சிரத்தை இல்லாமல் தானம் செய்து வீணான செயலாகும். தானம் பெறுபவரை அவமதிப்பாக எண்ணக் கூடாது. தன்னைப் பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணத்திலும் தானம் செய்யக் கூடாது.
* தானம் பெறுபவனும், தானம் கொடுப்பவனும் பக்தி உடையவர் களாக இருக்க வேண்டும். கடவுள் சிந்தனை இருந்தால் மட்டுமே தானம் முழுமையானதாகும்.
* பொய் சொல்பவன், பிறர் பொருளை அபகரித்தவன், சாஸ்திரங்களை மதிக்காதவன், கோபம் கொண்டவன் நன்றி மறந்தவன், நம்பிக்கை துரோகம் செய்தவன், பெற்றோரை மதிக்காதவன், ஒழுக்கமில்லாதவன் இவர்கள் அனைவரும் தானம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் ஆவர்.
* அநியாயமாக பிறரிடம் ஏமாற்றிப் பெற்ற பொருளில் ஒருபகுதியை தானம் செய்தால் பாவம் தொலையும் என்று எண்ணிச் செய்யும் தானம் பாவச் செயலாகும். தானம் செய்த பிறகு இப்படி பெரும் பணத்தை வீணாக பிறருக்கு கொடுத்து விட்டோமே என்று வருந்துவதும் பாவத்திலேயே அடங்கும். தானம் பற்றிய இந்த அறிவுரைகளை மகாபாரதத்தில் அசுவமேதயாகம் செய்ய முற்படும் தர்மபுத்திரரிடம் பகவான் கிருஷ்ணர் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.
அஹோபிலமடத்து ஜீயர் ஸ்வாமிகள்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks