Announcement

Collapse
No announcement yet.

kongani sambar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • kongani sambar

    இந்தியாவில் நிறைய மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பிரபலமான ரெசிபிக்கள் இருக்கும். அத்தகையவற்றில் மஹாராஸ்டிரா, கர்நாடகா மற்றும் கோவா மூன்று பகுதியின் சுவையும் கலந்து செய்யப்படும் ஒரு ரெசிபி தான் கொங்கன் ரெசிபி. இப்போது அந்த கொங்கன் ஸ்டைல் ரெசிபியில், கொங்கன் சாம்பார் மிகவும் பிரபலமானது. இது மற்ற சாம்பாரை விட வித்தியாசமான சுவையுடையது. சரி, இதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

    தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு - 1 கப் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் மல்லி - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் வர மிளகாய் - 4 பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் - 1/2 கப் (துருவியது) பீன்ஸ் - 8 (நறுக்கியது) கேரட் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) முருங்கைக்காய் - 2 (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை: முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 3 கப் தண்ணீர் விட்டு, 3 விசில் விட்டு இறக்க வேண்டும். அதே சமயம், மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, சீரகம், வர மிளகாய், வெந்தயம், மல்லி, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் அதில் கடலைப் பருப்பு மற்றும் துருவிய தேங்காய் போட்டு 4-5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும். பிறகு அதனைக் குளிர வைத்து, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு குக்கரை திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, நறுக்கிய காய்கறிகளான தக்காளி, பீன்ஸ், கேரட், முருங்கைக்காய் மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு, 2 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் கறிவேப்பிலையைப் போட்டு, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான கொங்கனி சாம்பார் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதத்துடன் பரிமாற வேண்டும்.
Working...
X