'உப-நி-ஸத' என்றால் பக்கத்திலே உட்கார்ந்து கொள்வது என்று அர்த்தம். சிஷ்யனை இப்படி உட்கார்த்திவைத்துக் கொண்டு குருவானவர் செய்த உபதேசம்தான் உபநிஷத்துக்கள். பிரம்மத்துக்கு ப் பக்கத்திலேயே போய்ச் சேரும்படியாகச் செய்வது என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். உபநயனம் என்றால், 'குருவிடம் கொண்டுவிடுவது', 'பரமாத்மாவிடம் கொண்டு விடுவது' என்று இரண்டு விதமாகவும் அர்த்தம் பண்ணிக் கொள்ள இருப்பதுபோல, உபநிஷத் என்றாலும் இப்படி இரட்டைப் பொருள் கொள்ளலாம்.


பக்கத்தில் வைத்துக் கொண்டு செய்கிற உபதேசம் என்றால். அது ரஹஸ்யமானது என்று அர்த்தம். மதிப்புத் தெரியாத அபக்குவிகளுக்கு அது சொல்லத் தக்கதல்ல. இதனால்தான் உபநிஷத்துக்களுக்குள்ளேயே கதா பாகங்களாக இல்லாமல் ரொம்பவும் ஸக்ஷ்மமான தத்தவங்களைச் சொல்கிறபோது, 'இது உபநிஷத், இது உபநிஷத்'என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும். வேதத்தில் மறை பொருளாக இருக்க வேண்டியவற்றை 'ரஹஸ்யம்'என்பார்கள். வேதாந்தமான உபநிஷத்தில் அப்படிப்பட்ட ரஹஸ்யங்களையே 'உபநிஷத்'என்று சொல்லியிருக்கும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsSource:kamakoti.org