம் பண்ணி யாராவது ஸ்வாமிகளுக்கு
அன்னமிட்டோ அனுசரிப்பாரும் உண்டு. தினமும் பண்ணினால் ஏதாவது ஒரு தினத்தில் பித்ருக்கள் தாமாக நம்
க்ருஹத்திற்கு நிச்சயம் விஜயம் செய்வார்கள் என்று நம்பிக்கை. பித்ருக்கள் காரியத்தைச் ச்ரத்தையாக செய்பவர்களின்
வாரிசுகள் நல்ல புத்திமானாகவும் (செல்வம் இல்லா விட்டாலும்) பல துறைகளிலும் சிறந்த திறமையாளர்களாக
இருப்பது கண்கூடு. குறிப்பு:- கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களில் ஏதேனும் குறைபாடு இருக்குமானால்
ஈமெயில் மூலம் தெரிவிக்கவும். எழுத்துப்பிழையானால் தாங்களே திருத்தி வாசித்துக் கொள்ளவும்.
கருத்துப் பிழையானால் தக்க ஆதாரத்துடன் அனுப்பி வைத்தால் உடனடியாக மாற்றங்கள் செய்து வெளியிடப்படும்.
தக்க ஆதாரம் என்பது பழங்கால புத்தகத்தின் நகல் படிமம். ஆதாரமில்லாவிடினும் அனுப்பப்படும் கருத்துக்கள்
பரிசீலிக்கப்பட்டு எம்வசமுள்ள ஏனைய புத்தகங்களில் அதற்கான ஆதாரம் காணப்பட்டால் மாற்றி வெளியிடப்படும்.