Announcement

Collapse
No announcement yet.

Pachchai pattaani idly.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Pachchai pattaani idly.

    காலை வேளையில் அலுவலகத்திற்கு செல்லும் நேரத்தில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், சற்று வித்தியாசமானதாகவும் சமைக்க வேண்டுமென்று நினைத்தால், அப்போது வீட்டில் பச்சை பட்டாணி, ரவை மற்றும் வெந்தயக்கீரை இருந்தால், எளிதில் சூப்பராக வித்தியாசமான சுவையில் ஒரு இட்லி செய்யலாம். இந்த இட்லி வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகளுக்கு பிடித்தவாறும் இருக்கும். இப்போது அந்த பச்சை பட்டாணி இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

    தேவையான பொருட்கள்: ரவை - 2 கப் (வறுத்தது) பச்சை பட்டாணி - 3/4 கப் (வறுத்து, லேசாக அரைத்தது) வெந்தயக்கீரை - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) தயிர் - 2 டீஸ்பூன் ஓட்ஸ் - 2 டீஸ்பூன் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு

    செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரவை, தயிர், வெந்தயக்கீரை, பட்டாணி, ஓட்ஸ், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க வைத்து, இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி, பாத்திரத்தில் வைத்து மூடி வைக்க வேண்டும். பிறகு 10 நிமிடம் கழித்து, இட்லிப் பாத்திரத்தை திறந்து இட்லிகளை எடுக்க வேண்டும். இப்போது வித்தியாசமான பச்சை பட்டாணி இட்லி ரெடி!!! இதனை புதினா சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
Working...
X