நம்முடைய வீடுகளில் பலவிதமான வடிவங்களில் கடவுளை வழிபாடு செய்கிறோம். கடவுளுக்கு இத்தனை பெயர்கள் உண்டா என்பதும், அவரின் உண்மைத் தன்மையை உணர இத்தனை வடிவங்கள் தேவையா என்பதும் நம் மனதில் சந்தேகமாகத் தோன்றும். உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள் உலகில் இல்லை. இருப்பவர் ஒருவர் தான். இன்னும் சொல்லப்போனால் நம் உயிரும் கூட அவரின் ஒரு வடிவம் தான். இவ்வுலகத்தை நடத்தும் பெரிய சக்தியாக இருந்து அவரே நம்மை வழிநடத்துகிறார்.
* நம் மண்ணில் தோன்றிய மகான்கள், ஒரே கடவுளையே பல வடிவங்களாக வழிபட்டு, அவரவருக்குரிய வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தி விட்டார்கள். இந்த முறைகள் அவர்களின் அனுபவத்தின் வாயிலாக கண்டறியப்பட்டவை. அம்முறைகளில் நமக்கு பிடித்ததைப் பின்பற்றினால் நாமும் அவர்களைப் போலவே, ஆண்டவனின் அருளைப் பெறமுடியும். நமது இஷ்டதெய்வ வழிபாட்டினைத் தொடர்ந்து செய்யும்போது, நமக்கென்று தனியான மனப்போக்கு தேவையில்லை என்ற நிலை உருவாகும். அப்போது, இருப்பது ஒரே கடவுள் தான் என்ற உறுதிநிலையைப் பெற்றுவிடுவோம்.
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
- காஞ்சிப்பெரியவர்
Bookmarks