பெரியவாளையே, தன் வாழ்க்கையாக, சத்குருவாக, தோழராக, யஜமானராக பல வழிகளில் வழிப்பட்டு சதா அவரயே சிந்தயில் நிறுத்தி வழிபட்ட செல்லம்மா பாட்டிக்கு அவர் செய்த அருளை பார்ப்போம்.

ஒரு முறை பெரியவா திருவாரூரிக்கு வருகை புரிந்திருந்தார், பாட்டிக்கு பெரியவாளுக்கு பாதபூஜை செய்ய ஆவல். வருமானம் ஏதும் இல்லாத பாட்டி தான் அக்காள் மகனிடம் ரூ.200 கடனாகக் கேட்கிறார், அவர் இல்லை என்று கூற பாட்டி, மனம் நொந்து கண்ணீர் சிந்தி இறைவனை மானசீகமாக கேட்கிறார்.

பகல் ஸ்வப்பனத்தில் ஒரு குட்டையான மனிதர் வேஷ்டி, அங்கவஸ்த்திரம் தரித்து, உனக்குப் பணம்தானே வேண்டும், கட்டாயம் தருகிறேன் என்று கூறி மறைந்து விட்டார். பகல் ஸ்வப்பனம் பலிக்காதே என்ற கவலையோடு மீண்டும் இறைவனிடம், தன் எண்ணம் ஈடேறும் வரை ஆகாரம் எடுக்காமல் தியானத்திலேயே இருக்கிறார்.

அப்பொழுது அவர் அக்காள் மகன், பெரியம்மா உனக்கு மணி ஆர்டர் வந்திருக்கிறது என்று கூறினார். அனுப்பியது யார் என்ற விவரம் அதில் இல்லை, பாட்டி புரியாமல் திகைத்தார். பெரியாவா தன் ஆசையை நிறைவேற்றச் செய்த ஆச்சரியத்தை எண்ணி பாட்டி ஆனந்த கண்ணீர் விட்டார். உடனே ஸ்ரீ மடத்தில் பணத்தைக் கட்டி, பாதுகா புஜை செய்து பேரானந்தம் அடைந்தார்.

ஆனால் பணம் அனுப்பியது யார் என்று கடைசி வரை தெரியவில்லை.

Source:Kannan