நம்முடைய இந்த உடம்பை மட்டுமே "நான்' என்று நினைத்துக் கொண்டிருப்பதனால் தான், இதை பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறையில் நம் உயிருக்கான நல்ல செயல்களைக் கோட்டை விட்டு விடுகிறோம். நம்முடைய இந்த உடம்பினைப் பற்றிய புத்தி போக வேண்டும். இதற்காகத் தான் உடம்பிற்கு சிரமம் தருகின்ற உபவாசங்களை சாஸ்திரங்கள் விதித்திருக்கின்றன.
* தினமும் தூங்குவதற்கு முன்பு இன்று ஏதாவது நல்ல செயல் செய்திருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். அப்படி ஏதும் செய்யாத நாளாக இருந்தால் மனம் வருந்த வேண்டும்.
* இயந்திரங்கள் தொடர்ந்து வேலை செய்தால் கெட்டுப் போய் விடுகின்றன என்று அவ்வப்போது ஓய்வு கொடுக்கிறோம். அதேபோல் விரதமுறைகள் வயிற்றுக்கும் ஓய்வு கொடுத்தால் தான், உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும்.
* பெருந்தீனி தின்பதும் கூடாது. பட்டினி கிடப்பதும் கூடாது. எப்போதும் தூங்கி வழியக் கூடாது. தூக்கமே இல்லாமல் விழிப்பதும் கூடாது. சாப்பாடு, பிரயாணம், உழைப்பு எல்லாவற்றையுமே அளவாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* தன் உடம்பு கொழுக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு உயிரின் உடம்பைக் கொலை செய்து உண்பவனிடம் எப்படி இரக்கம் இருக்கும் என்று கேட்கிறார் திருவள்ளுவர். புலால் உணவை வேண்டாம் என்று ஒதுக்குங்கள். சாத்வீகமான மரக்கறிகளை மட்டுமே உண்ணுங்கள்.
காஞ்சி பெரியவாள்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends