ஒருவருக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் மற்றொருவருக்கு துக்கத்தைத் தருகிறது. எது நடக்கவேண்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அதுவே நடக்கிறது.
* வீட்டுக்குப் பயனற்ற பொருட்களை வாங்குவதால் பணமும், காலமும் விரயமாகிறது. எதை வாங்கினாலும் அவசியம் தேவையா என சிந்தித்து வாங்குங்கள்.
* மாதம் இரு முறையாவது வயிற்றுக்கு ஓய்வு கொடுக்க விரதம் இருங்கள். பெரும்பாலான வியாதிகளில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.
* பணத்தை மணியார்டர் அனுப்பினால் அதற்குரிய நபரைச் சென்று சேர்வது போல, சாஸ்திரப்படி பிதுர்தர்ப்பணம் கொடுக்கும் தண்ணீரும் வாழைக்காயும் நம் முன்னோருக்குரிய உணவாக மாறிவிடும். இதன்மூலம் அவர்களின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.
* கோபத்தை அடக்குதல் மிக கடினமானது. பேச்சளவில் கோபத்தை அடக்குவதாகச் சொல்லலாம். ஆனால், இடைவிடாத பயிற்சியால் மட்டுமே சாந்த குணத்தை அடைய முடியும்.
- காஞ்சிப்பெரியவர்


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends