இங்கு மிகவும் சுலபமான முறையில் தீட்டு விஷயங்கள் விளக்கப் படுகிறது. மிகவும் நுணுக்கமான விஷயங்களை அறிய ஒரு நாள் அவகாசத்துடன் ஈமெயில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தீட்டு என்றால் என்ன? என்று கூட சிலர் கேட்கிறார்கள்.
தீட்டுக் காரியங்கள் நடக்கும் இடத்தின் மற்றும் பொருடக்களின் சம்மந்தம் ஆன்மீகம் மற்றும் விஜ்ஞான ரீதியாகவும்
விலக்கத் தக்கது என்பது கருத்து. ஆன்மீகம் தீட்டு என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது.
விஜ்ஞானம் ஹைஜீனிக் என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஎனவே ஆன்மீக ரீதியாக யார் யார் எவ்வளவு நாட்கள் பிறரிடமிருந்தும், வழக்கமான மேம்பாட்டு வழிமுறைகள்
நெறிமுறைகளிலிருந்தும் சில காரணங்களை உத்தேசித்து விலகி நிற்கச் சொல்கிறது.
உறவைக் கொண்டு அவர்களின் விலகி நிற்கவேண்டிய கால அளவை வெகு அழகாக நிச்சயித்துள்ளார்கள்.


உறவு உள்ள அளவிற்கு எங்களுக்கு நெருக்கமில்லை நாங்கள் ஏன் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்? என்று சிலர் கேட்கிறார்கள்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் கார் செல்லும் வழி, மோட்டார் சைக்கிள் செல்லும் வழி, பஸ் செல்லும் வழி,
கனரக வாகனங்கள் செல்லும் வழி, நடந்து செல்லும் வழி என பாதையைப் பகுத்து வைத்து இந்தந்த பாதையில் செல்வோர்
இன்னின்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளார்கள். காரில் செல்பவன் தனக்குள்ள பாதையை விடுத்து
மற்ற பாதையில் சென்று கொண்டு நான் நடந்து செல்லவில்லையாதலால் எனக்கு அந்தவிதி பொருந்தாது என்று கூறி
அவனுடைய வேகத்திற்குச் செல்லமுடியாது.
அதுபோல, இந்த உறவு இருப்பவர்களுக்கு இந்த அளவு நெருக்கம் இருக்கும் இருக்கவேண்டும் என்பது பொது விதி.
அப்படி நெருக்கம் இல்லாதது விதிசெய்தவன் குற்றமல்ல. இதுபோன்ற விதிவிலக்குகளுக்காக வேண்டி விதியை மாற்றி அமைக்க முடியாது.

மேலும் ஒன்று இங்கு கவனிக்கத் தக்கது:
உயிருடன் உள்ள ஒரு மனிதன் வேண்டுமானால் நெருக்கம் இல்லாத பந்துக்களிடத்தில் அண்டாமல் விலகி இருக்கலாம்,
உடலைப் பிரிந்த ப்ரேத ரூபியாக உள்ள ஆத்மா எங்கும் வியாபிக்கும் தன்மை உள்ளது.
அந்த ஆத்மாவிடம் பகைமை பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை.
குறிப்பிட்ட நாள் தீட்டு அநுட்டித்தால்தான் மேற்கொண்டு தாங்கள் செய்யக்கூடிய பூஜை, புநஸ்காரங்கள், புண்ணிய காரியங்களுக்கு
பலன் உண்டாகும். இந்த மாதிரி விஷயங்களில் அலட்சியம் செய்துவிட்டு, ஹோம் செய்தேன், பூஜை செய்தேன், அர்சனை செய்தேன்
பலன் வரவில்லை என்று புலம்புவதில் பொருள் இல்லை. இம்மாதிரியான காரியங்களில் தவறவிட்ட கடமைகளால் ஏற்படும்
தோஷங்கள் பெருமளவு புண்ணிய பலன்களை அடையவொட்டாமல் செய்துவிடும்.

எனவே (உறவு முறையில்) நெருக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உறவுமுறையுடன் பிறந்து தொலைத்த காரணம் கருதி
விதிப்படி அநுட்டிப்பதே விவேகமாகும்.