திருவடிவழகிய நம்பியாகிய எம்பெருமான் திரு அன்பில் என்ற இத்திருத்தலத்தில் திருச்சி அருகே எழுந்தருளியுர்.

அமைந்துள்ள இடம்: -
திருச்சி - கல்லணை வழியாக கும்பகோணம் பேருந்து வழியில் அமைந்துள்ளது. லால்குடிக்குக் கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. நடராஜபுரம் என்ற ஊருக்குப் போய் அங்கிருந்து 3/4 கி.மீ. தொலைவில் உள்ள அன்பில் ஊரை அடையலாம். தங்குவதற்கு வசதியான விடுதிகள் இல்லை. திருச்சியிலிருந்து கொண்டு பெருமானைத் தரிசித்து விட்டு வரலாம்.

மூலவர்: -
வடிவழகிய நம்பி. கிழக்கு நோக்கிய புஜங்க சயனம்.

தாயார்: -
அழகியவல்லி நாச்சியார்.

உத்ஸவர்: -
சுந்தரராஜப் பெருமாள்.

தீர்த்தம்: -
மண்டூக புஷ்கரிணி, கொள்ளிடம்.

விமானம்: -
தாரக விமானம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsசிறப்பு: -
பழைய காலக் கல்வெட்
மங்களாசாஸனம்: -
திருமங்கையாழ்வார் தமது ஒரு பாசுரத்தால் (2417) மங்களா சாஸனம் செய்துள்ளார்.

"நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத்தனா வான்" - நான்முகன் திருவந்தாதி