அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய நன்மைகள் உள்ளன என்று தெரியும். அதிலும் பெரும்பாலான மக்கள், எலுமிச்சை சாப்பிட்டால், உடல் எடை மட்டும் தான் குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் அந்த பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளன. மேலும் இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் மற்றும் கூந்தலுக்கு நிறைய நன்மைகளைத் தருவதோடு, துணிகள் மற்றும் பாத்திரங்களில் இருக்கும் கறைகளை நீக்கவும் பயன்படுகிறது. எலுமிச்சை உடல் எடை மற்றும் முகப்பருக்களை குறைப்பதற்கு மிகவும் சிறந்த பழம் தான். ஆனால் இந்த நன்மைகளைத் தவிர, இந்த சிட்ரஸ் பழத்தில் வேறு என்ன நன்மைகள் உள்ளன, என்பதைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஎலுமிச்சையின் நன்மைகள்: * எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும். * செரிமானப் பிரச்சனை, வாயுப் பிரச்சனை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால், சரிசெய்துவிடலாம். வேண்டுமெனில் ஒமத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து குடித்தாலும், செரிமானப் பிரச்சனையை சரிசெய்யலாம். * இந்த எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தால், அவை உடலில் உள்ள ஆன்டிபாடிக்களை அதிகரித்து, தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும். * எலுமிச்சையின் ஒரு சிறந்த யாருக்கும் தெரியாத நன்மை என்று சொன்னால், அது எலுமிச்சை இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது என்பது தான். அதுமட்டுமின்றி, அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும். * பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால், எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், புரோஸ்ட்ரேட் அல்லது மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். * மேலும் எலுமிச்சை ஜூஸ், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, பொலிவற்று இருக்கும் சருமத்தையும் பொலிவாக்கும். எனவே எலுமிச்சை சாற்றை தினமும் பருகினால், அழகாக சருமத்தை பெறலாம்

lஎலுமிச்சை சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக சருமத்தில் பருக்கள் இருப்பவர்கள் பயன்படுத்தினால், விரைவில் அதனை நீக்கலாம். மேலும் பொடுகுத் தொல்லை மற்றும் இதர கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தினாலும், அந்த பிரச்சனைகளை தடுக்கலாம். இவையே எலமிச்சையின் நன்மைகள். வேறு ஏதாவது நன்மைகள் உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.