மருந்து:
நாம் உட்கொள்ளும் மருந்தை பிறர் பார்க்கும்படி சாப்பிடக்கூடாதா?
ஆம் அது மட்டுமல்ல.காரணமில்லாமல் தனக்கு உள்ள சொத்து ,கடன்,வயது,உபதேசமான மந்த்ரம்,ஏற்ப்பட்ட அவமானம்,குடும்ப ரகசியம்,தானம்,சமாகமம் சித்தம்,ஆகிய ஒன்பதையும் பிறரிடம் கூறக்கூடாது.ஆனால் தாய்,தகப்பன்,குரு இவர்களிடம் மறைக்கக்கூடாது .

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends




தேசிய கீதம்:
தற்போது ஜனகனமன மற்றும் வந்தே மாதரம் என்பது தேசிய கீதமாக உள்ளது.ஆனால் பழமையான நமது தேசத்திற்கு ஏற்கனவே எதாவது இருந்துள்ளதா?
மிகவும் அழகிய தேசிய கீதம் வேதத்தில் காணப்படுகிறது."அப்ப்ரஹ்மன் பரமனே ப்ரஹ்மவர்சசீ ஜாயதாம் " என்று துவங்கும் பகுதியே அது.இதன் பொருள்:"இந்த தேசம் முழுவதும் பிரம்ம தேஜஸ் உள்ள வேதமறிந்தவர்கள் உண்டாக்கட்டும் .இந்த நாட்டில் அரசர்களும்,ஆயுதங்களும் வீர்ய சௌர்யமும் உண்டாக்கட்டும்.பசுக்கள் பெருகட்டும் .பெண்கள் நாகரீகமாக திகழட்டும்.பருவம் தோறும் மழை பெய்யட்டும் .மரங்கள்,செடிகள்,பயிர் பச்சை வளருட்டும்.நமது நாட்டில் வுள்ள எல்லோரின் யோகஷேமம் வளர்ச்சி அடையட்டும்."


அபிஷேகம் :
அபிஷேக காலங்களில் கோவில்களில் சிலர் தங்கள் தங்க நகைகளை விக்ரஹத்திற்கு சாத்தி மீண்டும் வாங்கி கொள்கிறார்கள். இது சரியா?
இது தேவை இல்லை ஆனால்இதில் தவறும் கிடையாது.தங்கத்திற்கு தோஷம் இல்லை. தான் அணிந்த நகைகளை பகவானுக்கு சாத்தி,அர்பணித்து மீண்டும் அணிவது என்பது நமது சம்ப்ரதாயித்தில் சிலரிடம் உண்டு


கடி சூத்ரம் :
அரணாக்கயிறு சிறு குழைந்தைகளுக்கு கட்டும் பழக்கம் நம்மிடம் வுள்ளது.பெரியோர்களும் கட்டிக்கொள்ளலாமா?
வயது வித்தியாசம் இல்லாமல் ஆண்கள் யாவரும் இதை கட்டிக்கொள்ளலாம்.இதை "கடிசூத்ரம்" என்பார்கள் .மிகவும் மகிமை வாய்ந்தது .